வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 28, 2019

செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி | Great died Old lady Donating eye in Ginjee

முதியோர் இல்லத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலையோரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தைலம்மாள், 68; என்ற மூதாட்டியை மீட்டு சமூக நலத்துறையினர் செஞ்சியில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.



வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் தைலம்மாள் இறந்தார். அவரது கண்களை தானமாக வழங்க விடுதி நிர்வாகி நளினி முடிவுசெய்தார்.இதுகுறித்து செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


அவர்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி வந்த மருத்துவக் குழுவினர் மூதாட்டியின் கண்களை அகற்றி தானமாக பெற்றுச் சென்றனர்.ரோட்டரி சங்க தலைவர் இளங்கோவன், செயலர் சேகர், பொருளாளர் பன்னீர்செல்வம் உடன் இருந்தனர்.

உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் | Ulundurpet school girl Kidnap News

உளுந்துார்பேட்டை அருகே இளம்பெண்ணைக் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா ஆண்டிகுழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.



இவரது 17 வயது மகளை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தனது மகளை கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வீரப்பன் மகன் எழிலரசன், 19; என்பவர் கடத்திச் சென்றதாக ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து எழிலரசனை கைது செய்தனர்.

வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர் | Candidate death in Sennavaram Vandavasi Taluk

வந்தவாசி அருகே, சுயேச்சை வேட்பாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.



இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், சென்னாவரம் கிராம பஞ்சாயத்து, 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேண்டாமிர்தம், 54, என்பவர் போட்டியிட்டார். அவருக்கு சீப்பு சின்னம் வழங்கப்பட்டது. கடந்த, 23ல், அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.


எனவே, அந்த வார்டுக்கு, வரும், 30ல், நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் 1 கோடி ரூபாய் மோசடி | 1 Crore Abase in Madurantakam

தீபாவளி சீட்டு நடத்தி, 1 கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடைக்காரர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் அடுத்த, மேலவலளம்பேட்டையில், வாடகை வீட்டில் வசித்தவர், ராம்தேவ், 50; பூதுாரில் நகை கடை வைத்திருந்தார்.




இவர், பூதுாரை சுற்றியுள்ள ஈசூர், வள்ளிபுரம், தச்சூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 500 பேரிடம், மாதம், 1,000 ரூபாய்க்கு, தீபாவளி சீட்டு பிடித்தார்.கடந்த தீபாவளியின் போது, பணம் கட்டியவர்களுக்கு வழங்க வேண்டிய நகை மற்றும் பொருட்கள் வழங்காமல், காலம் கடத்தி வந்தார்.


கட்டிய பணத்திற்கான நகை மற்றும் பொருட்களை வழங்கும்படி நெருக்கடி கொடுத்த நிலையில், சில நாட்களாக, ராம்தேவ் வசித்த வீடும், கடையும் பூட்டியே கிடந்தன; அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.


இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சீட்டு கட்டிய கிராமத்தினர், 50க்கும் மேற்பட்டோர், 'ராம்தேவ், 1 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாகியுள்ளார். அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தரவேண்டும்' என, படாளம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைமலைநகரில் தொடர் வழிபறி | என்ன நடக்கிறது...? | Maraimalainagar Robbery News

மறைமலை நகரில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட, கல்லுாரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.மறைமலை நகர் சுற்று வட்டாரத்தில், சில நாட்களாக, வீடுகளில் துாங்கும் வாலிபர்களை தாக்கி, மொபைல் போன், மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.



பாதிக்கப்பட்டோர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், பொத்தேரி பகுதியில், ரோந்து பணியில் இருந்த போலீசாரை பார்த்து, இரண்டு, 'பல்சர்' இருசக்கர வாகனங்கள் வேகமாக சென்றன. இவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மல், 19, மேற்கு தாம்பரம் அனிமா பள்ளி தெரு கமல் பிரசாந்த், 21, என்பதும், தனியார் கல்லுாரியில் படிப்பதும் தெரிய வந்தது.இவர்களுடன் ரங்கநாதபுரம் கிஷோர், 20, வைத்தியேஷ்குமார், 21, ஆகியோரும், வீடுகளில் வசிப்போரை மிரட்டி, மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர்.


இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.'பிடிபட்ட மாணவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பின், வழிப்பறியில் கொள்ளை அடிக்கப்பட்ட விபரங்கள் வரும்' என, போலீசார் தெரிவித்தனர்.

மதுராந்தகத்தில் வீட்டிலேயே கஞ்சா வளர்ப்பு | Madurantakam Ganja News

மதுராந்தகம் அருகே, பாழடைந்த வீட்டு வாசலில், கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.



மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர், நுார்துசாமி, 65; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.இவர், கடந்த ஆண்டுகளில், மதுராந்தகம் அடுத்த காந்தி நகரில், குடிசை வீட்டில் வசித்தார். மதுராந்தகத்தில் சொந்தமாக மனை வாங்கி, வீடு கட்டி அங்கு வாழ்கிறார்.


இந்நிலையில், நுார்துசாமி வசித்த குடிசை வீடு, பாழடைந்து கிடந்தது. இதன் வாசலில், கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.நேரில் வந்து ஆய்வு செய்த போலீசார், வளர்ந்திருப்பது கஞ்சா செடி என்பதை உறுதி செய்தனர். ஆள் இல்லாத வீட்டில், கஞ்சா வளர்த்திருப்பது குறித்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tamil Latest News 28.12.2019 | இன்றைய தமிழ் செய்திகள் | Run World Media

இன்றைய முக்கிய செய்திகள் : 


கீழே உள்ள செய்திகளின் மீது கிளிக் செய்யவும்
  1. மதுராந்தகத்தில் வீட்டிலேயே கஞ்சா வளர்ப்பு
  2. மறைமலைநகரில் தொடர் வழிபறி | என்ன நடக்கிறது...?
  3. மதுராந்தகத்தில் 1 கோடி ரூபாய் மோசடி
  4. வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர்.
  5. உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் 
  6. செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி
  7. விடுதியில் விபசாரம் நடத்திய பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை