வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அரைமணி நேரம்தான், திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது!'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 18, 2018

அரைமணி நேரம்தான், திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது!'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்திருட்டு ஐபோன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்களை அரைமணிநேரத்தில் யாரும் கண்டுபிடிக்காத முடியாதவகையில் மாற்றிவிடுவேன்' என்று ஏழாம் கிளாஸ் படித்த அப்துல் ரகுமான் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.  


செல்போன் திருட்டு என்பது சென்னையில் சர்வசாதாரணமாகிவிட்டது. செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் `செல்போன் மாயம்' என்று போலீஸார் மனு ஏற்புச் சான்றிதழ் கொடுக்கின்றனர். புகார் கொடுத்தாலும் 90 சதவிகிதம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்படுவதில்லை. செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள் சில நாள்கள் புலம்பிவிட்டு புதிய செல்போனை வாங்கியதும் தொலைந்துபோன செல்போனை மறந்துவிடுவதுண்டு. சென்னையில் செல்போன் திருட்டைத் தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் செல்போன் திருடர்களுக்குக் கடிவாளம் போடமுடியவில்லை. இந்தச் சூழலில்தான் தி.நகர் துணை கமிஷனர் டாக்டர் கே.பிரபாகர் மேற்பார்வையில் எஸ்.ஐ.வெங்கடேசன் தலைமையிலான போலீஸ் டீம் துரிதமாகச் செயல்பட்டு திருட்டு செல்போன்களை சர்வசாதாரணமாக சென்னை பர்மா பஜாரில் விற்றுவந்த அப்துல்ரகுமானை கைது செய்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அவரிடமிருந்து 50 ஐபோன்கள், 70 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அப்துல்ரகுமானை எப்படிக் கைது செய்தோம் என்பதை நம்மிடம் விவரித்தனர். சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் திருட்டுப் போனதாக சமீபத்தில் ஒருவர் புகார் கொடுத்தார். அந்த ஐபோனின் ஐஎம்இஐ நம்பரைக் கொண்டு செல்போனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். ஐபோன் புகாரைத் தவிர செல்போன் திருட்டு குறித்து புகார் கொடுத்தவர்களின் ஐஎம்இஐ நம்பர்களையும் நாங்கள் கண்காணித்துவந்தோம். இந்தச் சமயத்தில்தான் திருட்டுப்போன ஐபோனின் ஐஎம்இஐ நம்பரிலிருந்து எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது.


அந்த எஸ்.எம்.எஸ் மூலம் துப்பு துலக்க ஆரம்பித்தோம். எஸ்.எம்.எஸ். வந்த புதிய செல்நம்பரின் முகவரியைக் கண்டறிந்தோம். கொடுங்கையூரைச் சேர்ந்த அந்த நபரிடம் விசாரித்தபோது, பர்மா பஜாரில் அப்துல் ரகுமான் என்பவரிடம் ஐபோனை வாங்கியதாக அவர் தெரிவித்தார். இதனால், அப்துல் ரகுமானை ரகசியமாகக் கண்காணித்தோம். அவரிடம் ஏராளமான ஐபோன்கள் விலைஉயர்ந்த செல்போன்கள் இருந்தன. இதனால் வாடிக்கையாளரைப் போல அப்துல் ரகுமானிடம் ஒரு ஐபோனை விலைக்குக் கேட்டோம். அவருக்கு நாங்கள் போலீஸ் என்று தெரியாததால் ஐபோனுக்குரிய விலையைக் கூறினார். அது, மார்க்கெட்டைவிட குறைவாக இருந்தது. எப்படி உங்களால் மட்டும் குறைந்த விலைக்கு ஐபோனை விற்க முடிகிறது என்று கேட்டோம். அதற்கு அவர், ஐபோன் இந்த விலைக்கு வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள், தேவையில்லாதவற்றைப் பேச வேண்டாம் என்று கூறினார். அதன்பிறகு அவரிடம் ஐபோனை வாங்கியதோடு சைபர் கிரைம் போலீஸார் மூலம் அதை ஆய்வு செய்தோம். அப்போது அந்த ஐபோனின் ஐஎம்இஐ நம்பர் மாற்றியிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து மீண்டும் அப்துல் ரகுமானை விசாரணைக்காக அழைத்துவந்தோம். அவரின் கடையிலிருந்த 50 ஐபோன்கள், 70 விலை உயர்ந்த போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன் மற்றும் செல்போன்களில் ஐஎம்இஐ நம்பர்கள் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்துல் ரகுமானை கைது செய்தோம்" என்றனர். செல்போன்கள் திருட்டுப்போனால் அதைக் கண்டுபிடிக்க ஒரே வழியாக போலீஸார் கருதுவது ஐஎம்இஐ நம்பர்தான். ஒவ்வொரு செல்போன்களுக்கும் ஒரு ஐஎம்இஐ நம்பர் இருக்கும். இரண்டு சிம்கார்டு பயன்படுத்தும் செல்போன் என்றால் அதற்கு இரண்டு ஐஎம்இஐ நம்பர்கள் இருக்கும். ஐபோன் போன்ற விலை உயர்ந்த செல்போன்களில் பாதுகாப்பு வசதிகள் அதிகம். அந்த ஐபோனில் உள்ள ஐஎம்இஐ நம்பர்களையும் அப்துல்ரகுமான் எளிதாக மாற்றியுள்ளார். இத்தனைக்கும் அவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்புதான். ஐஎம்இஐ நம்பர் மாற்றப்படுவது குறித்து அப்துல்ரகுமானிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது செயல்விளக்கம் கொடுத்துள்ளார். அதைப்பார்த்து போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.


சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் திருடப்படும் செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கும் அப்துல்ரகுமான், சாப்ட்வேரைப் பயன்படுத்தி முதலில் செல்போனின் லாக்கை திறப்பாராம். பிறகு, ஐஎம்இஐ மூலம் திருட்டு செல்போனைக் கண்டுபிடிக்காமலிருக்க புதியதாக ஐஎம்இஐ நம்பரை டவுன்லோடு செய்வாராம். அதன்பிறகு யார் நினைத்தாலும் திருட்டு செல்போனைக் கண்டுபிடிக்க முடியாதாம். அப்துல் ரகுமான் கையில் திருட்டு செல்போன் கிடைத்ததும் அரைமணி நேரத்தில் அது புதியபோனாக மாறிவிடும் என்கின்றனர் போலீஸார். ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோனை மிகக் குறைந்தவிலைக்கு வாங்கும் அப்துல்ரகுமான், அதைப் புதிய போனாக மாற்றியபிறகு மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு விற்றுவிடுவாராம். இந்தவகையில் அவருக்கு அதிகளவில் வருமானம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் சொகுசாக வாழ்ந்துள்ளார். இவரின் சகோதரர் ஒருவர் திருட்டு லேப்டாப்களை புதியதாக மாற்றி விற்பதில் கில்லாடியாம். கைதான அப்துல்ரகுமானை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


அப்துல் ரகுமானிடம் யார், யாரெல்லாம் திருட்டு செல்போன்களை விற்றார்கள், அதுபோல அவரிடம் செல்போன் வாங்கியவர்கள் யார் என்ற பட்டியலையும் போலீஸார் சேகரித்துவருகின்றனர். அதோடு அவரின் கடையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அப்துல்ரகுமானுக்கு உடந்தையாக சிலர் உள்ளனர். அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment