வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அண்டாவில் முக்கி பெற்ற குழந்தைகளை மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்.. கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

அண்டாவில் முக்கி பெற்ற குழந்தைகளை மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்.. கைது


அண்டாவுக்குள் மூழ்கி பெத்த குழந்தைகளையே கொன்ற கொடூர தாயை பண்ருட்டி போலீசார் கைது செய்துள்ளனர். கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சிலம்பரசன் - ஜெயசித்ரா. கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது. 4 வயதில் மிதுன், 7 மாதத்தில் லக்‌ஷன் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அண்டாவில் முக்கினார்
 கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லக்‌ஷன் வீட்டில் இருந்த அண்டா தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான். இதையடுத்து ஜெயசித்ரா தலைமறைவானார். பிறகு போலீசார் அவரை கண்டுபிடித்து விசாரித்தனர். அதற்கு ஜெயசித்ரா, "குழந்தை அண்டாவில் தெரியாமல் தவறி விழுந்து இறந்துவிட்டது... என் மேல சந்தேகப்பட்டு கோபப்படுவார்கள் என்றுதான் தலைமறைவாகி விட்டேன்" என்று சொன்னார். இதனால் போலீசாரும் சிலம்பரசனும் பெரிதாக்காமல் இந்த சம்பவத்தை விட்டுவிட்டனர். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

வாஸ்து சரியில்லை 
இதையடுத்து, ஜெயசித்ரா, "இந்த வீடு சரியில்லை, வாஸ்துப்படி இல்லாததால்தான் நம் மகன் இறந்துவிட்டான், அதனால் வேற வீடு மாத்தலாம்" என சிலம்பரசனை தொந்தரவு செய்துள்ளார். அதன்படியே சிலம்பரசனும் மனைவி மற்றும் மகன் மிதுனை கூட்டிக் கொண்டு பனங்குப்பம் பகுதியில் குடியேறினார். மகனை ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜியும் சேர்த்துவிட்டார்.


ஸ்கூலுக்கு வரவில்லை
 சம்பவத்தன்று, சிலம்பரசன் வேலைக்கு போய்விட, ஜெயசித்ரா, வீட்டில் மகன் மிதுடனுடன் தனியாக இருந்திருக்கிறார். அப்போது மிதுன் கூஸ்லுக்கு வரவில்லை என்று சிலம்பரனுக்கு நிர்வாகம் தரப்பில் போன் செய்து தகவல் அளிக்கப்பட்டது. மகன் ஏன் ஸ்கூலுக்கு போகவில்லை என்பதை அறிய வீட்டு ஹவுஸ் ஓனருக்கு சிலம்பரசன் போன் செய்தார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, வீட்டில் யாருமே இல்லையே என்று சொல்லிவிட்டனர்.


அண்டாவில் சடலம் 
  இதை கேட்ட சிலம்பரசன், தன் அப்பா-அம்மாவை கூப்பிட்டு வீடு வரைக்கும் என்ன நிலைமை, 2 பேரும் எங்க போயிருக்காங்க என்று பார்த்து வரும்படி சொன்னார். அதன்படியே பெற்றோரும் வீட்டுக்கு வந்து பார்த்தால், பாத்ரூமில் உள்ள தண்ணீர் தொட்டியில் மிதுன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ந்தனர். ஆனால் மருமகளை காணவில்லை என்பதால் அவர்தான் மகனை கொன்றிருக்க வேண்டும் என்று வளவனூர் போலீசில் புகார் அளித்தனர்.


மேல்மருவத்தூர் 
தலைமறைவாகி இருந்த ஜெயசித்ராவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவரது செல்போன் நம்பர்களை வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் 2 குழந்தைகளையும் கொன்ற ஜெயசித்ரா மேல்மருவத்தூர் அருகே ஒளிந்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காரணம் என்ன? 
உடனடியாக விரைந்து சென்ற போலீசார் பதுங்கியிருந்த ஜெயசித்ரா மற்றும் அவருக்கு துணையாக இருந்த அவரது பெற்றோரை கைது செய்தனர். அவர்களிடம் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பெத்த குழந்தைகளை தாயே இப்படி கொடூரமாக கொன்றது ஏன்? பின்னணி நிலவரம் என்ன என்பதெல்லாம் இனி வரும் விசாரணையில்தான் தெரியவரும். ஆனால் மூன்றே மாத இடைவெளியில் அடுத்தடுத்து 2 குழந்தைகளையும் பறிகொடுத்த சிலம்பரசனை யாராலும் தேற்ற முடியவில்லை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment