வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதூர் ஊராட்சியில் மதுராந்தகம் கோட்டாட்சியர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாம் | RDO Conduct Corona Awareness in Madhur Village
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, March 20, 2020

மதூர் ஊராட்சியில் மதுராந்தகம் கோட்டாட்சியர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாம் | RDO Conduct Corona Awareness in Madhur Village


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மதூர் ஊராட்சியில் நேற்று (19.03.2020) மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் மதூர் கிராமத்தைச் சார்ந்த இருளர் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் கொரோனா வைரஸிலிருந்து தங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் போன்றவைகளைப் பற்றி செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தவிழிப்புணர்வு முகாமில் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெரோம் ஆனந்த், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை, மதூர் ஊராட்சி செயலர் ராஜி, கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க எப்படி கை கைழுவ வேண்டும் மற்றும் எப்படி நமது சுகாதாரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் போன்றவைகளைப் பற்றி ஊராட்சி செயலர் ராஜி அவர்கள் செயல்முறை விளக்கத்தோடு விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமின் இறுதியாக மதுராந்தகம் கோட்டாட்சியர் அவர்கள் மதூர் கிராமத்தில் வசித்து வரும் 10 இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்று மற்றும் இறுப்பிடச் சான்றினை வழங்கினார்.

No comments:

Post a Comment