வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆதலினால் பகலில் தூங்குவீர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

ஆதலினால் பகலில் தூங்குவீர்!உங்கள் மூளைத் திறனை அதிகரிக்க வேண்டுமா? மதியம் சிறிது நேரமாவது துாங்குங்கள்! அப்படித்தான் சொல்கிறது, பிரிஸ்டல் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வு. 'தி ஜர்னல் ஆப் ஸ்லீப் ரிசர்ச்' இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வின்படி, ஒருவர் பகலில் சற்று நேரம் துாங்குவது, அவரது தகவல் அலசும் திறனை அதிகரிக்கும்.


விஞ்ஞானிகள், 16 பேருக்கு, இரண்டு வகை விளையாட்டை கொடுத்தனர். அதில், ஒரு தரப்புக்கு மட்டும், ஒரு விளையாட்டை விளையாடிவிட்டு, 90 நிமிடங்கள் குட்டித் துாக்கம் போட்டுவிட்டு வரும்படி, கேட்டுக் கொண்டனர். அப்படித் துாங்கிவிட்டு வந்தவர்கள், விளையாட்டில் அதிக மதிப்பெண் வாங்கினர்.(தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!நாம் விழித்திருக்கும் போது, நம் விழிப்புணர்வுக்கு அப்பாலும், பல தகவல்களை உள்வாங்குகிறோம். அத்தகைய தகவல்களை, குட்டித் துாக்கம் போடும்போது மூளை அலசி, பகுத்து, தன் நினைவுக் கிடங்கில் பதிய வைக்கிறது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் தான், குட்டித் துாக்கம்  போட்டு வந்தவர்கள், விளையாட்டில் அதிக மதிப்பெண் பெற்றனர் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
நினைவாற்றல், மன ஒருமைப்பாடு, நல்ல மனநிலை, படைப்புத் திறன் போன்றவை துாக்கத்தால் வளம் பெறுவதை, ஏற்கனவே பல ஆய்வுகள் நிறுவியுள்ளன. இப்போது, விழிப்புணர்வுக்கு அப்பாற்பட்ட தகவல்களையும் உள்வாங்கி, தக்க சமயத்தில் பயன்படுத்த, குட்டித் துாக்கம் உதவுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment