வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Mee Too
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Mee Too. Show all posts
Showing posts with label Mee Too. Show all posts

Friday, November 02, 2018

18 வயசுதான்.. முழுசா நம்பினேன்.. கட்டிப்பிடித்தார், முத்தமிட்டார்.. பரபரக்கும் அனன்யாவின் புகார்



"அப்போது எனக்கு வயசு 18. மாயாதான் எனக்கு எல்லாம்... முழுசா நம்பினேன்... ஆனால் ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார்" இப்படி குற்றச்சாட்டுகளை மாயாகிருஷ்ணன் மீது அடுக்கி கொண்டே செல்கிறார் அனன்யா. 

 'வானவில்' என்ற படத்தில் அறிமுகமானவர்தான் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த்தின் 2.0 படத்திலும் மாயா நடித்து வருகிறார். இவர் மீதுதான் நடிகை அனன்யா ராம்பிரசாத் மீ டூ புகார் அளித்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

நெருக்கம் ஆனோம்
 இது தொடர்பாக அனன்யா தனது பேஸ்புக் பக்கத்தில், "2016-ல் மாயாவை நான் முதன்முதலாக பார்த்தபோது எனக்கு வயது 18. நிறைய ஆலோசனை சொல்லவும் அவரை நான் முழுவதுமாக நம்பினேன். கொஞ்ச நாளிலேயே இரண்டு பேரும் நெருக்கமாகி விட்டோம்.


கட்டிபிடித்தார்
 ஒரு கட்டத்தில் மாயா என்னை ரொம்பவே ஆட்டி படைத்தார். என் சம்பந்தப்பட்ட முடிவுகளையும் அவரே எடுத்தார். என் நண்பர்கள், பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். என்னை மொத்தமாக ஆக்கிரமித்து கொண்டார். ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார்.


தவறாக நடந்து கொண்டார்
 அவருடன் ஒரே ரூமில் ஒரே மெத்தையில் தூங்கினோம். அப்போதெல்லாம் இரவில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவரது பாலியல் தொல்லைகளை அனுபவித்த நாட்கள் என் வாழ்வில் கொடுமையான நாட்கள். இன்னும் அந்த துயரமான நினைவுகளிலிருந்து நான் மீளவே இல்லை. அது சாதாரண விஷயம் என்றாலும் அது அவறு என்பதை பின்னாளில் நான் உணர்ந்தேன். பிறகு விலகி மனநல டாக்டரிடம் இதுக்காக சிகிச்சை பெற்றேன்" என்று தெரிவித்துள்ளார்.


ஆண்கள் மீது ஆண்கள் 
 மீ டூ ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஆண்கள் மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை சாட்டி வரும் நிலையில், ஆண்கள் ஆண்கள் மீதும், பெண்கள் பெண்கள் மீதும் பாலியல் புகார்களை கூற தொடங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Tuesday, October 23, 2018

‘‘செருப்பால் அடித்தேன்’’ நடிகை கஸ்தூரியின் பாலியல் தொல்லை அனுபவம்



நடிகை கஸ்தூரியும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறியுள்ளார். 


மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் ‘‘உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.  (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

அதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள கஸ்தூரி, ‘‘தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னை பார்க்கும்போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகிற சிலர். இறந்து விட்ட ஒருவர். இழுத்துக்கொண்டு ஒருவர். இவர்களை பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts