வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உருகி உருகி காதல்.. கறந்தே கழுத்தறுத்த காதலி.. நெல்லையில் ஒரு பரிதாப இளைஞர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

உருகி உருகி காதல்.. கறந்தே கழுத்தறுத்த காதலி.. நெல்லையில் ஒரு பரிதாப இளைஞர்!பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறார்.. அதனால்தான் அவரது அழகில் மயங்கி எல்லாத்தையும் பறிகொடுத்து இன்று கதறி நிற்கிறார் அந்த இளைஞர்!! நெல்லை மாவட்டத்தில் உள்ளது தளபதி சமுத்திரம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் உமா. நாகர்கோவிலில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். 
அங்குதான் சோதிரிராஜா என்பவரும் என்ஜினியராக உள்ளார். இருவரும் ஒரே ஆபீஸ். அதனால் லவ் ஈசியாகவே பற்றிக் கொண்டது. ரெண்டு பேரும் ஊரெல்லாம் சுற்றினார்கள். இப்படியே 5 வருடங்கள் பறந்தன. கல்யாணமும் பண்ணிக்க முடிவு பண்ணினார்கள். ஆனால் நடுநடுவே, "என் குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது" என்று சொல்லி சொல்லியே இளைஞரிடம் பணத்தை கறந்துள்ளார் உமா.


மாத சம்பளம்  
கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுதானே என்று நினைத்து இளைஞரும் கணக்கு வழக்கில்லாமல் செலவழித்தும், கேட்டபோதெல்லாம் பணம், நகை என கொடுத்தும் வந்துள்ளார். இது இதோடு நிற்கவில்லை... உமாவை பொண்டாட்டி என்றே முடிவு செய்துவிட்டதால், தன் மாச சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தன் அக்கவுண்ட்டிலிருந்து உமாவின் அக்கவுண்ட்டுக்கு கிடைக்கும்படி இளைஞர் வழி செய்துவிட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
வங்கி கணக்கு
ஆக மொத்தம் இளைஞர் உமாவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்று பார்த்தால், 4 சவரனில் 4 தங்க வளையல் கிஃப்ட் தந்திருகிகிறார். மாசமாசம் தனியாக பணம் வேறு பேங்கிலிருந்து போய் கொண்டிருக்கிறது. கட்டிக்க போற பொண்ணு என்று 9 சவரனில் தாலி வாங்கி உமாவிடம் கொடுத்துள்ளார். இப்படியே கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேலே உமா இளைஞரிடம் கறந்து விட்டார்.


என்ன காரணம்?
இது எப்போது பிரச்சனையாக மாறியது என்றால், இந்த மாசம் 1-ந் தேதியியில் இருந்து உமா காதலனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதை இளைஞரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதனால் ஏன் என்கிட்ட முன்னமாதிரி பேசுவதில்லை என்று கேட்டார். அதற்கு உமா, இவ்வளவு காலம் சொல்லாத காரணமான சாதியை சொல்லியுள்ளார். இதைக் கேட்டதும் இளைஞருக்கு முதல் ஷாக்!

முதல் ஷாக் 
உமா தொடர்ந்து இளைஞரிடம்,"நீ வேற சாதி, நான் வேற சாதி, வீட்டில எவ்வளவோ சொல்லி பார்த்தேன். உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்றார். இதை கேட்டதும் இளைஞருக்கு இரண்டாவது ஷாக்!


2-வது ஷாக் 
அதிர்ச்சியில் நின்ற காதலனிடம் உமா, "நான் என்ன பண்ணட்டும்.. போராடி விட்டுட்டேன். இப்போ எனக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து, ரிஜிஸ்டர் கல்யாணமும் ஆகிவிட்டது" என்றார் கூலாக.

3-வது ஷாக் 
இப்போது மூன்றாவது ஷாக்கில் நின்ற இளைஞர் பித்து பிடித்தபடி நின்றார். இது எதையுமே நம்ப முடியவில்லை இளைஞரால். எதேச்சையாக நெல்லையில் ஒரு ஹோட்டலுக்கு இளைஞர் சென்றபோது, அங்கே ரிசப்ஷனில் உமா இன்னொருவருடன் ஜோடியாக சிரித்தமேனிக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.


போன் நம்பர் மாற்றினார் 
இதை பார்த்து அதிர்ந்து போன இளைஞர், கண்கலங்கியும், ஆத்திரமும் அடைந்தார்! பின்னர் உமாவிடம் சென்று, இதுவரை நான் கொடுத்த பணம், நகைகளை திருப்பி கொடு என்றார். அதற்கு உமா, பிறகு கண்டிப்பாக தந்துவிடுகிறேன் என்று சொன்னவர்தான்... போன் நம்பரை மாத்தி கொண்டு எஸ்கேப் ஆனதுதான் மிச்சம்.


மற்றொரு லவ் 
இருந்தாலும் மனசே ஆறவில்லை இளைஞருக்கு.. அதனால் உமா சம்பந்தமான விஷயங்களை சேகரிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தெரிந்தது, உமாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கவில்லை... இளைஞர் இருக்கும்போதே உமா இன்னொருவரை லவ் பண்ண ஆரம்பித்துவிட்டார்.

வள்ளியூர் ஸ்டேஷன்
அந்த 2-வது காதலன் பெயர் பரமசிவன். காதலையும் நாசம் செய்து, பணம், நகைகளையும் மோசடி செய்ததால் இளைஞரக்கு ஆத்திரம் தாங்கமல் பரமசிவனிடமே விஷயத்தை கொண்டு போய்விட்டார். அதற்கு பரமசிவன் இளைஞரை மிரட்டியே திருப்பி அனுப்பி விட்டார். இதற்கு பிறகுதான் இளைஞர் நேராக வள்ளியூர் ஸ்டேஷனில் போய் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை  
இதுவரை உமாவுக்கு என்னவெல்லாம் செலவு செய்திருக்கிறார், பேங்க் கணக்கு உள்ளிட்ட எல்லாவற்றையும் தந்திருக்கிறார். இதனையடுத்து போலீசார் உமாவையும், பரமசிவனையும் அழைத்து விசாரித்தால் நடந்தது எல்லாம் உண்மை என தெரியவந்தது.

ஏமாந்த இளைஞர் 
அப்பறம் என்ன? பரமசிவனும், உமாவும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள். உண்மையாக உருகி உருகி காதலித்து, தாலி வரை வாங்கி வைத்த அன்பு உள்ளம் கொண்ட இளைஞர் இன்று ஏமாந்து நிர்க்கதியாக நின்று கொண்டிருக்கிறார்!!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment