வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-06-14
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, June 22, 2020

தற்போது ஆசிரியர்கள் இவ்வாறு கூறுவதற்கு என்ன பதில் கூறுவது? என தெரியவில்லை:அமைச்சர் செங்கோட்டையன் | Teachers News | Vil Ambu News

10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


ஈரோடு மாவட்டம் கோபியில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 

தனியார் பள்ளிகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து அரசு கண்காணித்து வருகிறது. அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். தனியார் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் முறைகேடு செய்ய முடியாது.

அதையும் மீறி மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகள் சுட்டி காட்டப்பட்டால், உடனடியாக குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை எழுத வைப்பது ஆசிரியர்கள் கடமை. 

தற்போது, மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என ஆசிரியர்கள் கூறுவதற்கு என்ன பதில் கூறுவது? என தெரியவில்லை.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

EMIS | ரூ.2000 வழங்கப்படும் | மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தது தமிழக அரசு | 2000 Scholorship for 12th Students | Vil Ambu News


கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்னரே, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் 24-ம் நாள் நடந்த கடைசி தேர்வில் கொரோனா அச்சிறுத்தலால், 32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பதால் அதனை மீண்டும் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றுவரும் நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2019-20 ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000/- வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மாணவர்கள் அவர்களது வங்கிக் கணக்குகளை அவரவர் படித்த பள்ளிகள் மூலமாக உடனடியாக  எமிஸ் (EMIS) வளைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Sunday, June 21, 2020

அச்சிறுபாக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக பொதுமக்கள் ரசித்த சூரிய கிரகணம் | Sooriya Graganam at Acharapakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் ஜூன் 21-ஆம் தேதி காலை 10.22 மணிக்கு தொடங்கிய வளைய சூரிய கிரகணத்தை சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடியின் மூலம் சூரிய கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.


இதில் அறிவியல் கழகத்தைச் சார்ந்த சீனிவாசன், முருகன், நீலமேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 


 


 


டியூசன் சென்டரில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவியர்: அரசு மகளிர் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை உறுதி | Mathur school news krishnagiri | Vil Ambu News

மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவியரை, டியூசன் சென்டரில், காலாண்டு தேர்வு எழுத வைத்ததால், பெற்றோர் அதிருப்திக்குள்ளாகினர்.



அரசு உத்தரவை மீறி செயல்பட்ட, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 98 மாணவியர் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.


பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வின் தமிழ் மற்றும் அறிவியல் பாட விடைத்தாள்கள் காணாமல் போனதாகவும், இதனால் பெற்றோரை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள், மாணவியரை பள்ளிக்கு அழைத்து வருமாறும், மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் இடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


அதன்படி நேற்று, 15 பெற்றோர் தங்களது மகள்களை பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். பள்ளி வளாகத்தில் நுழைந்த போது, அங்கிருந்த ஒரு ஆசிரியர், மாணவியரை தனியார் டியூசன் சென்டருக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அங்கு சென்ற பெற்றோரை, வெளியே நிற்க வைத்துவிட்டு, மாணவியரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.


அங்கிருந்த தமிழ் ஆசிரியை பத்மபிரியா, அறிவியல் ஆசிரியை சத்யா ஆகிய இருவரும், மாணவியருக்கு விடைத்தாள்களை கொடுத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதையடுத்து, டியூசன் சென்டரை நடத்தி வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெருமாளிடம் கேட்ட போது, ''காலாண்டு தேர்வின் தமிழ், அறிவியல் விடைத்தாள்கள் தொலைந்து விட்டது.


அதற்காக, தற்போது மாணவியரை தேர்வு எழுத வைத்துள்ளோம். வேண்டாமென்றால், மாணவியரை வீட்டிற்கு அனுப்பி விடுகிறோம்,'' என, கூறிவிட்டு உள்ளே சென்றவர், மாணவியர் அனைவரையும் வீட்டிற்கு செல்ல உத்தரவிட்டார். இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்திமாலாவை தொடர்பு கொண்டபோது, அவர் மருத்துவ விடுப்பில் உள்ளதாக தெரிவித்தார்.


மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா கூறியதாவது: விடைத்தாள்கள் தேவையில்லை என்று, கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் இல்லையென்றால், அதற்கான விளக்க கடிதம் இருந்தால் போதும்.
தற்போது நடந்துள்ள இச்சம்பவம் எனக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். அப்படி தேர்வெழுத வைத்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Saturday, June 20, 2020

கொரோனா மருந்து ரெடி | Vil Ambu News|

முதல் முறையாக இந்தியா கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருந்தை அனுமதிக்கச் சோதனை தொடக்கம்...
நாட்டில் மத்திய அரசு அனுமதி பெற்ற ஃபேபிஃபுளு என்ற மருந்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக நாட்டில் அங்கிகாரம் பெற்ற முதல் மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ளன்மார்க் பார்மெசிட்டிகள்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஃபேபிபிராவிர் என்ற மருந்தை ஃபேபிஃபுளு என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தைக் கொண்டு கொரோனா தொற்றுக்கு ஆளாகிக் குறைந்த அறிகுறிகளோடு காணப்படுபவர்களைக் குணப்படுத்தி விடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே இந்த மருந்தை நாட்டில் தயாரிக்கவும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க இந்த நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தளபதியிடம் அனுமதி பெற்றது.


குறிப்பிட்ட நிறுவனத்தின் முதன்மை அதிகாரி க்ளென் சாலதான்ஹா நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வரும் இந்த சூழலில் எங்கள் நிறுவனம் இந்த மருந்தை விநியோகிக்க அனுமதி கிடைத்துள்ளது. இப்போதைய நிலை நாட்டின் சுகாதார கட்டமைப்பைக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நேரத்தில் எங்கள் மருந்து நிச்சயம் ஆக்கப்பூர்வமான முடிவுகளை அளிக்கும்என்றார்.

மேலும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஃபேபிபிராவிர் மருந்துக்கான நேரடி சோதனைக்கு அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டு லேசான அறிகுறிகளோடு காணப்படுவார்களுக்கு இந்த மருந்தைக் குறிப்பிட்ட அளவில் கொடுத்து சோதனை தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளது.


முதற்கட்டமாக நாட்டில் உள்ள 11 மாநிலங்களில் உள்ள தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் தலா 150 நோயாளிகளைத் தேர்வு செய்து 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

[அரசு வேலை] ரேஷன் கடைகளில் வேலை வேண்டுமா? | Ration Shop Job 2020 | Vil Ambu News|

கிருஷ்ணகிரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 65 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



நிர்வாகம் : நியாய விலைக் கடை மேலாண்மை : தமிழக அரசு பணியிடம் : கிருஷ்ணகிரி பணி : விற்பனையாளர் மொத்த காலிப் பணியிடம் : 65 கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.



மொழித் திறன் : விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர், பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tncsc.tn.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை,
 
 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.

சீன கம்பெனியே தேவையில்லை | அதிரடி முடிவு எடுத்த ஐ.பி.எல் | Vil Ambu News

இந்தியா - சீனா எல்லை மோதல் காரணமாக இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் பேசத் துவங்கி உள்ளனர். சீனப் பொருட்களை இந்தியாவில் ஆதரிக்கக் கூடாது என்ற கருத்தும் வலுப் பெற்று வருகிறது. அது ஐபிஎல் தொடருக்கும் பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. அது பற்றி விவாதிக்க அடுத்த வாரம் ஐபிஎல் கூட்டம் நடைபெற உள்ளது.



இந்தியா சீனா எல்லை மோதல் இந்தியா சீனா எல்லையில் கடந்த வாரம் நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். சீன வீரர்கள் சுமார் 40 பேரும் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.


மக்கள் கோபம் இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் சீன பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனக் கூறி தங்கள் எதிர்ப்புகளை பல்வேறு வழிகளில் காட்டி வருகின்றனர். சீன பொருட்களை எந்த வகையிலும் இந்தியாவில் ஆதரிக்கக் கூடாது என எதிர்த்து வருகின்றனர்.


சிக்கலில் ஐபிஎல் இது ஐபிஎல் தொடருக்கு ஒரு வகையில் சிக்கலாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் பிராண்ட் ஸ்பான்சராக இருக்கும் "விவோ" எனும் மொபைல் நிறுவனம் சீனாவை சேர்ந்ததாகும். அந்த நிறுவனத்தை ஸ்பான்சராக தொடர்வதில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

ரசிகர்கள் ஆதரவு கிடைக்காது 2020 ஐபிஎல் தொடர் ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயன்று வருகிறது. அப்போது விவோ நிறுவனத்தை ஸ்பான்சராக தொடர்ந்தால் ரசிகர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும், ஆதரவு கிடைக்காது.


விரைவில் கூட்டம் இந்த நிலையில், இது பற்றி விவாதிக்க அடுத்த வாரம் ஐபிஎல் கூட்டம் நடைபெற உள்ளது. அது பற்றி ஐபிஎல் நிர்வாகம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஐபிஎல்'இன் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


விளம்பரதாரர் குறித்து முடிவு விவோ மட்டுமின்றி, பேடிஎம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பெரிய நிறுவனமான அலிபாபா முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவோ மூலம் 440 கோடி வருவாய் கிடைக்கும் நிலையில், அந்த வாய்ப்பை ஐபிஎல் விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது.


பொருளாளர் கருத்து முன்னதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில், உணர்ச்சிவசப்படாமல் பார்த்தால், சீன நிறுவனத்தின் பொருட்களை விற்க விளம்பரம் செய்தாலும், அவர்கள் அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை விளம்பரமாக பிசிசிஐ-க்கு அளிக்கிறார்கள். அதில் 42 சதவீதம் இந்திய அரசுக்கு வரியாக அளிக்கப்படுகிறது என்றார்.


வேறு வழியில்லை விளம்பர வாய்ப்புகளை விட பிசிசிஐ விரும்பாவிட்டாலும், ஐபிஎல் தொடர் நடக்கும் போது ஐபிஎல்-லுக்கு எதிராக ரசிகர்கள் திரண்டால் அது மேலும் சிக்கலாகி விடும். அதனால், விளம்பர ஒப்பந்தந்தை மாற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர SPD உத்தரவு | Vil Ambu News

கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்.



ஊரடங்கு காலத்துக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, முழு நேரம் பணிக்கு வர சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவு.

சமாக்ரிக்ஷாவில், பகுதி நேர பயிற்றுநர்கள் (பி.டி.ஐ.எஸ்) தற்போது அரசு மேல்நிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 


எனவே, பி.டி.ஐ.எஸ் தங்கள் கடமைக்கு அறிக்கை செய்யக்கூடிய நிலையில் இல்லை.  இது சம்பந்தமாக, பகுதிநேர பயிற்றுனர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக 2020 ஜூன் மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் முழுமையாக செயல்பட்டு செயல்படும்போது பள்ளிகளுக்கு வருவதன் மூலம் அவர்கள் வேலை செய்யாத நாட்களை ஈடுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Friday, June 19, 2020

சரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில் | Vil Ambu News

 சரஸ்வதிக்கு ஏகப்பட்ட கள்ளக்காதலர்கள்.. தன் சந்தோஷத்துக்கு மகள் தொந்தரவாக இருந்ததால், கட்டையால் அடித்து அவரை கொன்றே விட்டார் சரஸ்வதி.. இப்போது 7 வருஷம் ஜெயில் தண்டனை அவருக்கு கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சரஸ்வதி.. 29 வயதாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு 5 குழந்தைகள்.
ஆனால் சரஸ்வதிக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.. பல பேருடன் கள்ளக்காதல் நீடித்தும் வந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 2017-ம் வருஷம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி சரஸ்வதியின் மகள் திரிஷா திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்... திரிஷாவுக்கு 4 வயசு.

குழந்தையை டெஸ்ட் செய்த டாக்டர்கள் திரிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.. அதனால் இந்த விஷயம் போலீசுக்கு போனது.. ஊட்டி நகர மேற்கு போலீசார் சந்தேக மரணமாக இதன்மீது கேஸ் பதிவு செய்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது. அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில் திரிஷாவின் தலையில் பலமான அடிபட்டுள்ளதாகவும், யாரோ கட்டையால் அடித்துள்ளதாகவும் கூறப்பட்டது..
அதனால் முதல் கிடுக்கிப்பிடி விசாரணையே சரஸ்வதியிடம் ஆரம்பித்தனர்.. எடுத்த எடுப்பிலேயே உளறி கொட்டினார் சரஸ்வதி. கள்ளக்காதல் செய்யும்போது ஒருமுறை திரிஷா நேரில் பார்த்துவிட்டாராம்.. இந்த காதல்களுக்கு எல்லாம் திரிஷா தடையாக இருந்ததால்தான் கட்டையால் அடித்து கொன்றதாக பெற்ற தாய் வாக்குமூலம் தந்தார். இதையடுத்து சரஸ்வதியை ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் ஊட்டி மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணையும் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.. அதட்னபடி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற மகளையே கொலை செய்த சரஸ்வதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சரஸ்வதியை கோவை மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

சரஸ்வதியை கைது செய்தபோதே, மற்ற குழந்தைகள் 4 பேரையும் ஒரு காப்பத்தில் சேர்த்தனர்.. அங்குதான் அவர்கள் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.