எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார்.
தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக
திட்டமிட்டுள்ளாராம்.
(தொடர்ச்சி கீழே...)
ஷங்கர் இயக்கத்தில் ஜேசன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஜேசனின்
தங்கை திவ்யா சாஷாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபாடு அதிகம். அவர்
அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார் அவர்.
பள்ளியின் பேட்மிண்டன் அணியில் திவ்யாவும் உள்ளார். பேட்மிண்டன் அணியின்
புகைப்படங்களை அந்த பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக
வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த புகைப்படங்களில் திவ்யா உள்ளார். அந்த குழு அண்மையில் நடந்த போட்டி
ஒன்றில் 3வது இடம் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின்
வாயில் உயிருள்ள மீனை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு மாலி. இவர் படாஸ் பகுதியில்
உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஐந்து
மாத பெண் குழந்தையும் உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
பாபுவின் ஐந்து மாத குழந்தை, எப்போதும் வாயில் ஜொள்ளு வடித்துக்
கொண்டே இருந்தது. இதனை நிறுத்துவதற்காக, பாபுவின் மனைவி அக்கம்பக்கத்தில்
உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது சிலர், உயிருள்ள மீனை குழந்தையின்
வாயில் வைத்தால் ஜொள்ளுவிடுவதை நிறுத்திவிடும் என ஆலோசனை கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஒரு உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் பாபுவின் மனைவி
வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மீன் குழுந்தையின் தொண்டையில்
சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியது.
இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. ஒரு
சிறிய அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீன்
வெளியே எடுக்கப்பட்டது.
அக்கம்பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்
வகையில் தாய் செயல்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் பயனர்களின் முகம் தெளிவாக இல்லாத
காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை.
அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டைகளைப் பயணிக்கும் சூழ்நிலையே
இங்கு உருவாகி இருந்தது.
(தொடர்ச்சி கீழே...)
புகைப்படத்தை மாற்ற அனுமதி
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கமும் ஒரு தீர்வை
வழங்க முடிவு செய்து, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற
பயனர்களுக்கு அனுமதியும் வழங்கியிருந்தது. அதன்படி உங்கள் ஆதார் அட்டையில்
உள்ள ஆதார் புகைப்படத்தை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
ஆன்லைன் சேவை
உங்களின் ஆதார் புகைப்படத்தை மாற்ற எவ்வித ஆன்லைன் சேவைக்கும் இந்திய
அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதே உண்மை. ஆன்லைன் இல் புகைப்படத்தை
மாற்றுவது பாதுகாப்பானதல்ல என்ற காரணத்தினால் அரசாங்கம் ஆன்லைன் சேவையை தடை
செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்லைன் முறை
உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை பயனர்கள் இரண்டு முறையில்
மாற்றிக்கொள்ளலாம், இவ்விரண்டு முறைகளுமே ஆஃப்லைன் முறைகள் தான் என்பது
குறிப்பிடத்தக்கது. மக்களின் பாதுகாப்பு கருதி அரசாங்கம் ஆஃப்லைன் சேவையை
அறிமுகம் செய்துள்ளது.
முழு விபரங்களுடன் கடிதம்
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றப் பதிவு மையத்தை நீங்கள்
நாடவேண்டும் அல்லது உங்கள் ஆதார் அட்டைப் புதுப்பிக்கப்பட்ட புகைப்படம் பெற
UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுத வேண்டும்.
செயல்முறை 1:
ஆதார் அப்டேட் படிவத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கரெக்ஷன் படிவத்தைச் சரியாக
நிரப்பி UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுதி அனுப்பினால் இரண்டு
வாரங்களுக்குள் உங்களின் புதிய ஆதார் கார்டு வீடு வந்து சேரும்.
செயல்முறை 2:
அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் சென்று, உங்களின் ஆதார் கார்டில் உள்ள
புகைப்படத்தை மாற்ற நேரடியாகப் புகார் அளிக்கலாம். இரண்டு வாரங்களுக்குள்
புகைப்படம் மாற்றப்பட்ட புது ஆதார் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். ஆதார்
கார்டில் மாற்றங்கள் செய்து புதிய கார்டு வழங்குவதற்கு ரூ.15 செலுத்த
வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார்
ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்த கவலையில் இருந்தவர்களுக்கு
தீர்வளிக்கும் விதமாக சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த
தீர்ப்பில் வங்கி கணக்குகள், மொபைல் நம்பர்கள் மற்றும் பள்ளி மாணவர்
சேர்க்கை போன்றவற்றிற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய அவசியம் தேவையில்லை என
உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வாலெட்
இதனால் வங்கி கணக்கு திறக்கும் போது, புதிய மொபைல் இணைப்பு பெறும் போது,
அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சேவைகளை தொடர்வதற்கு ஆதார் நம்பரை
வழங்க வேண்டிய கட்டாயம் நீங்கியிருக்கிறது. ஆதார் தீர்ப்பை தொடர்ந்து
பலரும் தங்களது ஆதார் நம்பரை அவரவர் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலெட்
மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து டீலின்க் செய்ய ஆர்வம்
செலுத்துகின்றனர்.
பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள்:
வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதார் நம்பரை
டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள் அறியப்படாத நிலையில், பேடிஎம்மில் இருந்து
ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். எனினும்
வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதாரை டீலின்க் செய்ய
நினைப்போர் அருகாமையில் உள்ள அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
வழிமுறை 1:
பேடிஎம் வாடிக்கையாளர் சேவை மைய எண் @ 01204456456 அழைக்க வேண்டும்.
வழிமுறை 2:
ஆதாரை அன்-லின்க் செய்வதற்கான கோரிக்கையை விடுக்க வேண்டும்.
வழிமுறை 3:
இனி உங்களது ஆதார் கார்டின் தெளிவான புகைப்படத்தை இணைக்கக் கோரும்
மின்னஞ்சல் உங்களுக்கு வரும். இந்த மின்னஞ்சலில், "Dear Customer, in order
to process your request, we need you to send us a clear picture of your
updated Aadhaar card for validation purpose. Request you to share the
same with us." என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
வழிமுறை 4:
மின்னஞ்சலுக்கு பதில் எழுதி, உங்களின் ஆதார் கார்டு தெளிவான
புகைப்படத்தை இணைக்க வேண்டும்.
வழிமுறை 5:
பேடிஎம்மில் இருந்து உங்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் வரும், இதில் உங்களது
ஆதார் விவரங்கள் 72 மணி நேரத்திற்குள் டீலின்க் செய்யப்படும் என
குறிப்பிடப்பட்டு இருக்கும்.
வழிமுறை 6:
தெரிவிக்கப்பட்ட கால அளவு நிறைவுற்றதும், உங்களது ஆதார் டீலின்க்
செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஆதார் கார்டு விவரங்கள் டீலின்க்
இது கவலை அளிக்கிறது! மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை கொண்டு
எளிமையாக செய்துவிட முடியும் என்றாலும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
பொது மக்கள் தங்களது ஆதார் விவரங்களை அவரவர் வங்கி கணக்குகள், டிஜிட்டல்
வாலெட்கள் மற்றும் இதர சேவைகளில் இருந்து டீலின்க் செய்ய விரும்புகின்றனர்.
மேலும் டீலின்க் செய்ய, பேடிஎம் பயனர்களின் ஆதார் கார்டு புகைப்படத்தை
அனுப்பக் கோருகிறது. இதனால் பயனருக்கு சங்கடமான சூழல் ஏற்படுகிறது. எனினும்
பேடிஎம் கணக்கில் இருந்து ஆதார் கார்டு விவரங்களை டீலின்க் செய்ய மேலே
கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
எண்கணிதம் மற்றும் முன் ஜென்மம் ஆகிய இரண்டிற்கும் எதாவது ஒரு தொடர்பு
இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆம், இரண்டிற்கும் நேரடி தொடர்பு
உள்ளது.
ஆம், உங்கள் வாழ்க்கையில் ஒரு எண் தொடர்ந்து உங்கள்
செயல்பாடுகளில் வந்தவண்ணம் இருந்தால், அந்த எண் உங்களுக்கு முந்தைய ஜென்ம
பாடங்களைக் கற்றுக் கொடுக்க உதவுகிறது.
(தொடர்ச்சி கீழே...)
முன் ஜென்மம்
முன் ஜென்ம பிறப்பு எண்கள் பற்றி அறிந்து கொள்வதால் இதுவரை உங்களை
முன்னேற்றிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பற்றி உங்களால் உணர்ந்து கொள்ள
முடியும். இது தவிர வாழ்வின் மற்ற உண்மைகளைக் கூட அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள், என்பதைப் பற்றி அறிந்து
கொள்ள உதவுகிறது எண்கணிதம். இதனால் முன்ஜென்மத்தில் இருந்து நீங்கள் இந்த
ஜென்மத்திற்கு கொண்டுவந்துள்ள விசேஷ குணம் மற்றும் பாடங்கள் பற்றி ஒரு
சுருக்கமான செய்தியை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
எண் 1
எண்கணித கணிப்புகளில் எண் 1 இடம்பெற்றிருந்தால் , நீங்கள் உங்கள் ஆன்மாவைப்
பட்டினி போட்டிருப்பது தெரிய வரும். உங்களைத் தியாகம் செய்து மற்றவர்களை
மகிழ்விப்பீர்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை அனுபவிக்க அல்லது உணர
ஒருபோதும் நீங்கள் அனுமதிக்கவில்லை. உங்கள் முன்ஜென்மத்தில் சுய மரியாதை
மற்றும் சுய மதிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்திருக்கும்.
இந்த ஜென்மத்தில் இவற்றை முழுமையாக பெற சரியான நேரம் என்று நினைத்துக்
கொள்ளுங்கள். ஆழ் மனது அமைதியை நீங்கள் இந்த ஜென்மத்தில் உணர்ந்து
பாருங்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை உணர மற்றவர்களிடம் அனுமதி
கேட்காதீர்கள்.
எண் 2
முன்ஜென்மத்தில் பொருள் தேடி அலையும் நிலை தான் உங்களுக்கு
இருந்திருக்கும். உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சம்பாதிக்க போராட
வேண்டி இருந்திருக்கும். பணத்தை தேடி ஓடிகொண்டே இருந்திருப்பீர்கள். என்ன
நடந்திருந்தாலும் உங்கள் ஆன்மா பசியோடு இருந்திருக்கும்.
இந்த கர்ம வினை உங்களுக்கு உணர்த்த விரும்பும் பாடம் என்னவென்றால், இந்த
உலகில் பொருள் என்பது எல்லாம் அல்ல, அதைத் தாண்டி சில விஷயங்கள் இந்த
உலகில் உள்ளது என்ற கருத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. நீங்கள்
வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு நீங்கள் முழுமை பெற்றதாய் உணர்வதை
நிறுத்துங்கள், உங்கள் செயல்களால் நீங்கள் முழுமை பெறுகிறீர்கள் என்பதை
இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ளுங்கள்.

எண் 3
உங்கள் முன்ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தின் ஆரம்ப நிலைகளில்
உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தீர்கள் என்று உங்களால் கூற முடியாது.
உங்கள் மனதில் உள்ள கருத்துகளை உங்களால் சரியாக வெளியில் சொல்ல முடியாது.
எப்போதும் ஒரு அசௌகரிய மனநிலை, தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், சுய
மதிப்பு குறைபாடு ஆகியவற்றுடன் இருப்பீர்கள்.
ஒருவித அடக்குமுறை காரணமாக உங்கள் தனித்தன்மையை வெளிபடுத்தும் வாய்ப்பு
சிறிதளவு கூட இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தில் உங்களுக்கான
பாடம், நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்களை முழுவதும் வெளிபடுத்துவது
என்பதாகும் . வாய் திறந்து பேசுவதால் உண்டாகும் நன்மைகள் இப்போது
உங்களுக்கு புரிய தொடங்கும்.
எண் 4
பாரம்பரியம், குடும்பம், வீடு என்று வரும்போது ஒரு சந்தோசம் இல்லாத
சூழ்நிலை உங்கள் முன்ஜென்மத்தில் இருந்திருக்கும். எண்கணிதம் மற்றும்
முன்ஜென்ம நிலைகளை ஆராயும்போது, 4ம் எண்ணைக் கொண்டவர்கள் அனாதையாக ,
கைவிடப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். சின்ன சின்ன சந்தோஷங்களும் தடை
செய்யப்பட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எதற்காகவும் உங்கள்
மனதைரியத்தை இழக்க வேண்டாம்,
இந்த வாழ்க்கையில் நீங்கள் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுக்கலாம். அன்பு செய்ய
கற்றுக் கொள்ளலாம். அன்பு, ஆதரவு, கருணை, இரக்கம் ஆகியவற்றுடன் நீங்கள்
ஆதரவாக இருக்கலாம். உங்களுக்கும் இந்த இன்பம் கிடைக்கும், மற்றவர்களுக்கும்
நீங்கள் இந்த சந்தோஷத்தை பகிர்ந்தளிக்கலாம்.
எண் 5
முன்ஜென்மத்தில் மற்றவரிடம் இருந்து நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்கான
வழிகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் நீங்கள் சுயநலவாதியாகவும்
தேவைகேற்ப செயல்படும் ஆளாகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு வேண்டியதை
செய்ய முடியாதவர்களை நீங்கள் மதிப்பதில்லை.
இந்த முறை, மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற ரீதியில்
அவர்களை மதிப்பீடு செய்யாமல், அவர்கள் யார் என்ற நோக்கத்தில் மதிப்பீடு
செய்வது நல்லது. உங்கள் சொந்த நம்பகத் தன்மை மற்றும் உறுதிப்பாட்டைக்
கண்டறிவதற்கு போதுமான அளவுக்கு உங்களை மதிக்க வேண்டும் என்பதை நீங்கள்
கற்றுக்கொள்ள வேண்டும்.
எண் 6
கடந்த காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக
இருந்திருக்காது. வாழ்க்கை முழுவதும் உடல்நலக் குறைபாடு, மனநிலையில்
மாற்றம், உணர்வுரீதியான தொந்தரவு ஆகியவை இருந்திருக்கும். எதிலும் ஈடுபாடு
இருக்காது. உங்கள் குடும்பதில் உள்ளவர்களுக்கு உங்கள் மேல் அக்கறை
செலுத்துவது கடினமாக இருப்பதால் நீங்கள் கைவிடப்பட்ட நிலையில்
இருந்திருப்பீர்கள்.
நீங்கள் அன்புக்காக ஏங்குவீர்கள்.
இந்த ஜென்மத்தில் எல்லா விதத்திலும் ஒரு சமநிலை உண்டாக, ஒரு அனுபவப்பெற்ற
வளர்ச்சி மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள
வேண்டும். நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர வேண்டும்.
உங்கள் உடல், மனம், ஆன்மீகம், உணர்வு ஆகியவற்றை சார்ந்த தேவைகளைக் குறித்து
கவனம் செலுத்துங்கள். இதனை செய்யவில்லை என்றால், சுய நாசம் அல்லது
போதைக்கு அடிமையாவது போன்ற நிலை உண்டாகும்.
எண் 7
நீங்கள் ஒரு போட்டி மனநிலையில் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த
ஜென்மம் தேவையே இல்லை. ஆனால் இப்போது இந்த ஜென்மத்தில் வாழ்வில்
ஒன்றோடொன்று இணையும் தன்மையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கருணை மற்றும் புரிதலை விதைக்க வேண்டும். மற்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும்.
முன்ஜென்மத்தில் மற்றவர்களுடன் இணைவதில் உங்களுக்கு பெரிய போராட்டம்
இருந்திருக்கும், நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தீர்கள்; சூழ்நிலைகளால்
இந்த நிலை உந்தப்பட்டிருக்கலாம், அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த
முடிவாகவும் இருக்கலாம்.
எண் 8
உங்கள் எண் கணிப்பு அறிக்கையில் இந்த எண் தோன்றுகையில், கடந்த காலத்தில்
உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழித்தீர்கள் என்பதை இது காட்டுகிறது.
இந்த நிலை உங்கள் முன்ஜென்மத்தில் மட்டுமில்லாமல் இந்த ஜென்மத்தின் கடந்த
காலத்தில் கூட இருக்கலாம். உண்மை என்ன என்று பார்ப்பதை விட நீங்கள் என்ன
பார்க்க விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பார்க்கும் தன்மை உடையவராக
இருக்கிறீர்கள்.
எதையும் சாதிப்பதற்கு நீங்கள் உந்தப்படவில்லை. மாறாக நீங்களே நகர்ந்து
செல்கிறீர்கள். உங்கள் இருப்பு பற்றிய உண்மையை அறிந்து கொள்ள கடுமையாக
முயற்சியுங்கள், நீங்கள் வாழ்வதன் நோக்கத்தைக் கண்டு பிடியுங்கள். கற்பனை
மாயைக்கு சரண் அடையாதீர்கள். இதுவே இந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள
வேண்டிய பாடம்.
எண் 9
உங்கள் முன்ஜென்மத்தில் உங்களுக்கு நடந்த நல்லவற்றை ஆராய்ந்து அறிவது
மிகவும் கடினம், ஏனென்றால் உங்களை கீழே விழச் செய்த விஷயங்கள் ஏராளம்.
ஒருவேளை நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கலாம்,, அழுக்கால்
சூழப்பட்டிருக்கலாம் , அல்லது உலகம் முழுவதும் போர், மரணம், அநாகரீகம்
நிறைந்த ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.
வாழ்வதற்கு ஏற்ற நிலை இதுவல்ல என்று உங்கள் ஆன்மா உணர்ந்திருக்கிறது.
உங்களைச் சுற்றி இருந்தவற்றை நீங்கள் வெறுத்தீர்கள். அழகு, சந்தோசம்,
மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க இந்த ஜென்மம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
எல்லா சூழ்நிலையிலும் நேர்மறை நிலையை எப்படி அடைவது என்பதை நீங்கள்
கற்றுக் கொள்வீர்கள்.
எண் 11
எண்கணிதம் மற்றும் கடந்த காலம் பற்றி அறிந்து கொள்ளும் சோதனையில் 11
மற்றும் 22 ஆகிய எண்கள் சிறப்பானவை. உங்கள் முன்ஜென்மத்தில் மிகவும்
வசதியாக இருந்தீர்கள். இது உங்களுக்கு மனநிறைவையும் கொடுத்தது. வெற்றியின்
உயரத்தையும் தோல்வியின் ஆழத்தையும் நீங்கள் உணர்ந்திருக்கவில்லை. நீங்கள்
மிகவும் அடக்கமாக இருந்தீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. உங்கள்
ஆன்மாவின் குரலை நீங்கள் கேட்கவில்லை. அந்த குரல் வளர்ந்து வளர்ந்து
ஜென்மம் முழுவதும் தொடர்ந்து , ஒரு வாய்ப்பிற்காக இன்று அறியப்படாத ஒரு
செயலில் இப்போது இறங்கும் நிலையில் உள்ளீர்கள். சாதனையின் உண்மையான உணர்வை
நீங்கள் பெறுவதற்கு உங்கள் வசதி மற்றும் தன்னிறைவை அடமானம் வைக்கலாம்
எண் 22
நீங்கள் எப்போதும் திறமை உள்ளவராக இருந்திருக்கிறீர்கள், ஆனால் அதனை
பகிர்ந்ததில்லை. ஒருவேளை அது உங்களால் முடியாமல் இருந்திருக்கலாம், அல்லது
உங்கள் பெருமையை பறைசாற்றிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல்
இருந்திருக்கலாம். உங்கள் தனித்தன்மையை கொண்டாடுவதற்கு பதிலாக அந்த
தன்மைக்குள் உங்களை பொருத்திக் கொண்டு வாழ்ந்திருக்கலாம்.
ஆழ்மனம்
இந்த ஜென்மத்திற்கான உங்கள் பாடம், உங்கள் படைப்பாற்றலை ஜொலிக்க வையுங்கள்,
நிழலில் ஒளிந்து கொள்ளாமல் நிஜத்தில் மிளிர்ந்திடுங்கள். மற்றவர் யாராலும்
செய்ய முடியாத செயல்களை செய்யும் திறமை உங்களுக்கு உண்டு. உங்கள் மனதின்
விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்தால், சந்தோஷத்தின் உச்சிக்கும், வெற்றியின்
எல்லைக்கும் நீங்கள் சென்று வரலாம்.
இந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பற்றி
புரிந்து கொள்வதற்கு முன் ஜென்மத்து பிறப்பு எண்களைப் பற்றி அறிந்து
கொள்வது அவசியமாகிறது. கடந்த ஜென்மத்தில் இருந்து நீங்கள் கொண்டு வந்த
கர்மம் மற்றும் ஆற்றல் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது இந்த ஜென்மத்தை
கையாள்வதில் ஒரு ஆழ்ந்த நுண்ணறிவை வழங்குகிறது.
முடிவுரை
உங்கள் வாழ்க்கை பாதை எண், உங்கள் கடந்த கால வாழ்க்கை கணக்கீடு உங்கள்
விதியை மற்றும் உங்கள் பாதையை தீர்மானிக்க உதவுகிறது, இதன் மூலம் நீங்கள்
உங்கள் வாழ்க்கையை இன்னும் சீராக செலுத்த முடியும்.
ஒன்னுல்ல, ரெண்டுல்ல, 15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை
வாரி சுருட்டி உள்ளார் மகாலட்சுமி என்ற பெண்!
மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார்.
சிங்கப்பூரில் வேலை பார்த்து
வருகிறார். இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி டைவர்சும் ஆகிவிட்டது.
அதனால் 2-வது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மேட்டர்மோனி மூலமாக ஒரு
பெண்ணை தேர்ந்தெடுத்தார். அவர் திருச்சியை சேர்ந்தவர். இவர்களுக்கு 2017-ம்
வருடம் திருமணம் நடைபெற்றது.
(தொடர்ச்சி கீழே...)
கர்ப்பமாக இருக்கிறேன்
கொஞ்ச நாள் புதுமண தம்பதி சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டினர். பிறகு வேலை
விஷயமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். ஒருநாள் தான் கர்ப்பமாக
இருப்பதாக போனில் மகாலட்சுமி சொன்னார். அப்பாவாக போகிற சந்தோஷத்தில்
உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்துவிட்டார்.
வாரி சுருட்டல்
மகாலட்சுமிக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு
வந்தார். ஆனால் அங்கே அவருக்கு அதைவிட பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.
மகாலட்சுமி வீட்டில் இல்லை. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து
வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும்
வாரி சுருட்டி கொண்டு மகாலட்சுமி எப்போதோ கிளம்பி போய் விட்டதாக
சொன்னார்கள்.
ஃபேஸ்புக் பதிவுகள்
செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார்,
எங்கெங்கோ மகாலட்சுமியை தேடினார், பிறகு போலீசில் மனைவியை காணோம் என்று
புகார் கொடுத்தார். இந்நிலையில், ஒருநாள் மகாலட்சுமியின் ஃபேஸ்புக்
பார்த்தபோது, ஏராளமான ஆண்களுடன் மகாலட்சுமிக்கு தொடர்பு இருந்திருக்கிறது
என்பது தெரியவந்தது.
ஜோடி ஜோடியாய் போட்டோ
நிறைய பேரிடம் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் என சொல்லியதுடன், ஆபாசமான
வார்த்தைகளையும் பதிவிட்டு இருப்பதை கண்டு உதயகுமார் உறைந்து நின்றார். அது
மட்டும் இல்லை, மகாலட்சுமிக்கு ஏற்கனவே 15 பேருடன் கல்யாணம் ஆகி உள்ளது, 6
மாசத்துக்கு ஒரு கல்யாணம், கருவுற்று அதனை கலைத்தும் உள்ளது, ஜோடி
ஜோடியாய் வேறு வேறு ஆண்களுடன் இருக்கும் போட்டோக்களை பார்த்து தலை சுற்றிப்
போய் கிடக்கிறார் உதயகுமார்.
நகை, பணம்
இந்நிலையில், உதயகுமார் எட்டி உதைத்து கருவை கலைத்துவிட்டதாக திருச்சி
போலீசில் புகார் வந்ததால் மேலும் அதிர்ச்சியடைந்தார். இதனால் தன்னை போலவே
15 பேரை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து தருமாறும், அவரிடமிருந்து தனது
பணம், நகைகளை மீட்டு தருமாறும் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும்
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளதற்கான
ஆதாரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் உதயகுமார்.
தற்கொலை மிரட்டல்
திருச்சியில் நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் "அப்பா இல்லைன்னு
சொன்னாள். அதனால ரொம்ப அக்கறை காட்டினேன். முதல் புருஷன் கர்ப்பத்தை காலால்
எட்டி உதைத்து கலைத்ததாக புகார் கூறி, விவாகரத்தும், பணமும் கறந்துள்ளார்.
இப்படியே 15 பேரை ஏமாற்றி இருக்கிறார், கையை பிளேடால் அறுத்து தற்கொலை
செய்வதாக சொல்லியே நகை, பணத்தை அபேஸ் செய்துள்ளார். என்மேலயும்இப்போ புகார்
சொல்லி இருக்கிறார்.
ஆந்திராவில் மகாலட்சுமி
இது சம்பந்தமாக நான் கோர்ட்டுக்கு போக போறேன். 15 பேரை ஏமாற்றியதற்கான
ஆதாரம் என்கிட்ட இருக்கு. இப்போ ஆந்திரா பக்கம் போயிருக்கிறாள். அங்க
எத்தனை பேரை ஏமாற்ற போகிறாளோ தெரியவில்லை. யாரோ பெரிய பணக்காரர்
மகாலட்சுமிகிட்ட சிக்கி இருக்கிறதா கேள்விப்பட்டேன். இனிமே அவளிடம் யாரும்
ஏமாற கூடாதுன்றதுக்காக இதை சொல்றேன், போலீசார் இது சம்பந்தமாக நடவடிக்கை
எடுக்கணும்னு கேட்டுக்கறேன்" என்றார்.
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், பிரிந்து சென்ற அண்ணனை 53 ஆண்டுகளுக்குப் பிறகு, டிவி நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். அம்முதாசனின்
பெற்றோருக்கு 14 குழந்தைகள். இவர்களில் 8 பேர் பிறந்ததுமே இறந்து விட்டனர்.
6 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களில் தாசன், அம்மு என்ற சகோதரி
இறந்த பிறகு பிறந்ததால் அவருக்கு பெற்றோர் சகோதரியின் பெயரையும் சேர்த்து
அம்முதாசன் என்று அழைத்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
அம்முதாசன் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து போன்றவற்றை நடத்தி
வந்தார். இதற்காக வெளியூர் சென்ற போது அம்மினி என்ற பெண்ணை சந்தித்தார்.
இருவரும் காதல் வசப்பட்டனர். பின்னர் அம்முதாசன் குடும்பத்தை பிரிந்து
அம்மினியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க சென்னை சென்றார். அங்கு
கோடம்பாக்கத்தில் தங்கி இருந்து சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்தார். ஒரு
சில படங்களில் சிறுசிறு வேடங்கள் கிடைத்தது.
இதில் போதிய வருமானம் இல்லாததால் அம்முதாசன் மீண்டும் கேரளா திரும்பினார்.
நெடும்பாசேரியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.
அம்முதாசனின் மருமகன் ஒருவர் சமீபத்தில் மலையாள டெலிவிஷன் சேனல் நடத்திய
ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அப்போது மாமா அம்முதாசனையும் அழைத்துச்
சென்றார். அவரை பற்றிய தகவல்களை கூறும் போது குடும்பத்தை பிரிந்து 53
ஆண்டுகளாகிறது என்றும் அவரின் இளமை கால சம்பவங்களையும் கூறினார்.
இந்த தகவல்கள் டெலிவிஷனில் ஒளிபரப்பானது. அதனை கண்ணூரில் உள்ள சிலர்
பார்த்தனர். அவர்களுக்கு அந்த நபர் அம்முதாசன் என தெரிய வந்தது. அவர்கள்
இது பற்றி கண்ணூரில் வசித்த அம்முதாசனின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணனிடம்
தெரிவித்தனர்.
அவர் மூலம் அம்முதாசனுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் அவர்களின் குடும்ப
விவரங்கள் பரிமாறப்பட்டன. இதன் மூலம் அம்முதாசனின் இளைய சகோதரர் பால
கிருஷ்ணன் என்பதை இருவரும் உறுதி செய்து கொண்டனர்.
இதையடுத்து பால கிருஷ்ணணும், அம்முதாசனும் குடும்பத்தினருடன் சந்தித்தனர்.
அப்போது மகிழ்ச்சி மிகுதியில் கட்டி அணைத்து கொண்டனர். இது பார்த்தவர்
கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
53 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரை பிரிந்து சென்றவர் இப்போது மீண்டும்
குடும்பத்துடன் இணைந்தது கண்ணூர் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக
பேசப்பட்டது.
விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரிடம் பணம்
வாங்கிய நடிகை மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.
சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாமனிதன்.
அந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடந்து வருகிறது. கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவில் படப்பிடிப்பு நடந்தது.
அங்கு ஒரு மூதாட்டி வந்து மருந்து வாங்க பணம் வேண்டும் என்று விஜய்
சேதுபதியிடம் கேட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி உடனே தனது மேனேஜரை அழைத்து தனது பர்ஸை எடுத்து வரச் சொல்லி
அந்த மூதாட்டிக்கு பணம் கொடுத்தார். அவர் பணம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட
வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
மருத்துவர்கள்
விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கிய மூதாட்டி செட்டில் இருந்து கிளம்பியபோது
மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே
இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மலையாள படங்கள்
விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கியவர் மலையாள நடிகை கவலம் அச்சம்மா என்பதும்
அவர் ஜெயராமின் ஞான் சல்பேரு ராமன்குட்டி உள்ளிட்ட சில மலையாள படங்களில்
நடித்ததும் தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி
மருந்து வாங்க பணம் இல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகை மயங்கி
விழுந்து உயிர் இழந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய
வைத்துள்ளது.