வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 29, 2020

திருக்கழுக்குன்றத்தில் ஒளி, ஒலி அமைப்பு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய மத்திய மாவட்ட அ.தி.மு.க. | Corona Relief Given by ADMK for Sound service Work Related People

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம்  பகுதியில் உள்ள ஒளி, ஒலி அமைப்பின் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர்  முன்னிலையில் வழங்கினார்.


இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஒளி, ஒலி  தொழிலாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் திருக்கழுக்குன்றம் விநாயகம்  ஒன்றிய பொறுப்பாளர்கள் வேலு, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர், இறுதியில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

[சற்றுமுன்] ஆர்.டி.ஓ. அதிரடி சீல்.! வரம்பு மீறிய மற்றும் காலாவதியான பொருட்களை விற்ற மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு | Madurantakam RDO Seal Shops

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட செய்யூர், சூணாம்பேடு, மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 சலூன் கடைகள், 1 பேன்சி ஸ்டோர் போன்ற கடைகள் 144 தடை உத்தரவினை மீறி செயல்பட்டதால் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது சீல் வைக்கப்பட்டது. 


காவல் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஊரடங்கு நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய 1 மளிகை கடைக்கும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது. 


சமூகப் பொறுப்புகளுக்காகவும், மக்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காகவும் மதுராந்தகம் கோட்டாட்சியரின் இந்த ஆய்வு வேட்டை தொடருமா…? என எதிர்பார்ப்பில் உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.


 

 

 

 

 

 


அதிர்ச்சி ரிப்போர்ட்.! 100 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு.! 32 லட்சம் உயிரிழப்பு.! Corona Latest News

கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். 32 லட்சம் பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்படும். - பன்னாட்டு மீட்பு குழு (IRC -International rescue committee)
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பேரிடராக இருக்கிறது கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு.

இந்த தொற்றானது வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என பேதமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது.

இந்த கொரோன வைரஸால், இதுவரை உலக முழுக்க 31,38,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,18,010 பேர் இந்த கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 9,56,064 பேர் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இந்நிலையில் பன்னாட்டு மீட்பு குழு அமைப்பானது (IRC -International rescue committee) அண்மையில் தனது இணையதள பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 100 கோடி பேர் வரையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், 32 லட்சம் பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால், ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா போன்ற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும். எனவும் குறிப்பிட்டு விரிவான செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தியானது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Corona Relief Given by ADMK at Manamai Mahabalipuram


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில்  அப்பகுதியில் உள்ள இருளர் இன மக்களுக்கும், மணமை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தேவையா அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி ராகவன் ஏற்பாட்டில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மணமை ஊராட்சி செயலாளர் எஸ் ஆர் பிரகாசம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சோமு சமூக ஆர்வலர் கமலக்கண்ணன், உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருக்கழுக்குன்றத்தில் பாஜக சார்பில் கோவில் பணியாளர், பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் | Corona Relief Given by BJP at Thirukazhukundram


கொரோனா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் தலைமையில் மாநில இளைஞரணி செயலாளர் துரை தனசேகரன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பலராமன்திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர், அகஸ்திய கிருபா அன்புச்செழியன் ஆகியோரின் முன்னிலையில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் என 200 குடும்பங்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் இந்து முன்னணி அமைப்பின் காஞ்சி மாவட்ட தலைவர் ஆர்.டி.மணி, துணை தலைவர் மணிகண்டன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பொறுப்பாளர் சரவணன் உள்பட பாஜக நிர்வாகிகள், தனசேகர பாண்டியன், மதன்குமார், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.