வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ்ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஓவியா. மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், யாமிருக்க பயமேன் ஆகியவை அவரது நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.


டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகி சமூக வலைத்தளத்தில் ஓவியாஆர்மி என்று தொடங்கும் அளவுக்கு ரசிகர்கள் சேர்ந்தனர். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இருவரும் பிக்பாஸ் அரங்கில் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினர். ஆனால் ஆரவ் திடீரென்று ஓவியாவுடன் காதல் இல்லை என்று மறுத்தார். இதனால் மனம் உடைந்து பிக்பாஸ் அரங்கின் நீச்சல் குளத்தில் குதித்து ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது.


ஆனால் தற்போது ஓவியாவும் ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment