வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கத்தில் தீவிரமாக செயல்படும் கொரோனா கண்காணிப்புக் குழு | Corona Team supervising people in Acharapakkam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 25, 2020

அச்சிறுபாக்கத்தில் தீவிரமாக செயல்படும் கொரோனா கண்காணிப்புக் குழு | Corona Team supervising people in Acharapakkam

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி கொரோனா கண்காணிப்பு குழுவினை அமைத்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ். 


அதன்படி, குறுவட்டம் வாரியாக கொரோனா நோய் தொற்று அறியவும், கொரோனா பாதிப்புகளை தடுக்கவும், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, ஊரக உள்ளாட்சித்துறை போன்ற துறைகளின் அதிகாரிகளை இணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டது. 
 
இந்நிலையில் கொரோனா கண்காணிப்புக் குழு மூலம் அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, காவலர் சந்திரன், கிராம சுகாதார செவிலியர் முத்துப்பாண்டி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் என அனைவரும் கொரோனா தடுப்பு செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 


அச்சிறுபாக்கத்தில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், வங்கிகள், டீ கடைகள், பழச்சாறு கடைகள், பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று (24.03.2020) அன்று முழுமையாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்கி கை கைழுவ வலியுறுத்தி விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. அனைத்து பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. 


நேற்று மாலை 6 மணிவரை பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அச்சிறுபாக்கம் வழியே நின்று சென்ற பேருந்துகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. மேலும், இன்று (25.03.2020) அனைத்து பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு குழுக்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment