வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாணவர்களுக்கு காய்ச்சலா? தலைமையாசிரியருக்கு உத்தரவு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

மாணவர்களுக்கு காய்ச்சலா? தலைமையாசிரியருக்கு உத்தரவு


பள்ளி மாணவ, மாணவியர், காய்ச்சலால் விடுப்பு எடுத்தால், உடனடியாக உள்ளாட்சி அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டுமென, தலைமையாசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
திருப்பூர் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட்டாலும், சாதாரண காய்ச்சல் பாதிப்பை, முழுமையாக தடுக்க இயலவில்லை. மாவட்ட நிர்வாகம், ஒன்றியம் வாரியாக, உதவி இயக்குனர் நிலை அலுவலர்களை நியமித்து, காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை கண்காணிக்கிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


காய்ச்சல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சுகாதார பணிகளை முடுக்கிவிட ஏதுவாக, கல்வித்துறை மூலமாக, பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது: ஒவ்வொரு வீட்டிலும், மாணவ, மாணவியர் கட்டாயம் இருப்பர் என்பதால், அவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்கள், காய்ச்சலால் விடுப்பு எடுத்தால், பள்ளி தலைமை ஆசிரியர், உடனடியாக, உள்ளாட்சி அமைப்புக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மூலம், அனைத்து பள்ளி களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகங்கள், பள்ளியில் இருந்து வரும் தகவல்களை பெற்று, மாணவர்கள் வசிப்பிடம் அருகே, காய்ச்சல் தடுப்பு, கொசு ஒழிப்பு மற்றும் மருத்துவ முகாம் நடத்த, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் 
கூறினார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment