எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகொளத்தூர் கிராமசபை கூட்டத்திற்கு வருகை புரிந்த காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்
திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், கிராம பொதுமக்களிடையே உரையாற்றி குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்.திரு.V.தமிழ்மணி, முள்ளிகொளத்தூர் கிராம தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் திரு. R.K.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாஜக தலைவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சத்தீஸ்கர்
மாநிலம் ராய்பூரில் செய்தியாளர்கள்
ஹெல்மெட் அணிந்து பேட்டி எடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் சுமண் பாண்டே என்ற உள்ளூர் செய்தியாளர்,
நான்கு பாஜக பிரமுகர்களால் மோசமாக தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் பாஜக
மாவட்ட தலைவர் ராஜீவ் அகர்வால் மற்றும் 3 பாஜக பிரமுகர்களை போலீசார் கடந்த
சனிக்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை அன்று செய்தியாளர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு
பாஜக தலைவர்களிடம் பேட்டி எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தி
எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தலைகவசம்
இது தொடர்பாக ராய்பூர் பிரஸ் கிளப் தலைவர் டாமு அமேதரே கூறுகையில், எங்கு
நிகழ்ச்சிகள் நடந்தாலும், செய்தியாளர் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டம்
நடந்தாலும், யாரையாவது சந்தித்து பேட்டி எடுத்தாலும், எங்களை
அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க ஹெல்மெட் அணிந்துள்ளோம்
என்றார்.
பாஜக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து 600 க்கும் மேற்பட்ட
பத்திரிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் ராய்பூரில்
பேரணியாக வந்தனர். தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு குவிந்த
பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரண்டு நிபந்தனைகள்
ஹெல்மெட்டை கழற்ற வேண்டும் என்றால் இரண்டு நிபந்தனைகளை அவர்கள்
விதித்துள்ளனர். ஒன்று, தாக்குதல் நடத்திய மாவட்ட பாஜக தலைவர் அகர்வாலை
கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இரண்டாவதாக பத்திரிக்கையாளர்களை
பாதுகாக்க சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என்று
அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரகசியமாக வீடியோ
கடந்த சனிக்கிழமை அன்று சத்தீஸ்கர் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் மாநில
பொறுப்பாளர் சுபாஷ் ராவ் தலைமையில் கூட்டம் நடந்தது. இதனை படம் பிடிக்க
வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் சுமன் பாண்டே
என்ற பத்திரிக்கையாளர் மட்டும் பாஜக ஆலோசனை கூட்டத்தை ரகசியமாக வீடியோ
எடுத்தார்.
பாஜக விளக்கம்
இதனை கண்ட பாஜக தலைவர் அகர்வால் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் நான்கு பேர்
சுமன் பாண்டேவை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த பாண்டே
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக மாநில
பொறுப்பாளர் சுபாஷ் ராவ் விளக்கமளித்துள்ளார். பத்திரிக்கையாளரை தாக்குதல்
நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக மன்னிப்பு
கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எங்களை என்ன செய்ய சொல்கிறீர்கள் என கேள்வி
எழுப்பினார்.
நடிகர் சிவக்குமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க
சிவக்குமார் சென்று இருந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
அங்கு இருந்த நபர் ஒருவர் சிவக்குமாருடன்
சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார். முகத்திற்கு நேராக செல்போனை கொண்டு
வந்து அந்த நபர் நீட்டியபோது, சிவக்குமார் அதனை தட்டிவிடுவது போன்ற
காட்சிகள் வைரல் ஆகி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது செல்பி
எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டதால்
சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த நபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய
செல்போன் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.