வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் மழைமலை மாதா கோவிலில் துவங்கிய கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள்..! உலக மக்களுக்கு வாழ்த்து..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 24, 2021

அச்சிறுபாக்கம் மழைமலை மாதா கோவிலில் துவங்கிய கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள்..! உலக மக்களுக்கு வாழ்த்து..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மழை மலை மாதா கோவிலில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் துவங்கியது.


இந்நிலையில் அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தல அதிபர் ஆர்.லியோ எட்வின் மற்றும் அருள்தள துணை அதிபர் செல்வம் ஆகியோர்
உலக மக்கள் அனைவரும் சுபிக்‌ஷ்மாக இருப்பதற்காக இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினத்தில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உலக மக்கள் அனைவரும் வளமான வாழ்வை பெற இந்த நன்னாளில் கிறிஸ்துமல் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.


மேலும், கிறிஸ்துமஸ் குடில் அமைத்து இயேசு பிறப்பினை கொண்டாடும் நேரத்தில் உலகத்தில் நன்மைகளும் பிறக்கும் என அவர் தெரிவித்தார்.


கிறிஸ்துமஸ் என்பது ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பை கொண்டாடும் விழா என்பது நாம் அனைவரும் அறிந்ததே.! இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.


இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். 


கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.


கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன.

 




📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment