வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 06, 2020

மதுராந்தகம் கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Adhiparasakthi Thondu Iyakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள 60 இருளர் இன குடும்பத்திற்கு ஆதிபராசக்தி தொண்டு இயக்கம் சார்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பானது கொரோனா நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. 


அதன்படி, ஊரடங்கு உத்தரவினால் கூலி வேலைக்குக்கூட செல்ல இயலாமல் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள சேனீர்மேடு, பெரும்பாக்கம், கூடப்பாக்கம், செம்பூண்டி மற்றும் எல் எண்டத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 60 இருளர் இன குடும்பத்திற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.



 





Tuesday, May 05, 2020

அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை சாலை பகுதியில் தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் | Corona Relief Given by DMK Persons in Acharapakkam Pallipettai Road | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.9, பள்ளிப்பேட்டை சாலை பகுதியில் வசிக்கும் 200 நலிவடைந்த குடும்பத்தினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தலைமையில் அச்சிறுபாக்கம் பேரூராட்சி தி.மு.க.வினர் சார்பாக ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.டி.ஆர்.வி. எழிலரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், அச்சிறுபாக்கம் பேரூர் தி.மு.க செயலாளர் எஸ்.உசேன், அச்சிறுபாக்கம் பேரூர் முன்னாள் தலைவர் கோதண்டராம ரெட்டியார், பேரூராட்சி பொருளாளர் பி.எம்.சுப்பிரமணியம், அச்சிறுபாக்கம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சிவசங்கரன், அவைத்தலைவர் சையத் முகமது, கிளை செயலாளர் எஸ்.மஸ்தான், கிளை பிரதிநிதி எம்.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ஜெயமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு ரூரல் ஸ்டார் டிரஸ்ட் வழங்கிய முகக்கவசங்கள் | Corona Precation | Acharapakkam Insector| Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக முகக்கவசங்கள் 04.05.2020 அன்று வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு பணிகளில் அயராது பாடுபட்டுவரும் காவலர்கள் வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்கள் அவசியம் என்பதால் அவர்களுக்கு தேவையான முகக்கவசங்களை ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் அ.டோமினிக் தலைமையில் வழங்க அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, சமூக ஆர்வலர் பாரதி உடனிருந்தார்.

Saturday, May 02, 2020

திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரியில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Kariyacherry Corona Relief | VIl Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஊராட்சி செயலாளருமான சேகர் தனது சொந்த செலவில்  560 குடும்பங்களுக்கு  3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.
கொரோனா நோய் பரவாமல் தடுக்க  நாடு முழுவதும்  கடந்த மார்ச் மாதம்  25 ஆம் தேதி முதல்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர், வேலைக்கு செல்லாமல் இருப்பதால் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர்  ஸ்டாலின்  ஆணைக்கிணங்க தி.மு.க.வினர்  அந்தந்த பகுதிகளில்  வீடுகள் தோறும் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். 
அதுபோல் திருக்கழுக்குன்றம்  அடுத்த நத்தம் கரியச்சேரி ஊராட்சிக்குட்பட்ட 560 குடும்பங்களுக்கு தி.மு.க ஊராட்சி செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சேகர் தனது சொந்த செலவில் தலா ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
மொத்தம்  3 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
மக்கள் நிவாரண உதவிகள் வழங்கியமைக்கு  திமுக ஊராட்சி செயலாளருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் அலமேலு என்டர்பிரைசஸ் உரிமையாளர் எஸ்.சுரேஷ் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வமணி மற்றும் மோகன்ராஜ் உட்பட கிராம இளைஞர்கள் உடனிருந்தனர்.