வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-04-12
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 16, 2020

கொரோனா குணமடைய பிளாஸ்மா தானம் யாரெல்லாம் செய்யலாம்..? Plasma Donation | Corona

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் பிளாஸ்மா அணுக்களைத் தானமாகப் பெற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரை குணமடைந்தவா்களைத் தொடா்பு கொண்டு பிளாஸ்மா தானமளிக்க முன்வருமாறு சுகாதாரத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் உடலில் உள்ள பிளாஸ்மா செல்களில் இருக்கும் நோய் எதிா்ப்பாற்றலை (ஆன்டி பாடி இம்யூன்) எடுத்து, அதனை பிற நோயாளிகளுக்குச் செலுத்தும் முறையே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது.
இதன் மூலம் நோய் எதிா்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும் நோயாளிகள் கூட கரோனாவில் இருந்து விரைவில் குணமடையலாம் எனக் கூறப்படுகிறது. கேரளத்தில் இந்த சிகிச்சை முறையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 
அதைத்தொடா்ந்து, தமிழகத்திலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை குணமடைந்து வீடு திரும்பிய 118 பேரில் 50 வயதுக்குட்பட்டவா்களிடம் பிளாஸ்மா தானம் பெறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டணுக்கள், வெள்ளையணுக்கள், பிளாஸ்மா என 4 வகை செல்கள் உள்ளன. இதில், பிளாஸ்மாவில் நோய்களைக் குணமாக்கும் எதிா்ப்பாற்றல் இருக்கிறது. 
கரோனாநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மாற்று ரத்தப் பிரிவைச் சோந்த நோயாளிகளுக்கும் பிளாஸ்மா செல்களை செலுத்தி சிகிச்சையளிக்கலாம்.
தற்போது அந்த வகையான சிகிச்சையை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட 5 மருத்துவமனைகளில் அளிப்பதற்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் விண்ணப்பித்திருக்கிறோம். 
அனுமதி கிடைத்ததும், பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும். அதற்காக, கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த 18 வயது முதல் 50 வயதுள்ள நபா்களிடம் ரத்தம் தானம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

Wednesday, April 15, 2020

கருங்குழியில் ஆய்வு நடத்திய ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | Corona Zonal Officer inspecting at Karunguzhi Town Panchayat

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 
மண்டல கண்காணிப்பு அலுவலர் உதயசந்திரன் இ.ஆ.ப., காவல்துறை ஐஜி.நாகராஜன், இ.கா.., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர், சுகாதார இணை இயக்குனர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா ஆகியோர் கருங்குழி பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர்  கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், மேலவலம்பேட்டை பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்த  இடத்திற்கு முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதா என்பதை கேட்டறிந்தார். கருங்குழி பேரூராட்சி மற்றும் மதுராந்தகம் நகராட்சி பகுதிகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்வதைப் பற்றி கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். 
 


 


 


 


 


 


கடமலைபுத்தூரில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Kadamalaiputhur Corona Relief to Transgender


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைபுத்தூர் ஊராட்சியில் சுமார் 50 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கையடுத்து வெளியே செல்ல இயலாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு காய்கறி, அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி. முனுசாமி தலைமையில் அச்சிறுபாக்கத்தில் இயங்கிவரும் மகிழ்ச்சி இல்லம் என்ற தொன்டு நிறுவனத்தின் நிறுவனர் பொய்யாமொழி வழங்கினார்.
 

 

மேல்மருவத்தூரில் இலவசமாக வழங்கப்பட்ட தலா 10 கிலோ அரிசி | Rice Given to Sanitizery Workers in Melmaruvathur


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கும் OHT  இயக்குபவர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி ஒப்பந்ததாரர் பழனிச்சாமி மூலமாக வழங்கப்பட்டது.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, நிர்மலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி பைகளை பணியாளர்களுக்கு வழங்கினர்.
மேலும், மேல்மருவத்தூர் ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் உடனிருந்தனர். 


கருங்குழியில் தமிழ் புத்தாண்டிலும் ஓயாமல் உழைத்த பேரூராட்சி ஊழியர்கள் | Karunguzhi Town Panchayat Tamil New Year Works | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் நேற்று தமிழ்புத்தாண்டு விடுமுறை தினம் என்றாலும், தொடர்ந்து 21நாட்கள் விடுப்பு ஓய்வின்றி பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.கேசவனுடன் இணைந்து அலுவலக பணியாளர்கள் அனைத்து பணிகளையும் மேற்கொண்டனர்.
பொதுமக்கள் வீட்டிலேயே  இருக்க வேண்டும் என்பதாலும், கொரோனா நோய் பரவலை தடுக்க வேண்டும் என்பதாலும், மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவது தங்களது கடமை என்பதை எண்ணிய கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் தனது ஊழியர்களுடன் இணைந்து சிறிதும் சோர்வின்றி மக்களின் மனநிறைவுடன் பணிசெய்தனர்.
மக்களுக்கு தேவையான முக்கிய மளிகை பொருட்களை வீடுதேடி வழங்கும் பணியை வணிகர்களுடன் இணைந்து டோர்டெலிவரி சேவையினை துவக்கியுள்ளனர்.
காய்கறி மட்டுமின்றி மளிகை பொருட்களான, மஞ்சள் தூள், குழம்பு தூள், மல்லி தூள், மிளகு, டீ தூள், ரவை, கோதுமை மாவு, சன்பிளவர் ஆயில், அரிசி, நொய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சபருப்பு, உடைத்தகடலை, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கடுகு, சீரகம், உப்பு, சேமியா, மற்றும் தேங்காய் தேங்காய் அடங்கிய தொகுப்பு பொருட்களும் வீடு தேடி மக்களுக்கு வழங்கியதால் பேரூராட்சி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தமிழ்ப் புத்தாண்டை எவ்வித சிரமமின்றி கொண்டாடி மகிழ்ந்தனர்.