வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.! கண்டுபிடித்து அசத்திய தமிழக இளைஞன்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 12, 2018

1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.! கண்டுபிடித்து அசத்திய தமிழக இளைஞன்.!



நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக ரூ.82க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இடங்களை பொறுத்து ஒரு ரூபாய் வரை மாற்றம் காணும். மேலும் ஒவ்வொரு நாளும் ஆமை வேகத்தில் பெட்ரோல் விலை இறக்கம் காணும். ஆனால் முயல் வேகத்தில் பெட்ரோல் விலை உச்சத்தை எட்டும். இது பல நடுத்தர மற்றும் ஏழை எளியவர்களை அல்லோல் பட வைத்து விடும். இன்று நம் நாட்டில் இந்த நிலைமை தலை தூக்கி இருக்கின்றது. பெட்ரோலுக்கு நாம் மாற்று எரிபொருளாக மூலிகை பெட்ரோல் மற்றும் எத்தனாலை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றோம்.


நள்ளிரவு முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.150 என்றால் கூடவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எண்ணெண்ணை நிறுவனங்களே பெட்ரோல் விலையை தீர்மானிப்பதால் நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். நம்மலை போல ஏழை குடும்பங்களை காப்பற்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து அசத்தியுள்ளார். கையை கடிக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து நம்மை காக்க ஆபத்து பாண்டவராக மாணவன் முருகன் உதித்துள்ளார் என்பது மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதுவும் ஒருலிட்டர் தண்ணீரில் 45 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் கொடுக்கின்றது.


ஐடிஐ மாணவன்: 
மாணவன் முருகன் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக தண்ணீரை பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். இவரது கண்டுபிடிப்பு நமக்கே ஆச்சரியமூட்டுகின்றது. இவர் ஐடிஐ 2ம் ஆண்டு படித்து வருகின்றார். ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன் என்பது பலருக்கும் தெரிந்தராத உண்மையாக இருக்கின்றது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சொந்த ஊர்: 
முருகனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் ரெங்சாமிபுரத்தை சேர்ந்தவர். முருகனின் தாய் தந்தை கூலி தொழிலாளியாக இருக்கின்றனர். இவருக்கு உடன் பிறப்புகளும் கூலி தொழிலாளர்களாக இருக்கின்றனர். இப்படி வறுமையில் வளர்ந்தாலும், இவரின் வான் உயர்ந்த எண்ணம் தான். இன்று கண்டுபிடிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. இந்த வள்ளுவரின் குறலே இவரின் புதிய கண்டுபிடிப்பும் துணை நின்று உள்ளது எனவும் கூறலாம்.

ஹேக்கத்தான்: 
தொழில்நுட்ப ஆர்வலர்களை ஓரிடத்தில் திரளச் செய்து, நகர்ப்புறத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண, மென்பொருள், செயலி போன்றவற்றை உருவாக்க தூண்டும் போட்டியே ஹேக்கத்தான். இதில் மாணவன் முருகன் இந்த போட்டியில் தனது பைக் உடன் கலந்து கொண்டார். அப்போது இவரை பற்றி பெரிதாக தெரியவில்லை. இது கோவையில் நடந்தது.


சுடர் விளக்காயினும் தூண்டு கோல்:  
சமீபத்தில் கனவு ஆசிரியர் விருது பெற்ற முகம்மது பிரேம் ரோஸ் சார்தான் நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கும் என் சக மாணவர்களுக்கும் அறிவியலில் வழிகாட்டியாக செயல்பட்டார். ஆகையால் சிறுவயதிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் எட்டாம் வகுப்பிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன்.

கண்டுபிடிப்புகள்: 
வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில்தான் என் கவனம் செல்லும். அப்படி உருவானதுதான் தண்ணீரில் செல்லும் சைக்கிள் படகு, வீடார் கருவி, காது கேளாதவர்களுக்கான கருவி போன்றவை.

கடலை பிரிக்கும் இயந்திரம்: 
இக்கண்டுபிடிப்புகள் பள்ளி அளவில் எனக்கு பல பரிசுகளை வாங்கித் தந்தன. மேலும் ‘யங் சயின்டிஸ்ட் 2017-18' போட்டியில் கலந்துகொண்டபோது எனது கண்டுபிடிப்பான விவசாயிகளுக்கு உதவும் எளிய முறையில் கடலை பிரிக்கும் இயந்திரம் முதல் பரிசை வென்றது.


மாற்று எரிபொருள் முனைப்பு: 
பெட்ரோலுக்கு முற்றிலும் மாறான ஒரு எரிபொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். என்னிடம் டூ விலர் இல்லாததால் இரண்டு வருடம் தண்ணீரை எப்படி மாற்று எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்து ஆயத்தமானேன் என்கிறார் முருகன்.

அப்பா வாங்கி கொடுத்த டூவீலர்: 

ஆறுமாதத்திற்கு முன் என் அப்பா செகண்ட் ஹேண்ட் டூ விலர் ஒன்றை வாங்கி தந்தார். அந்த பைக்கையே சோதனைக் கருவியாக கொண்டு தண்ணீரில் இயங்கும் பைக்கை வடிவமைத்தேன்'' எனக் கூறும் முருகன் தன் கண்டுபிடிப்பு வாகனம் செயல்படும் விதம் குறித்து விளக்கினார்.

சோலார் பேனல் உதவி: 
தண்ணீரில் இயங்கும் வகையில் சோலார் பேனலுடன் இணைக்கப்பட்ட பேட்டரி, தண்ணீர் சேமிக்க கேன் என எனது பைக்கில் பல மாற்றங்கள் செய்தேன். ஸ்டார்ட் செய்ய மட்டும் சிறிது பெட்ரோல் தேவைப்படும். பின் பைக்கின் ஒரு புறம் வைத்துள்ள கேனில் ஒரு லிட்டர் தண்ணீருடன், 200 கிராம் சாதாரண உப்பு போட்டு கலக்க வேண்டும். பைக் ஸ்டார்ட் ஆனவுடன் பவர் சப்ளை தண்ணீருக்கு செல்லும். உப்பு கலந்த தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் தனித்தனியாக பிரியும்.


40 கி.மீ வரை ஓடுகின்றது: 
ஆக்ஸிஜன் வெளியேற, ஹைட்ரஜன் எஞ்சினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பைக்குகளைப்போல் இதிலிருந்து எந்த நச்சுப் புகையும் வெளியேறாது. மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லும். ஒரு லிட்டர் தண்ணீரில் 40 கி.மீ வரை ஓடும். அதன் பிறகு கழிவாக மாறிவிடும் அந்த தண்ணீரை மாற்றிவிட வேண்டும்.

முழுமையாக தண்ணீரில் இயக்குவேன்:
 விரைவில் சோலார் மற்றும் பேட்டரியை அகற்றிவிட்டு, பெட்ரோல் டேங்கில் தண்ணீரை ஊற்றி ஓட்டும் வகையில் மாற்றி அமைக்க உள்ளேன்'' என்று ஆர்வமுடன் கூறும் முருகன் ‘‘தி நோபல் அறிவியல் மன்றம்'' எனும் பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுகள் மற்றும் சமூக சேவைகள் செய்துவருகிறார் மாணவன் முருகன்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment