வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் அருகே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு முகாம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 30, 2021

மதுராந்தகம் அருகே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு முகாம்.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அவுரிமேடு ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவிலான சிறப்பு முகாம்  நடைபெற்றது.


இம்முகாமில் ஓணம்பாக்கம் குரு வட்டத்திற்குட்பட்ட அவுரிமேடு, சித்திரவாடி, சிறுநல்லூர், உள்ளிட்ட  கிராமங்களில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டது.

குறிப்பாக யூ.டி.ஆர் திருத்தம், புலஎண் மற்றும் உட்பிரிவு எண் தவறாக இருப்பின் திருத்தம் பட்டாதாரர் பெயர் மாற்றம், தந்தை பாதுகாவலர் பெயர் பிழை திருத்தம், உறவுமுறைகளில் திருத்தம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் சான்று, திருமண உதவித்தொகை வழங்கபட்டு பொதுமக்களிடம் 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

இந்நிகழ்வில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம் துரைராஜ், ஒன்றியக்குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் கீதா, ஒன்றியக்குழு உறுப்பினர் வே.கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறுநல்லூர் ஜி.டி.எம் தெய்வசிகாமணி, அவுரிமேடு கலாஅரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிறுநல்லூர் பாலாஜி, அவுரிமேடு வினோத்குமார், ஊராட்சி செயலர்கள் சிறுநல்லூர் மாதவிதேவி, அவுரிமேடு சுதர்சனன், கிராம உதவியாளர்கள் ஏழுமலை, மணி, கோதண்டம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment