எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
பிக் பாஸ் 3 பிரபலம் மீரா மிதுன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கக் கோரி ட்விட்டரில் வீடியோக்கள்
வெளியிட்டார். தமிழக அரசின் மெத்தனத்தை அவர் விமர்சித்தார். சுஜித்தை
உயிருடன் மீட்க முடியாமல் போனது குறித்து அறிந்த மீரா அழுதபடியே
வீடியோக்கள் வெளியிட்டார்.
உயிருக்கு போராடிய சுஜித் தற்போது சொர்க்கத்தில் இருப்பார் என்று தெரிவித்தார். அவரின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சுஜித் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது உள்ளாடை அணியாமல் கொசு வலை
போன்று உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டவர் தானே நீங்கள் என்று சமூக
வலைதளவாசிகள் விளாசியுள்ளனர்.
மீரா பற்றி நெட்டிசன்கள் மேலும் கூறியிருப்பதாவது,
சுஜித் மீது உண்மையாகவே அக்கறை இருப்பது போன்று நடித்து நீலிக் கண்ணீர்
விட வேண்டாம். நீங்கள் முதலில் ஒழுங்காக உடை அணியவும். மும்பைக்கு போன
உடன் பேண்ட், உள்ளாடை போட மறந்துவிட்டதா?. தயவு செய்து இனியும் நான் ஒரு
தமிழ் பெண் என்று மட்டும் கூற வேண்டாம்.
நீங்கள் செய்யும் செயல்களை
பார்த்து ஓ, தமிழ் பெண்கள் இப்படித் தானா என்று இந்திக்காரர்கள் தவறாக
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். இதுவே முதல்வர் வீட்டு குழந்தையாக இருந்தால் இந்நேரம் மீட்டிருப்பார்கள்: -மீரா மிதுன்
.
தமிழக அரசின் மெத்தனத்தை விமர்சிப்பது இருக்கட்டும் முதலில் நீங்கள்
அடக்க, ஒடுக்கமாக நடந்து கொள்ளுங்கள். தமிழ்நாடே வேண்டாம் என்று தானே
மும்பைக்கு சென்றீர்கள். தற்போது என்ன திடீர் அக்கறை என்று கேள்வி
எழுப்பியுள்ளனர்.
சுஜித் குடும்பத்தில் நான்கு மாதத்திற்கு முன்புதான் ஒரு துயரம்
நடந்துள்ளது. அது சுஜித்தின் பெரியப்பா கிணற்றில் விழுந்து பலியான பெரும்
சோகம். நான்கு மாதம் கழித்து சுஜித் போர்வெல் கிணற்றில் விழுந்து இறந்ததால்
குடும்பமே பெரும் சோகமாக உள்ளது.
விடாமல் துரத்தும் சோகம் என்று சொல்வார்கள். அது சுஜித் குடும்பத்தில்
நிஜமாகியுள்ளது. இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே ஒரு துயரச் சம்பவம் நடந்து
நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் சுஜித்தையும் அவர்கள்
இழந்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் சுஜித்தின் பெரியப்பா கிணற்றில்
விழுந்து இறந்தார். அதாவது சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜின்
பெரியப்பா மகன் ஜான் பீட்டர். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
விடுமுறையில் கடந்த மே மாதம் ஊருக்கு வந்திருந்தார்.
கோழி
இவரும் நடுக்காட்டுப்பட்டிதான். பிரிட்டோ வீட்டுக்கு அருகில்தான்
இவரது வீடும் உள்ளது. வந்த இடத்தில் வீட்டிலிருந்த கோழி ஒன்று வேகமாக
வெளியே ஓடியது. வேகமாக ஓடிய அந்தக் கோழி அருகில் இருந்த திறந்தவெளி
கிணற்றில் விழுந்து விட்டது.
உயிரிழந்தார்
இதையடுத்து கயிறு கட்டி ஜான் பீட்டர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். கோழியை
மீட்டுக் கொண்டு மேலே வந்தபோது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விட்டது.
இதனால் மேலே இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாக
உயிரிழந்தார். இதையடுத்து அந்த கிணற்றை மூடி விட்டனர்.
பச்சைக் குழந்தை
இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் சுஜித்தை பறி கொடுத்துள்ளது பீட்டர்
குடும்பம். அடுத்தடுத்து இரு துயரங்கள், அதுவும் ஒரு பச்சைக் குழந்தையின்
மரணம், அதுவும் இருவருமே கிணற்றில் விழுந்து பலியாகியிருப்பது பீட்டர்
குடும்பத்தினரை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
பிஞ்சு உயிர்
ஜான் பீட்டர் இறந்ததும் அந்தக் கிணற்றை மூடியவர்கள், பீட்டர்
ஆரோக்கியராஜின் வீட்டுக்கு முன்பு திறந்த நிலையில் கிடந்த போர்வெல்லையும்
கவனித்து மூடியிருந்தால் சுஜித் தப்பியிருப்பான். அதில் கவனக்குறைவு
ஏற்பட்டதால் இன்று ஒரு பிஞ்சின் உயிர் பறி போயுள்ளது.
கடும் மழைப்பொழிவு காரணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்திரவிட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியர்கள்.
இரவிலிருந்தே கடும் மழை பொழிந்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
இன்ஸ்டாகிராமில் இருந்து தன்னுடைய படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக நடிகை
கஸ்தூரி புகார் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் எப்போதும் தீவிரமாக இயங்கி வருகிறவர் நடிகை கஸ்தூரி. சமூக
விஷயங்கள் மட்டுமல்லாது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் உடனுக்குடன் அவர்
பதிவிட்டுவிடுவார்.
பல சமயங்களில் கஸ்தூரியின் டிவீட்டுகள் சர்ச்சையை
ஏற்படுத்தி இருக்கின்றன.
டிவிட்டரில் சர்ச்சை ராணியாக இருப்பதாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில்
பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அங்கு அவரால் வெகுநாட்கள்
தாக்குப்பிடிக்க முடியவில்லை. போன வேகத்திலேயே திரும்ப வந்துவிட்டார்.
இன்டாகிராம் புகைப்படங்கள்
கஸ்தூரி இப்போது இன்ஸ்டாகிராமிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட படுக்கையறை செல்பிகள் பரபரப்பை கிளப்பின.
கஸ்தூரி தனது நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் என
நினைத்து, நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர்.
புகைப்படங்கள் நீக்கம்
இந்நிலையில் கஸ்தூரியின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து
நீக்கப்பட்டுள்ளன. தங்களுடைய விதிமுறைகளை மீறும் வகையில் கஸ்தூரியின்
போட்டோக்கள் இருப்பதாகக் கூறி இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அவரது புகைப்படங்களை
நீக்கியுள்ளது.
காரணம் சரியா?
இன்ஸ்டாகிராமின் இந்த விளக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கஸ்தூரி டிவீட்
செய்துள்ளார். அதில், "இன்ஸ்டாகிராமில் இருந்து எனது போட்டோக்கள் தொடர்ந்து
நீக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் விதிமுறைகளை நான் மீறியதாகக்
கூறுகிறார்கள். இதில் என்ன விதிமுறை மீறல் இருக்கிறது என பார்த்து
சொல்லுங்கள்", என அவர் கேட்டுள்ளார். மேலும் கிண்டல் செய்பவர்கள் உடனடியாக
பிளாக் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
வனிதா அக்கா
இன்ஸ்டாகிராம் பதிவில் 'ரியல் ஸ்கின்' என கேப்ஷன் கொடுத்திருந்தது தான்
பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எல்லாம் அந்த வனிதாக்கா வேலையா தான் இருக்கும் என சிலர் கமெண்ட்
செய்துள்ளனர். கஸ்தூரியின் எச்சரிக்கையையும் மீறி சிலர் கேலியாக கமெண்ட்
செய்துள்ளனர்.
தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர் சிக்கியுள்ளார். அவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் அருகே உள்ள செல்லூர் பகுதியை சேர்ந்தவர் கொங்காரா ராமிரெட்டி. இவர் பி.டெக் பட்டதாரி ஆவார். இவரது வீட்டிற்கு அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதி சித்தூர் ரயில்வே ஜங்ஷன் எல்லைக்குள் வருகிறது. இந்த பகுதியை கடக்கும் லோகோமோட்டிவ் டிரைவர்கள், தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருள் அவ்வப்போது இருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.
எனவே இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை உடனடியாக விசாரணை நடத்த தொடங்கியது. ஆனால் லோகோமோட்டிவ் டிரைவர்களின் புகார் தொடர்பாக எவ்விதமான தடயமும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு சிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவ தொடங்கியது.
இந்த வீடியோ கொங்காரா ராமிரெட்டியின் வீட்டிற்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ரயில் வரும் நேரத்தில், தண்டவாளத்தின் ஒரு பகுதியில் மோட்டார்சைக்கிளையும், மறு பகுதியில் எல்பிஜி கேஸ் சிலிண்டரையும் வைத்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ரயில் நெருங்கி வந்த உடனேயே தண்டவாளத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் எடுக்கப்பட்டு விட்டது.
எனினும் சிலிண்டரின் மீது ரயில் மோதியது. இதனால் சிலிண்டர் தூக்கி வீசப்பட்டது. மிகவும் வைரலாக பரவ தொடங்கிய இந்த வீடியோ, ரயில்வே பாதுகாப்பு படையின் கவனத்திற்கும் உடனடியாக சென்றது. எனவே இது தொடர்பான விசாரணையை ரயில்வே பாதுகாப்பு படை மீண்டும் முடுக்கி விட்டது. இந்த வீடியோவில் இருந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், இந்த பைக் கொங்காரா ராமிரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை ரயில்வே பாதுகாப்பு படை கண்டறிந்தது. எனவே கொங்காரா ராமிரெட்டியை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை கொங்காரா ராமிரெட்டி வெளியிட்டுள்ளார். கொங்காரா ராமிரெட்டி யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில், ரயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்து வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வந்துள்ளன. அதாவது ரயில்வே தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருளை கொங்காரா ராமிரெட்டி வைத்து விடுவார். இதன்பின் அந்த பொருளின் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து யூ-டியூப்பில் வெளியிடுவார். கொங்காரா ராமிரெட்டி இதுவரை 47 வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றியுள்ளார். இதில், 43 வீடியோக்கள் மிகவும் அபாயகரமானவையாக இருந்துள்ளன. காய்கறிகள், பழங்கள், சிக்கன் துண்டுகள், பொம்மைகள், பட்டாசுகள், சைக்கிள் செயின்கள் உள்ளிட்ட பொருட்களை ரயில்வே தண்டவாளங்களில் வைத்து அவர் வீடியோக்களை எடுத்துள்ளார். ஆனால் அந்த வீடியோக்கள் பெரிய அளவில் வைரல் ஆகவில்லை. தற்போதைய கால கட்டத்தில் வீடியோக்கள் மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடிகிறது. எனவே அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்பதற்காகவும் ஒரு சிலர் இணையத்தில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கின்றனர். இதன் விளைவுதான் கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட பைக், சிலிண்டர் வீடியோ. வீடியோ வைரல் ஆகி அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகதான் கொங்காரா ராமிரெட்டி இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் நினைத்தபடியே வீடியோ வைரல் ஆகி விட்டது என்பதோ உண்மைதான். ஆனால் அதன் விளைவாக கொங்காரா ராமிரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், விசாரணைக்கு பின் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். ரயில்வே சட்டம் 1989ன் செக்ஸன் 153 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் கொங்காரா ராமிரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட வீடியோக்கள் தற்போது அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. விரைவாக புகழ்பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற முட்டாள்தனமான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. ஏனெனில் இது போன்ற செயல்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட வீடியோவில் இருந்தது ஹோண்டா சிபி ஷைன் பைக் ஆகும். ரயில் மோதுவதற்கு முன்பாக அந்த மோட்டார்சைக்கிள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் எல்பிஜி சிலிண்டரின் மீது ரயில் மோதியுள்ளது.
ரயில் மோதிய சிலிண்டரில் கேஸ் இருந்ததா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாக இதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இல்லாவிட்டால் சிலிண்டர் வெடித்திருக்கலாம். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம். பொதுவாக ரயில்வே தண்டவாள பாதுகாப்பு என்பது மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் அவ்வாறு இருப்பதில்லை. சில சமயம் ரயில்கள் வரும் நேரத்தில் வாகனங்கள் தண்டவாளங்களில் சிக்கி கொள்ளும் சம்பவங்களும் கூட நடக்கின்றன. எனினும் அதிர்ஷ்டவசமாக ரயில் மோதுவதில் இருந்து அவை தப்பி விடுகின்றன.
அத்துடன் நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் தவறான நேரத்தில் தண்டவாளங்களை கடக்கின்றனர். இதன் காரணமாகவும் சில சமயங்களில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இது போன்ற செயல்களை செய்வதும், ரயில் வரும் நேரத்தில் தண்டவாளங்களில் ஏதேனும் பொருட்களை வைப்பதும் மிகவும் அபாயகரமானது.
சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் (24). இவர், சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரஞ்சனி (எ) சரண்யா (20). இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன.
ஆனால், குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடித் தகராறு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில், ரஞ்சித் வீட்டின் கதவு நேற்று காலை நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். ஆனால், திறக்கப்படவில்லை. இதையடுத்து, ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது படுக்கையறையில் ரஞ்சித்தும் சரண்யாவும் படுத்திருந்தனர்.
அவர்களை சத்தம் போட்டுக் கூப்பிட்டுப் பார்த்தும் இருவரிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தற்கொலை
இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் சரண்யா சடலமாகக் கிடந்தார். அவரின் கழுத்தில் காயங்கள் இருந்தன. மேலும், படுக்கையறையில் தூக்கு போட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
ரஞ்சித், மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் அவரை மீட்ட போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சரண்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சரண்யாவின் சடலத்தை போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சி கலந்த சோகமான தகவல்கள் வெளியாகின.
ரஞ்சித்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரஞ்சித், ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இவரின் உறவினர்தான் சரண்யா. சரண்யாவின் அம்மா வீடு, பூச்சி அத்திபேடு, புதுகுப்பம் கிராமத்தில் உள்ளது.
இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் ரஞ்சித் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த சரண்யா, தற்கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 13-ம் தேதி இரவு வழக்கம்போல கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
14-ம் தேதி காலையில் வீட்டை விட்டு ரஞ்சித் வெளியில் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் சரண்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்குத் திரும்பிவந்த ரஞ்சித், மனைவி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் மனைவியின் சடலத்தை கீழேக் இறக்கினார். அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்றார்.
மதுபானம் வாங்கிவந்த அவர், வீட்டிலிருந்த டீசலை அதில் கலந்தார். அதனைக் குடித்துவிட்டு மனைவியின் சடலத்தோடு ரஞ்சித் படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் ரஞ்சித் மயங்கிவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் மனைவியின் சடலத்தோடு ரஞ்சித் மயங்கிக் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி ரஞ்சித்தை மீட்டுள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு
உயர்ந்து வருகிறது. எனவே கார் அதிக மைலேஜ் கொடுக்க வேண்டும் என அனைவரும்
விரும்புகின்றனர். இதற்காக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மற்றும்
நிரூபிக்கப்படாத பல்வேறு வழிமுறைகளை கார் உரிமையாளர்கள் பின்பற்றுகின்றனர்.
உண்மையில் உங்கள் காரில் இருந்து அதிக மைலேஜை பெறுவது மிகவும்
எளிமையானதுதான். ஒரு சில சிறிய விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றினாலே
உங்கள் காரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் மைலேஜை எளிதாக பெற்று விட
முடியும். உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அதிக மைலேஜ் பெறுவதற்கான
டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஐடிலிங்:
காரை நீண்ட நேரம் ஐடிலிங்கில் (IDLING) விடுவதை இன்றோடு விட்டு விடுங்கள்.
கார் நீண்ட நேரத்திற்கு ஐடிலிங்கில் இருந்தால், உண்மையில் நீங்கள் எங்கும்
போகாமலேயே வீணாக எரிபொருளை இழந்து கொண்டிருப்பீர்கள். 10 வினாடிகளுக்கு
மேல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், இன்ஜினை உடனடியாக ஆஃப் செய்து
விடுங்கள்.
காரை ஸ்டார்ட் செய்யும் முன்பு முழுமையாக தயாராகி விடுங்கள்:
நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பொதுவாக நாம் காரை ஸ்டார்ட் செய்த
பிறகுதான் சீட் பெல்ட் அணிவது, மிரர்களை அட்ஜெஸ்ட் செய்வது போன்ற வேலைகளை
எல்லாம் செய்வோம். ஆனால் இவற்றை காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பே செய்து
விடுவது நல்லது. இதன் மூலமாக ஓரிரு நிமிடங்கள் கார் ஐடிலிங்கில் இருப்பது
தவிர்க்கப்படும். எரிபொருளும் மிச்சமாகும்.
சீரான வேகம்:
கூடுமானவரை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரத்திற்கு சீரான வேகத்தில்
காரை ஓட்ட முயலுங்கள். திடீரென ஆக்ஸலரேட்டரை மிதிப்பது பின்னர் உடனடியாக
குறைப்பதன் காரணமாக அதிக எரிபொருள் செலவாகும். எனவே சீரான வேகத்தில்
நீங்கள் காரை செலுத்தினால், அதிக மைலேஜ் கிடைப்பதற்கான வாய்ப்புகள்
அதிகரிக்கும்.
எந்த வேகம் உகந்தது:
மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டருக்கு இடைப்பட்ட வேகத்தில் பயணம்
செய்யும்போதுதான் பெரும்பாலான கார்கள் எரிபொருள் சிக்கனத்தில் சிறந்து
விளங்குகின்றன. எனவே கூடுமானவரை இதற்கு மிகாமலும், இதற்கு குறையாமலும் காரை
ஓட்டுங்கள். மணிக்கு 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டினால், மைலேஜ்
கடுமையாக குறைந்து விடும்.
சரியான டயர் பிரஷர்:
உங்கள் கார் வழங்கும் மைலேஜில் டயர்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
பரிந்துரைக்கப்பட்ட டயர் பிரஷை நீங்கள் பராமரிப்பது அவசியம். இதன் மூலமாக
மட்டும் உங்கள் காரின் மைலேஜை 3 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றால்
பார்த்து கொள்ளுங்கள். மேலும் இதன் மூலமாக பாதுகாப்பு மற்றும் டயர்களினுடைய
ஆயுட்காலமும் அதிகரிக்கும்.
கிளட்சை அதிகம் உபயோகிக்காதீர்கள்:
கிளட்ச் பெடலை பயன்படுத்தாமல் கியர்களை மாற்றுங்கள் என நாங்கள் கூறவில்லை.
தேவையில்லாமல் கிளட்ச் பெடலை பயன்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.
ஒரு சிலர் கிளட்ச் பெடல் மீது காலை வைத்து கொண்டே காரை ஓட்டுவார்கள். இது
தவறு. தேவைப்படும் நேரங்களை தவிர கிளட்ச் பெடல் மீது காலை வைக்காதீர்கள்.
எரிபொருள் சிக்கனத்திற்கு இது உதவும்.
தேவையில்லாத பொருட்களை தவிர்த்து விடுங்கள்:
எரிபொருள் சிக்கனம் என வந்து விட்டால், எடைதான் முக்கியமான எதிரி. ஆனால்
ஒரு லிட்டருக்கு கூடுதலாக 1 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்பதற்காக
காரில் இருப்பவர்களை கீழே இறங்க சொல்ல முடியாது. எனினும் காரில் உள்ள
தேவையற்ற பொருட்களை அகற்றலாம். உங்கள் காரின் பூட்டில் உள்ள தேவையற்ற
பொருட்களை கண்டறிந்து அகற்றி விடுங்கள்.
பிளான் பண்ணி பண்ணுங்க:
ஒரு இடத்திற்கு செல்லும் முன்பாக வழித்தடத்தை கவனமாக தேர்வு செய்யுங்கள்.
வழித்தடத்தை முன்பே திட்டமிட்டு கொள்வதன் மூலம் நீங்கள் வேறு இடத்திற்கு
செல்வது தவிர்க்கப்படும். அதேபோல் எங்கு செல்வதாக இருந்தாலும் கொஞ்சம் முன்
கூட்டியே புறப்படுங்கள். நீங்கள் அவ்வாறு கிளம்பிவிட்டால் நிதானமாக
இருப்பீர்கள். இதன்மூலம் ஆக்ஸலரேட்டரை தாறுமாறாக மிதிப்பது
தவிர்க்கப்படும்.
சர்வீஸ் முக்கியம்:
கார் என்பது ஒரு இயந்திரம்தான். எனவே அதனை குறிப்பிட்ட கால இடைவெளிகளில்
சரியாக சர்வீஸ் செய்ய வேண்டும். அதேபோல் சரியான தரநிலை கொண்ட இன்ஜின் ஆயுளை
பயன்படுத்துங்கள். இவற்றை எல்லாம் நீங்கள் செய்தால், பெட்ரோல் பங்க்கில்
உங்கள் பணம் வீணாக செலவு ஆவதை கணிசமாக குறைக்க முடியும்.
பெட்ரோல், டீசலுக்காக ஆகும் செலவை குறைக்க மற்றொரு வழியும் உள்ளது.
எலெக்ட்ரிக் கார்கள்தான் அந்த வழி. பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும்
எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவுதான். தற்போது
மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கம் காரணமாக இந்தியாவில் ஏராளமான எலெக்ட்ரிக்
கார்கள் அறிமுகமாக தொடங்கியுள்ளன.
இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டிகோர் எலெக்ட்ரிக்
காரை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்
வணிக ரீதியில் உபயோகிக்கும் வகையிலும், தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும்
வகையிலும் கிடைக்கும் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த
காரின் சிறப்பம்சங்களை இனி பார்க்கலாம்.
டாடா டிகோரின் ஆரம்ப விலையாக ரூ.9.44 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்திடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களுக்கென சலுகைகள்
அறிவிக்கப்பட்டால் இந்த விலை குறையவும் வாய்ப்புள்ளதாம்.
டிகோர் எலெக்ட்ரிக் காரை முதலில் அரசாங்க மற்றும் கப்பற்படை
வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
தற்போது இந்த காரை மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்ய
முன்வந்துள்ளது.
மூன்று வேரியண்ட்கள்
எக்ஸ்இ+, எக்ஸ்எம்+ மற்றும் எக்ஸ்டி+ என மூன்று வேரியண்ட்களில்
அறிமுகமாகியுள்ள இந்த டிகோர் எலெக்ட்ரிக் கார், நீண்ட தூர பயணம்,
குறைந்தளவு முன்பணம் மற்றும் முற்றிலுமாக மாசு உமிழ்வை ஏற்படுத்தாது போன்ற
சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
ஒரே சார்ஜ்ஜில் 213 கிலோமீட்டர்
பெரிய அளவில், 21.5 கிலோ வோல்ட் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த
டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரானது, ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 213
கிலோமீட்டர் செல்லும் வலிமை வாய்ந்தது. இதற்கு அராய் அமைப்பு சான்றிதழ்
வழங்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என்ற இரு
டிரைவிங் அமைப்புகளை கொண்டுள்ளது.
பேட்டரி கூலிங் சிஸ்டம்
காரை வெப்பம் மிகுதியான இடத்தில் ஓட்டினாலும் காரில் இருக்கும் பேட்டரி
கூலிங் அமைப்பு பேட்டரியை குளிர்ச்சியாக்கிவிடும் என கூறியுள்ளது டாடா
நிறுவனம். இதன் பேட்டரியை நிலையான சார்ஜிங் மற்றும் வேகமான சார்ஜிங் என இரு
விதங்களில் சார்ஜ் செய்ய முடியும்.
மாசற்ற இந்தியா
டிகோர் இவி எலெக்ட்ரிக் கார் குறித்து டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன
முதன்மை அதிகாரி ஆஷேஷ் தார் கூறுகையில், டிகோர் எலெக்ட்ரிக் மாடல், எங்களது
வாடிக்கையாளர்களுக்கு நீண்ட தூரம் செல்ல கூடிய வாகனமாகவும், அதேநேரம் அதிக
வருவாயை தரும் வாகனமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட
மாடல் கார். டிகோர் மாடலின் இந்த புது வெர்சன், ஏற்கனவே அரசாங்க
வாடிக்கையாளர்களுக்கும் கடற்படையை சேர்ந்தவர்களுக்கும் விற்கப்பட்டு
வந்துள்ளது. இந்தியாவில் அடிக்கடி பழுதடையாமல் நிலையான கார் இயக்கத்திற்கு
எங்களது இந்த தயாரிப்பு வலுவூட்டும் என்றார்.
3 வருடத்தில் 1.25 லட்ச கிமீ
டாடா நிறுவனம் டிகோர் இவியின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறந்த
பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி,
சீட் பெல்ட்டை நினைவூட்டும் மற்றும் அதிக வேகத்தில் செல்லும் போது
எச்சரிக்கும் வசதி, பின்புற பார்கிங் சென்சார் என பல அம்சங்கள் இந்த
எலெக்ட்ரிக் காரில் உள்ளன. இந்த காரை நிச்சயம் 3 வருடத்தில் 1.25 லட்ச
கிலோமீட்டர் தூரம் ஓட்டி செல்ல முடியும் எனவும் கூறுகின்றனர்.
இறுதியில், இந்திய மார்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக்
காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. இந்த காரின்
சிறப்பம்சங்களில் முக்கியமானது, ஒரே ஒருமுறை சார்ஜ் செய்தாலே 213 கிலோ
மீட்டர் பயணம் செல்லலாம் என்பதுதான். இந்த காருக்கான முன்பதிவு இந்தியா
முழுவதும் உள்ள டாடா நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் ஆரம்பமாகிவிட்டது. இதனால்
இந்த எலக்ட்ரிக் காரின் விநியோகம் மிக விரைவில் இருக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பின்னம்பூண்டி கிராமம். இப்பகுதியில் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தத காவல் ஆய்வாளர் திரு. டி.எஸ்.சரவணன் மற்றும் சக காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன சி.சி.டி.வி கேமராவினை (CCTV Camera) ஆய்வு செய்தனர்.
பின்னப்பூண்டி, எலப்பாக்கம் போன்ற கிராமங்களில் ஏற்கெனவே சில குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மேலும் அதுபோன்ற கொள்ளைச்சம்பவங்களோ அல்லது பிற குற்றச்சம்பவங்களோ மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து சி.சி.டி.வி கேமராவினை (CCTV Camera) நிறுவி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இரவு ரோந்துப்பணி மற்றும் சி.சி.டி.வி கேமரா (CCTV Camera) மூலம் ஆய்வு என பொதுமக்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் காவல் ஆய்வாளர் திரு.டி.எஸ்.சரவணன் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணம்பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி செல்லப்பன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் பட்டா மாற்றம் செய்ய ஒரத்தி நில அளவையர் (Surveyor) ராஜகுரு மற்றும் உதவியாளர் (Assistant) திருப்பதி ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். இந்த லஞ்ச பணத்தை அளிக்க இயலாத விவசாயி செல்லப்பன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய பணத்தை விவசாயி செல்லப்பன் என்பவர் நில அளவையர் மற்றும் உதவியாளரிடம் அளித்தபோது, அங்கு மறைந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜகுரு மற்றும் திருப்பதி ஆகியோரை நேற்று (09.10.2019) கைது செய்தனர். மேலும் இதில் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 'ஹெச்.பி.எஃப்' எனும் பெயரில் ஒரு அரசு நிறுவனம் இருந்தது. ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் என்பதே இது.
நம் தேசத்தின் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் எக்ஸ் ரே உள்ளிட்டவைகளுக்கான ஃபிலிமை தயாரித்த நிறுவனம். இந்த நிறுவனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களின் குடும்பத்தையும் சேர்த்தால் சில ஆயிரக்கணக்கான மக்கள் பிழைத்தனர். இந்த நிறுவனத்தில் கட்டமைப்பு வசதிகளுக்காக சில ஆயிரம் கோடிகளை அரசு முதலீடு செய்து, சூப்பர் ஸ்பெஷல் மெஷிஇதைன்களை வாங்கி வைத்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்நிறுவனத்தின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஒரேடியாக மூடப்பட்டுவிட்டது.
உள்நாட்டிலேயே இப்படியொரு சூப்பர் நிறுவனம் இருக்கையில், வெளிநாட்டின் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து நாம் ஃபிலிமை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் பல கோடி ஏழைகள் எக்ஸ்ரே மருத்துவ செலவுக்காக தங்கள் சக்தியை மீறி செலவு செய்கின்றனர்.
இதை ஏன் இங்கே சொல்கிறோம் என்றால்.....இந்த 'HPF' நிறுவனம் முடங்கியதன் பின்னணியில் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகள் சுட்டிக்காட்டப்படுகிறது அழுத்தமாக. சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ப.சிதம்பரத்தின் வட்டாரம், இந்த அரசு தொழிற்சாலைக்கு இப்படியொரு நிற்கதி நிலையை கொண்டுவந்துவிட்டார், அதை நம்பி இருந்த குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன.
ரெண்டு வேளை சோறு கூட அவர்களில் பலருக்கு உறுதியில்லை! என்று குமுறுகிறார்கள். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் ஏக கெடுபிடியில், திகார் சிறையிலிருக்கும் ப.சிதம்பரம் பெரும் துயரத்தில் இருக்கிறாராம். ஒரு அரசன் போல் வாழ்ந்து பழகிவிட்ட அவரால் சிறையின் அவஸ்தை வாழ்க்கையை சகிக்க முடியவில்லையாம். அதில் உச்ச கொடுமை, உணவு சிக்கல்தான்.
சிறைக்குள் வரும்போது 78 கிலோ எடை இருந்தவர், எட்டு கிலோ இழந்து இப்போது எழுபது கிலோதான் இருக்கிறாராம். வட இந்திய சிறை உணவுகள் அவருக்கு ஒத்து வராததால் வீட்டு உணவை எடுத்துக் கொள்ள உத்தரவிடும்படி நீதிமன்றத்தை அவரது குடும்பம் அணுகியது. இதற்கு சி.பி.ஐ.யும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனவே வீட்டில் சமைக்கப்பட்ட உணவை ஒரு வேளை மட்டும் வழங்கிடலாம்! என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொடியுடன் இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம், ரசம் சாதம், தோசை, ஆப்பம், இடியாப்பம் என்று எளிதாக செரிமானமாகும் உணவுகளாக கொடுக்கப்படுகின்றனவாம்.
ஒரு வேளை மட்டுமே வீட்டிலிருந்து வரும் உணவை, மூன்று வேளைக்கும் பிரித்து வைத்து உண்கிறாராம் சிதம்பரம். மூன்று வேளையும் மூன்று ரகங்களில் விதவிதமாய் உண்டு பழகிய நாக்கின் நிலையை பாருங்கள்.