Run World Media: 01/24/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 24, 2019

ராம் சரணுக்காக கொள்கையை தளர்த்தும் நயன்தாரா?

சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்த்துகிறார் என்று கூறப்படுகிறது. 


2019ம் ஆண்டு நயன்தாராவுக்கு சிறப்பாக துவங்கியுள்ளது. அவர் அஜித்துடன் சேர்ந்து நடித்த விஸ்வாசம் படம் ஹிட்டாகியுள்ளது. அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான சயீரா நரசிம்ம ரெட்டி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


நயன்தாரா  

சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த படத்திற்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்க்கப் போகிறாராம்.


விளம்பரம் 

நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே விளம்பர நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று கறாராக சொல்லிவிடுவார். இந்நிலையில் அவர் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ராம் சரண்

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை தயாரித்துள்ள நடிகர் ராம் சரண் நயன்தாராவை சந்தித்து தயவு செய்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்தாராம். நயன் படத்தை விளம்பரப்படுத்தினால் அது பெரிய பிளஸ்ஸாக இருக்கும் என்று ராம் சரண் நம்புகிறார். அவருக்காக நயன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாராம்.


விஜய் சேதுபதி 

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, ஹூமா குரேஷி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக நேரம் விளையாடிய கணவன், ஆண்குறியை அறுத்து டாய்லெட்டில் ஃப்ளஷ் செய்த மனைவி!

மனைவி மீது அன்பு செலுத்தாமல் இருந்தால், அவர் மீது அக்கறை காட்டாமல் இருந்தால், கணவன் பின்னாளில் அதிக வேதனை பட வேண்டிய சூழல் உருவாகும் என்பார்கள். 


ஆனால், ஆண்குறி இழக்கும் வகையிலான வேதனை உண்டாகும் என அந்த தென்கொரிய கணவனுக்கு தெரியாது போலும். தன்னைவிட அதிகம் கோல்ப் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்த கணவனின் ஆண்குறியை அறுத்து உலக கணவன்மார்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளார் ஒரு தென்கொரிய பெண்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கோல்ப்!  

யோசு என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அந்த நடுவயது தம்பதிகள். தென்கொரிய கணவர் கோல்ப் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். நேரம், காலம் கடப்பது தெரியாமல் அதிக நேரம் தினமும் கோல்ப் மைதானத்தில் விளையாடி கழித்துள்ளார். இதனால், தனது 50 வயது கணவன் மீது மனைவிக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.


சமையல் அறையில் இருந்து...  

ஒரு நாள் தனது கணவன் உறங்கி கொண்டிருக்கும் போது சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து, கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து ஆண்குறியை அறுத்து விட்டார். அறுத்தது மட்டும் இல்லாமல், மீண்டும் அது கிடைத்து விட கூடாது என கருதி, கழிவறையில் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார். கோல்ப் விளையாடியதால் இப்படி கூட ஒரு மனைவிக்கு கோபம் வருமா என்ன?


அக்கம், பக்கத்தினர்!

அந்த ஐம்பது வயதுமிக்க கணவன், வலி தாங்கமால் தரையில் உருண்டு அலறும் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அவர் இரத்தம் ஒழுக துடித்து அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோல்ப் மட்டும் காரணம் அல்ல...  

மிரர் யூ.கே என்ற ஊடகத்தில் வெளிவந்த செய்தியில், கணவர் கோல்ப் விளையாடியது மட்டும் காரணமல்ல, மனைவிக்கு பணம் தாராததும், அளவுக்கு அதிகமாக நேரத்தை கோல்ப் மைதானத்தில் செலவழித்ததும், கணவன், மனைவிக்கு இடையே பெரும் சண்டையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே இந்த விபரீத நிகழ்வு நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மிஸ்.கிம்!

54 வயதுமிக்க மிஸ். கிம் தான் இந்த விபரீத நிகழ்விற்கு காரணமான மனைவி. நீதிமன்றத்தில் தான் செய்த குற்றத்தை மிஸ். கிம் ஒப்புக்கொண்டார். மேலும், நீதிமன்றத்தில் தன்னை கணவர் ஒதுக்கியதன் காரணத்தால் இப்படி செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இப்போது அந்த ஆண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது...


வேலூர்!  

வேலூரில், கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சம்பவம் சமீபத்தில் ஜூலை மாதத்தில் நடந்துள்ளது. அறுத்த கணவனின் ஆணுறுப்பை பர்சில் எடுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார் அந்த கோபக்கார மனைவி.
கைது!  

பின்னர் சரசு என்னும் அந்த பெண்ணை வேலூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்த போது அறுத்த கணவனின் ஆண்குறியை பர்ஸில் வைத்திருந்தார்.


பிரிந்து வாழ்கிறார்கள்!  

இவர்களுக்கு திருமணாகி 14 வருடங்கள் ஆகிறது. விசாரணையில் இந்த ஜோடி கடந்த ஒரு வருடமாக பிரிந்து தான் வாழ்ந்து வருவதாகவும். சரசுவின் கணவர் வேறு நபருடன் கள்ள உறவில் இருந்துள்ளார்.


குடி போதையில் கணவன்! 

சரசுவின் கணவர் ஒரு நாள் குடி போதையில் இருந்த போது சரசுவிற்கும் ஜெகதீசன் (கணவர்) சண்டை ஏற்பட்டுள்ளது. சரசுவிற்கு வயதாகிவிட்டதால் வேறு பெண்ணை திருமணம் செய்யும் திட்டத்திலும் இருந்துள்ளார் ஜெகதீசன். சண்டை ஓய்ந்த பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் கூர்மையான கத்தியை எடுத்து ஜெகதீசனின் ஆணுறுப்பை அறுத்துள்ளார் சரசு.


மருத்துவமனை!  

ஜெகதீசன் கதறுவதை கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் அவரை வேலூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, இப்போது அவர் அபாயக்கட்டதை தாண்டியுள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஸ்டிரைக் செய்து கைதான ஆசிரியர்.. கல்யாண மண்டபத்திற்கே மாணவர்களை வரவைத்து பாடம் நடத்தி அசத்தல்

நாங்கள் பாதித்தாலும் பரவாயில்லை.. எங்கள் பிள்ளைகளை மட்டும் விட்டு விடவே மாட்டோம் என்று கைதான ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தியது அனைவரின் புருவத்தையும் ஆச்சரியத்தில் உயர்த்தியுள்ளது. 


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஒரு பக்கம் மாணவர்களை தவிக்க விட்டுவிட்டு போராட்டம் நடத்தலாமா? என்று கேள்வி எழுகிறது. மற்றொரு பக்கம், எங்களுக்கு என்ன போராட ஆசையா? எங்கள் தேவையை அரசு நிறைவேற்ற மறுக்கிறதே என்று கேள்வியும் எழுகிறது. மேலும் ஆசியர்களின் இப்படி போராட்டம் நடத்தி கொண்டிருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.


கைதாயினர்

இதனிடையே ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களும் கைதாகி வருகிறார்கள். அப்படித்தான் கந்தர்வ கோட்டையிலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு 3,620 பேர் நேற்று கைதானார்கள். அவர்கள் அனைவரும் ஒரு கல்யாண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டனர்.


கவலைப்பட்டார்  

இதில் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆங்கில ஆசிரியர் தெய்வீகனும் ஒருவர். போராட வந்து இப்படி கைதாகி அடைக்கப்பட்டாலும், தன்னுடைய வகுப்பு மாணவர்களை நினைத்து கவலைப்பட்டார். இதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்யாண மண்டபத்துக்கே வகுப்பு மாணவர்களை வரவழைக்க முடிவு செய்தார்.


பாடம் நடத்தினார்  

10 மற்றும் 9ம் வகுப்புகளின் மாணவ தலைவர்களை வரவழைத்து, அவர்களிடம் நேற்று நடத்தவேண்டிய பாடம் குறித்து விளக்கம் அளித்தார். பிறகு தான் சொல்லி கொடுத்ததை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் பாடமாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


அசத்தல் வாத்தியார்  

மாணவர்களை பற்றி கவலைப்படவில்லை என ஆசிரியர்களை மற்றவர்கள் விமர்சித்து வந்த நிலையிலும், போராடி கைதான நிலையிலும், இந்த ஆசிரியர் மாணவர்களை அழைத்து பாடம் நடத்தியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

என்னாது ஒரு வடை 100 ரூபாயா.. செங்கத்தை அதிர வைத்த பரபரப்பு நிகழ்வு

ஒரு வடை 100 ரூபாய்... எங்கே தெரியுமா? ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான்!!



செங்கம் அருகே உள்ள முருகன் கோவில் ரொம்ப விசேஷமானது. இங்கு கடந்த 10 நாட்களாக தைப்பூச திருவிழா நடைபெற்று வந்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இதனால் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நாக்கில் அலகு குத்துவது, முதுகில் அலகு குத்துவது, கால்களில் அலகு குத்தி கயிறு மூலம் அந்தரத்தில் தொங்குவது என எத்தனையோ நேர்த்திக்கடன்களை செய்து வந்தனர். 

அதில் ஒரு வினோத வழிபாடுதான் பக்தர்கள் கொதிக்கும் எண்ணையில் வடை சுட்டு எடுத்தது. ஒரு பெரிய வாணலில் எண்ணெய்யை காய வைத்து அதில் வடைகளை தட்டி போடுகிறார்கள் பக்தர்கள். பிறகு எண்ணெய் சட்டிக்குள் வெறும் கையை உள்ளே விட்டு வெந்து கொண்டிருக்கும் வடைகளை வெளியே எடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த வடையை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதுதான் இதன் மற்றொரு சிறப்பு. அதனால் இந்த வடைகளை கோவில் நிர்வாகம் சன்னிதானத்திலேயே பக்தர்களுக்கு விற்பனை செய்தது. இந்த வடைக்கு 'சுவாமி வடை' என ஒரு பெயரும் வைத்து பக்தர்கள் பயபக்தியுடன் வாங்கி சென்றனர். அதனால்தான் ஒரு வடையின் விலை ரூ.100 என்று விற்பனை ஆனது.


ஆஹா.. ஆளாளுக்கு ஒரு கோவிலை பிடித்து கொண்டு விட்டார்களே.. என்னாச்சு அதிமுக தலைவர்களுக்கு!

அதிமுக தலைவர்களுக்கு எல்லாம் என்ன ஆச்சோ தெரியவில்லை.. ஆளாளுக்கு ஒரு கோயிலில் யாகங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 


முன்பெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் ஜெயலலிதா உடனே கோவிலுக்கு ஓடிபோய் யாகம் நடத்தி விடுவார். இல்லையென்றால் சிறப்பான பூஜை, வழிபாடுகளை செய்வார். அவர் செய்யாவிட்டாலும் அவர் சார்பில் செய்யப்படும். 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அப்போது ஜெயலலிதா செய்த பாணியை இப்போது அதிமுக தரப்பினர் கையில் எடுத்துள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் யாகம் நடத்திய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தோப்பு வெங்கடாச்சலம் 

ஏனென்றால், அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறை தண்டனை பெற்றதும், அந்த பதவியை பிடிக்கவே தோப்பு வெங்கடாச்சலம் யாகம் நடத்தியதாக ஒரு காரணம் சொல்லப்பட்டது. மதுரை மேயராக இருந்த ராஜன் செல்லப்பா தோப்பு வெங்கடாசலம் அந்த பதவியில் அமர வேண்டும் என்ற விருப்பத்தால், தோப்புக்காக இந்த யாகத்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. அக்னி வளர்த்து நடந்த இந்த சிறப்பு யாகம் சுமார் 5 மணி நேரம் நடந்தது.


கேரள நம்பூதிரி 

அதேபோல, குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு கதவுகளை மூடி ரகசிய யாகம் நடத்தியதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களாக கேரளாவின் கொல்லத்தை நம்பூதிரி ஒருவர் தலைமையில் 4 பேர் வந்து குற்றாலநாதர் கோயிலில் சன்னதி கதவுகளையெல்லாம் மூடி இந்த யாகத்தை நடத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.


அறநிலையத்துறை  

அந்த யாகங்களின் பெயர் சுதர்ஸன யாகம், பிரத்தியங்கரா யாகம் என்பதாம். அதாவது எதிரிகளை வெல்வதற்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் நடத்தப்படுவதுதான் இந்த யாகத்தின் ஸ்பெஷாலிட்டியே!! தமிழக கோயில்கள் எல்லாம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் யாகம் நடத்துவது யார்? எதற்காக இந்த யாகம்? யாருடைய அனுமதி பெற்று நடந்தது என்ற எந்த விவரம் தெரியவில்லை.


ஸ்டாலின் கேள்வி 

இது எல்லாவற்றிற்கும் மேலாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் யாகம் நடத்திய புகைச்சல் இன்னும் அடங்கவே இல்லை. கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிட்டால், அப்போது முதல்வர் பதவி காலியாகும், அதனை கைப்பற்றத்தான் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்துகிறாரா" என்ற ஒரு கேள்வியை ஸ்டாலின் கேட்டார்.


அப்பன் வீட்டு சொத்தா? 

அதற்கு, "கரையான் அரிச்சதாலே புதுப்பிச்சோம், சாமிதான் கும்பிட்டோம், யாகம் செய்யவில்லை" என்று தன் தரப்பு விளக்கத்தை அவர் சொன்னாலும், "பூஜையோ, யாகமோ, தலைமை செயலகம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?" என்று ஸ்டாலின் காட்டமாகவும் கேட்டதை நாம் பார்த்தோம்.


கொழுந்து விட்டு எரிகிறது  

ஆகமொத்தம், அதிமுக தரப்பில் முக்கியமான தலைகள் பூஜை, யாகம், என இறங்கி விட்டதாக தோன்றுகிறது. இருக்கும் பிரச்சனைகளில் இருந்து தாங்கள் தப்பிப்பதற்காகவா? அல்லது புதிய பொறுப்பு, பதவி வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்த யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறதா அல்லது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது ஆட்சியைப் பிடிப்பவர்களின் மனதில் இடம் பெற்று நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்று தெரியவில்லை. ஆக மொத்தம் ஆட்சியின் கடைசிக்காலத்தில் யாகங்கள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளன. நல்லது நடந்தால் சரி.. மக்களுக்கு!

அவினாசி அருகே துணை மின்நிலையத்தில் தீவிபத்து- 13 கிராமங்களில் மின்தடை

அவினாசி அருகே இன்று காலை துணைமின்நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுப்புற பகுதியில் உள்ள 13 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.





திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள கந்தம்பாளையம் பிரிவு பகுதியில் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இன்று காலை 6.30 மணியளவில் துணை மின்நிலையத்தில் ஒரு டிரான்ஸ்பார்மில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் வேகம் அதிகரித்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை.



இதையடுத்து அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் 2 மின்மாற்றிகள் நாசமானது. மேலும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு வேனும் தீப்பிடித்து எரிந்தது. சுமார் 45 நிமிடம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

அசம்பாவிதத்தை தடுக்க மின்வாரியம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் சேதமடைந்த 2 மின்மாற்றிகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தின் காரணமாக சுற்றுப்புறம் உள்ள 13 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. விரைவில் மின்மாற்றிகள் சரி செய்து மின் விநியோகம் செய்யப்படும் என்று மின்சார துறையினர் தெரிவித்தனர்.

திருமணம், நடிப்புக்கு முற்றுப்புள்ளியா? -நடிகை ரித்விகா ஆவேசம்

கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. ரஜினியின் காலா படத்திலும் நடித்தார்.






கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. ரஜினியின் காலா படத்திலும் நடித்தார். அழகு குட்டி செல்லம், அஞ்சல, ஒரு நாள் கூத்து, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட் ஆகியவை ரித்விகா நடித்த முக்கிய படங்கள். சமீபத்தில் இணையதளத்தில் வெளியான சிகை படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் வந்தார்.

தற்போது எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நேத்ரா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன்-2விலும் வந்தார். இந்த நிலையில் ரித்விகாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து உள்ளார் என்றும் தகவல்கள் பரவின.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து வருங்கால கணவர் முடிவு செய்வார் என்று ரித்விகா கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது திருமண செய்தியை ரித்விகா சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று தகவல்கள் பரவியது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்” என்று கூறியுள்ளார்.

குட்டிக்கரணம் அடிக்கும் போது தவறிவிழுந்தார்... நடிகை ஹன்சிகாவுக்கு காயம்!

மஹா படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது. குட்டி குஷ்பு ஹன்சிகாவை பற்றி தான் இரு தினங்காக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. 


மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது ஹன்சிகா எடுத்துகொண்ட அந்தரங்க செல்பிக்கள் நேற்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தனது போனையும் டிவிட்டர் கணக்கையும் யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என ஹன்சிகா புலம்பினார். இந்நிலையில் அவரை பற்றிய மற்றொரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அதாவது மஹா படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது ஹன்சிகா காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹா படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சி திங்களன்று படமாக்கப்பட்டது. அப்போது நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, சிறிய காயத்தில் முடிந்தது.


விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்தார். "மஹா" நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படம். இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது திரைப்படமாகும். நாயகியை மையப்படுத்திய கதையில் முதன்முறையாக ஹன்சிகா நடிக்கும் இந்த 'மஹா'வை யூ ஆர் ஜமீல் இயக்குகிறார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி மதியழகன் தயாரித்திருக்கிறார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்