வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சக போலீசார் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ள போவதாக கல்பாக்கம் பெண் போலீஸ் எஸ்.பி.க்கு கடிதம் | Kalpakkam Lady Police Writing Suiside Letter to Chengalpattu S.P | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 07, 2021

சக போலீசார் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ள போவதாக கல்பாக்கம் பெண் போலீஸ் எஸ்.பி.க்கு கடிதம் | Kalpakkam Lady Police Writing Suiside Letter to Chengalpattu S.P | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணிபுரிபவர் கவிதா(28). 

செய்யூரை அடுத்த, செங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிலர், அவரை தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

அவரது விருப்பமின்றி, வெளி பணியாக, மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அடிக்கடி அனுப்புவதாகவும், வார விடுமுறைக்கு அனுமதி பெற்றும், விடுப்பாக பதிவதாகவும் கூறப்படுகிறது. 

இவரது தந்தை சுப்பிரமணி, இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து, தாய் மாரியம்மாள் பாம்பு கடித்து அறுவை சிகிச்சை நடந்து உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருபவர்.


இந்நிலையில், சக காவலர்கள் இவரை தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் மனம் உடைந்து, வாழ விரும்பாமல் இறப்பதாக நேற்று கடிதம் எழுதி பிறர் வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பினார். இதையறிந்து தேடிய போலீசார், பகல் 1.30 மணிக்கு, கல்பாக்கம் நகரியம், பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார கடற்கரையில் அமர்ந்து அழுததை கண்டு இவரை மீட்டனர். அவரது குறைகளை தெரிவிக்க, நேற்று, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், அவரை அழைத்து விசாரணை நடத்தினார்.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment