Run World Media: 10/21/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 21, 2018

[பகீர் வாக்குமூலம்] அமிர்தசரஸ் ரயில் விபத்து: ரயில் ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தின் போது தனக்கு கிரீன் சிக்னல் தான் வழங்கப்பட்டதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக வாண வேடிக்கை நடத்தப்பட்டது. அதனை காண மக்கள் பலர் குவிந்திருந்துள்ளனர். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் நின்று வாண வேடிக்கையை பார்த்துள்ளனர். அப்போது அமிர்தசரசிலிருந்து ஜலந்தர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.


இதில் 61 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சுமார் 70வதுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து பேசியுள்ள ரயில் ஓட்டுநர், விபத்தின் போது தனக்கு கிரீன் சிக்னல் தான் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். விபத்து நேர்ந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால், அங்கு மக்கள் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது பற்றி தமக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.


ரயில்வே டிராக்கிற்கு பக்கத்திலே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி எற்பாட்டாளர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் Me Too....நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை மறுத்துள்ள அர்ஜுன், மானநஷ்ட வழக்கு  தொடரப்போவதாக கூறினார். தமிழ் மற்றும் கன்னட படங்களில் பிரபலமாக  அறியப்பட்டவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். 

இவர் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன்  ‘மி டூ’வில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும், நடிகர் அர்ஜூனும் இணைந்து நடித்த  கன்னட படம் விஷ்மயா (தமிழில் நிபுணன்). இதில் இருவரும் கணவன் -மனைவியாக  நடித்தோம். அப்போது நெருக்கமான காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்கப்பட்டது. 


அதில் என்னை கட்டி அணைத்த அர்ஜூன், பின்பக்கம் கைகளை பரவவிட்டார்.  திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். பிறகு படப்பிடிப்பு  நடக்கும் இடத்தில் அனுமதியின்றி தொட்டு பேசுவது, தவறான கண்ணோட்டத்தில்  பார்த்தது மட்டுமின்றி தனியாக ரிசார்ட்டில் சந்திக்கலாம் என்று அழைப்பு  விடுத்தார். 


இதுகுறித்து இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று  பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றச்சாட்டை மறுத்துள்ள  நடிகர் அர்ஜூன் கூறியதாவது: நடிகை ஸ்ருதி ஹரிஹரன்  தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பதில்  சொல்ல முடியாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன். சினிமா துறையில் என்னுடன் குறைந்தபட்சம் 60க்கும் மேற்பட்ட நடிகைகள் இணைந்து  நடித்துள்ளனர்.  


தற்போதும் தொடர்ந்து சிலர் நடித்து வருகின்றனர். அவர்கள் யாரும் இது போன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கவில்லை. எனக்கும் திருமண  வயதில் மகள்கள் இருக்கின்றனர். ஓராண்டுக்கு முன்பு வெளியான படத்தில்  அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால் அதை அப்போதே வெளிப்படுத்தியிருக்கலாம்.  ஆனால் தற்போது உள்நோக்கத்துடன் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்  குற்றம்சாட்டியுள்ளார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்  என்றார்.


நடிகையின் குற்றச்சாட்டு  குறித்து விஷ்மயா பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கை:  அர்ஜூன், ஸ்ருதி ஹரிஹரன் இருவரும் தங்கள் தொழிலில் மிகுந்த ஈடுபாடு  உடையவர்கள். படத்தில் நெருக்கமான காட்சிகள் வசனங்களை பார்த்த அர்ஜூன்,  எனக்கு திருமண வயதில் மகள் இருக்கிறாள், இது போன்ற காட்சிகளில் நடிக்க  முடியாது மாற்றுங்கள் என்று சொன்னார். நாங்களும் காட்சியையும், வசனத்தையும்  மாற்றினோம். இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். நடிகை ஸ்ருதியின்  குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகட்ட விண்ணப்பிக்கலாம்காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தின்கீழ் வீடு கட்ட விண்ணப்பிக்கலாம். ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டிக்கொள்ளும் வகையில், தகுதியான பயனாளிகள் ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தகம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை கிராம ஊராட்சி செயலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் அளித்து கணக்கெடுப்பில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வீடுகள் திட்டப்பிரிவிலும் இதுதொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்