வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Children's Special
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Children's Special. Show all posts
Showing posts with label Children's Special. Show all posts

Friday, November 09, 2018

குழந்தைகளை விளையாட விடுங்க


குழந்தைகளை விளையாட விடாததால் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.


 வெளியே விளையாடினால் ஏதேனும் பாதிப்பு வந்துவிடும் என்று வீட்டிலேயே பொத்திபொத்தி பாதுகாக்கின்றனர். இதனால், குழந்தைகளின் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
(தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

உடல் உழைப்பு இன்மை, ஜங்க் புஃட் காரணமாக நகர்ப்புற குழந்தைகளில் நான்கில் ஒருவர் உடல்பருமனாக உள்ளனர். அதுவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், 26 சதவிகிதம் பேரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில், 4.5 சதவிகிதம் பேரும் உடல்பருமனாக உள்ளனர். ஓடியாடி விளையாடும்போது தேவையற்ற கலோரி, கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் ஃபிட்டாக இருப்பர்.


விளையாடும்போது மற்ற குழந்தைகளுடன் பழக்கம் ஏற்படுகிறது. இது, கூட்டுறவு மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படும் திறனை வளர்க்க உதவுகிறது. இது, குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கவும், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை, முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் உதவுகிறது. குழுவாக விளையாடும்போது பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு ஏற்படுகிறது. வீட்டிலேயே அடைந்துகிடக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திறன் மிகக் குறைவாகவே இருக்கிறது.


‘குழந்தைகள் விளையாடும்போதுதான் அவர்கள் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கிறது’ என்கிறது ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ ஆய்வு. குழுவாக விளையாடும்போது, குறிப்பிட்ட விஷயத்தில் கவனத்தைச் செலுத்தும் திறன், சமாளிக்கும் திறன், இதற்காக கை, கால், கண்கள் என ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து செயல்படும் திறன் மேம்படுகிறது.


“பள்ளிகளில் விளையாட்டு நேரம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. குறைந்தது 15 நிமிடங்களாவது குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போதுதான் அவர்களது கல்வி கற்கும் திறன் மேம்படும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Monday, November 05, 2018

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்



தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுக்க வைப்பதில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன எனப் பார்க்கலாம். 



தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுக்க வைப்பதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.
(தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.

* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.

* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.

* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.



* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.

* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
 * குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.

* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.


* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.

எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்

* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.


* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.

* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.

* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


குழந்தைகளின் சேமிக்கும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி?



குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். 


 குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!
1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.



2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.

3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்


4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்

5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.


6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.

7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்


8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.

9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts