எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போனில் பேசியபடியே
இருசக்கரவாகனத்தில் சென்ற நபர் செல்போன் வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.
ஓசூர் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). ஓசூரில்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் சொந்த
வேலை காரணமாக ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்ற போது
அவருக்கு போன் வந்துள்ளது. இதையடுத்து செல்போனை ஹெல்மெட்டிற்குள்
வைத்துக்கொண்டு பேசியவாறு அவர் சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று செல்போன்
வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் ஆறுமுகம் கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் அவரை மீட்டு
அருகாமையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி வழங்கி, பின்னர்
மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆறுமுகம் பேசிக் கொண்டு சென்றது விவோ ஸ்மார்ட்போன் என தெரியவந்துள்ளது.
சார்ஜ் குறைவாக இருக்கும் போதும், செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் போதும் கால்
பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள்
அறிவுறுத்துகின்றனர்.
"உன்னை முழுசா கேமிராவில் படம் பிடிச்சிட்டேன்.. அதனால கல்யாணம்
பண்ணிக்க நீ என்கிட்ட கெஞ்சணும்" என்று கணக்கு டீச்சரை இளைஞர் ஒருவர்
மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி டவுன்ஹால் ரோட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார் ஒரு
பெண். வயசு 29 ஆகிறது. புதுக்கோட்டையில் உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் கணக்கு
டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்
கூட்டம் நடந்தது. இதில் கணக்கு டீச்சர் கலந்து கொண்டதுடன், அதிகாரிகளிடம்
ஒரு மனுவும் அளித்தார்.
அதில் அவர் சொல்லி உள்ள சுருக்கம் இதுதான்: "எனக்கு பெற்றோர் இல்ல. நான்
முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக
வேலை பார்த்து வந்தேன்.
அதற்காக கோட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு
வசித்தேன். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம்
காதலாக மாறியது.
கல்யாணம் செய்து கொள்வதாகவும் சொன்னார்.
பின்னர் அவர் என்னை டவுன்ஹால்
ரோட்டில் ஒரு குவார்ட்டஸில் குடி வைத்தார். ஒருநாள் எதேச்சையாக வீட்டின்
ஜன்னலில் பார்த்தால், ஒரு கேமிரா இருந்தது.
அதிர்ச்சியடைந்த நான் இதை பற்றி
காதலனிடம் கேட்டேன்.
அதற்கு "உன்னை நான் முழுசாக படம் பிடிச்சிட்டேன். என்கிட்ட நீ மன்னிப்பு
கேட்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள கெஞ்சவும் வேண்டும்.
அப்படி
செய்யவில்லையானால் ரகசிய கேமிராவில் உள்ளதை எல்லாம் இணையத்தில்
போட்டுவிடுவேன்" என்று மிரட்டுகிறார்.
போலீசில் புகார் அளித்தேன், நடவடிக்கை இல்லை, அதனால் இளைஞர் மீது நடவடிக்கை
வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்துமாறு
கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சுல்தானை ஓட ஓட விரட்டி சென்று 2 பேர் தாக்கியதை கண்டு பொமக்கள்
ஓடவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
சென்னை பாரிமுனையில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முகமது சுல்தான். இவர் பாரிமுனையில் உள்ள
என்.எஸ்.சி போஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஆட்டோவில் 2 பேர் உட்கார்ந்து, கஞ்சா புகைத்துக்
கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சுல்தான், பக்கத்தில்
நின்றிருந்த டிராபிக் போலீசாரிடம் புகார் சொல்லி உள்ளார்.
சுல்தான் தங்களை பற்றி போலீசில் போட்டு கொடுத்ததை கண்ட கஞ்சா பிடித்து
கொண்டிருந்த அந்த 2 பேரும், ஆத்திரம் அடைந்தனர். அதனால் சுல்தானை நோக்கி
கொலை வெறியுடன் ஓடிவந்தனர்.
இதை பார்த்ததும், சுல்தான் அவர்களிடமிருந்து
தப்பி ஓடினார்.
ஆனாலும் அவர்கள் 2 பேரும் விடவே இல்லை. சுல்தானை துரத்தி துரத்தி
அடித்தார்கள். சாலை முழுக்க மக்கள் தலைகளும், வாகனங்களும் நெருக்கி
கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது.
பொதுமக்கள் முன்னிலையில்
இப்படி விரட்டி தாக்குகிறோமே என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல், சுல்தானை
நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தனர் அந்த 2 பேரும்.
இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்களால், இந்த தாக்குதலை தடுத்து
நிறுத்த முடியவில்லை. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமராவில் பதிவாகி,
அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா பிடித்த நபர்களை
கைது செய்து, 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள்
பெயர் ராபர்ட் மற்றும் தீனா என்று தெரியவந்துள்ளது.
மருங்கூரில் எங்க திரும்பினாலும் வெள்ளை.. யாரை பார்த்தாலும் வெள்ளை..
பேய், பிசாசு, ஆவியெல்லாம் ஒன்னும் இல்லை.. எல்லாம் நம்ம மக்கள்தான்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு வெள்ளாறு ஆகிய இரு
ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள ஊர்தான் மருங்கூர்.
சின்ன ஊர்தான்.. ஆனால்
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும்.
அங்கு வாழும் மக்கள் குல தெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர். இந்த
ஆகாச வீரனுக்குத்தான் எப்பேர்பட்ட வழிபாட்டு முறைகள்.. இதை பற்றி கேட்டாலே
நமக்கு ஆச்சரியம் வாயை பிளக்கிறது.
ஆகாச வீரன்
பொதுவாக வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம் என ஏதேனும் ஓர் அடையாளம்
இருக்கும். ஆனால் இந்த ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியிலேயே
இல்லையாம். இவர் வானத்தில் இருப்பதாக நம்புகின்றார்கள்.
பங்காளிக் குழுவில்
உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக்கொண்டு ஆகாச வீரனுக்கு பூசை செய்வது
வழக்கம். ஆடு, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விடுவார்கள்.
மஞ்சள், மிளகு
பொங்கல் மட்டும் பொங்குவார்கள். இதற்கு பால் பூசை என்று சொல்கிறார்கள்.
இந்த பொங்கலுக்கு கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண்பானை,
சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள்,
மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவது
கிடையாது.
நெல் குத்துவது
பொங்கல் வைப்பது யார் தெரியுமா.. ஆண்கள்தான்.. நெல்லைக் குத்துவது, மஞ்சள்
அரைப்பது என அனைத்து வேலைகளையும் ஆண்களே செய்யவேண்டும்.
பூஜைக்கு
பொருள்களைக் கொண்டு போவது முதல், செல்லும் போதும், மஞ்சளரைத்து
எடுத்துச்செல்லும் போது வரை யாருமே எதிரே வரக்கூடாதாம். யாரும் வராதீர்கள்
என்று முன்னதாகவே அறிவித்து விடுவார்கள்.
காட்டுமல்லி
சமைத்த உணவு வகைகளைப் படைப்பதற்கு வாழை இலை பயன்படுத்துவதில்லை. பொரச இலையை
தைத்து தையல் இலையாகப் பயன்படுத்துவர். இன்றும் இம்முறையே
பின்பற்றப்படுகிறது. காட்டுமல்லிப் பூவைத்தான் பூசைக்குப்
பயன்படுத்துகின்றனர்.
வெள்ளை உடை
படைக்கும்போது பூசை செய்பவர் வாயை கட்டிக்கொள்வார். ஒவ்வொரு இலைக்கும்
முன்பாக சூடத்தை கொளுத்தி எரியச்செய்வர். பூசையில் கலந்து கொள்ளும் ஆண்,
பெண், சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில்தான் வர வேண்டும்.
கறுப்பு நிற
நாடாவோ, அறைஞாண்கயிரோ அணியக் கூடாது. ஆகாச வீரனுக்குக் கறுப்பு கலர்
பிடிக்காதாம். பூசை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி வீசுவது மரபு.
ஆகாச வீரன் அவ்வுணவைப் பெற்றுக்கொள்வார் என நம்புகின்றனர்.
உப்பு இல்லை
பூசையன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டிற்கு வரும்
விருந்தினரை வரவேற்பதில்லை. உப்பின்றிச் சமைப்பது, பூசைப் பொருள்களைக்
கூடையில் வைத்து எடுத்துச் செல்வது, அப்போது எதிரில் யாரும் வராமலிருப்பது,
பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு
தொடர்புடையவை.
எனவே தங்கள் இல்லத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த
வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருதுகின்றனராம்!
உலகிற்கே இன்று பூஜ்ஜியத்தை கொடுத்த கொடுத்தவர் ராமானுஜர் இவரை நாம்
கணித மேதை என்று புகழ்கின்றோம். இவர் வாழ்ந்த மண்ணில் பிறந்த நமக்கும்
அவரின் அறிவும், சிந்தைனயும் ஜீனில் சாதாரணமாகவே கலந்திருக்கும்.
கால்குலேட்டரை விட அதிகவேகத்தில் கணித்து கூட்டல், பெருக்கல்,
வகுத்தல், வர்க்க மூலம் காணுதல் என்றால் நம்மால் முடியாது. நாம் இன்று
டிஜிட்டல் உலகில் இருப்பதால், நாம் பெரும்பாலும் கால்குலேட்டர், கணிணி
உதவியோடு தான் ஓரே நேரத்தில் இதுபோன்ற வேலையை செய்ய இயலும்.
கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை நாம் இந்த காலத்தில்
பார்த்திருக்க முடியாது. ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால்
கூfட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக
என்றால் சாத்தியம் தான் என்று நிருபித்துள்ளார் இவர்.
இவர் ஏசியன் சாம்பியன்ஷிப்பில் கால்குலேட்டரையும் மிஞ்சிய வேகத்தில்
கணித்துள்ளார் என்றால் நம்மால் நம்ம முடியுமா? இவர் மலேசியாவில்
பிறந்தாலும், இவரின் பூர்வீகம் இந்தியா தான்.
இவர் தமிழரா என்று
அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கும். இவரே இவருக்கு ஹீயூமன்
கால்குலேட்டர் என்று பெயரையும் வைத்துள்ளார்.
யாஷ்வின் சரவணன்
இவரை மனித கால்குலேட்டர் அன்று அழைக்கப்படுகின்றார். வேகமான மனக்
கணக்கீடுகளுக்கு அவர் மிகவும் பிரபலமானவர். 15வயதான இவர். சாதனையின் உச்சம்
என்றே கூறாலம்.
கணித்தில் தனது அற்புத திறமையால், உலக மக்கள் அனைவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளார். ஆசியா காட் டேலண்ட் 2019ல் மேடையில் இவர்
நிழத்தியது சாதனையாகவும் பார்க்கப்படுகின்றது. மலேசியாவில் இருந்து சென்று
ரன்னர் பட்டத்தையும் வென்றுள்ளார்.
யாஷ்வின் சரவணன் பூர்வீகம்
யாஷ்வின் சரவணன் பூர்வீகம் கேரள மாநிலம். இவர் இந்தியாவிலுள்ள கேரள
மாநிலத்தில் பிறந்தவர். பிறகு, அவரது குடும்பம் மலேசியாவின்
கோலாலம்பூருக்கு குடிபெயர்ந்தது. அவரது வயது 15 வயது ( 20190-ன்படி
சுட்டிக் காட்டுப்பட்டுள்ளது).
யாஷ்வின் சரவணன் குடும்பம்
யாஷ்வின் சரவணன் குடும்பம் கேரளாவை சேர்ந்தாகவும் இருந்தாலும், அவர்கள்
பெரும்பாலும் மலேசியாவில் தமிழர்களை போலவே வாழ்ந்து வருகின்றனர்.
யாஷ்வின் சரவணனின் குடும்பத்தினர் பெயர்கள் எதுவும் தெரியவில்லை. தந்தை,
தாய், சகோதாரர் என்று அவர்கள் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். மேலே
இருப்பது தான் குடும்ப புகைப்படம்.
7 வயதில் பட்டம் வென்றார்
7 வயதிலேயே வேகக் கணக்கீட்டைக் கற்கத் தொடங்கினார் யாஷ்வின் சரவணன். பல
வருட கடின நடைமுறைகளுக்குப் பிறகு, அவருக்கு மனித கால்குலேட்டர் என்ற
பட்டம் கிடைத்தது.
யாஷ்வின் கடந்த காலங்களில் பல பரிசுகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளார்.
இரவில் தூங்காதா யாஷ்வின்
கணிதத்தில் யாஷ்வின் ஆர்வம் தனது 7 வயதில் வகுப்புகளுக்குச் செல்லத்
தொடங்கியதும், கணிதத்தைக் கற்க அபாகஸைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
இறுதியில், அவர் அனைத்து நிலைகளையும் முடித்தபோது, வகுப்புகள்
பயனற்றதாகக் கண்டார்.
யாஷ்வின் தனது சொந்த பயிற்சியைத் தொடங்கிய நேரம் அது.
யாஷ்வின் ஒரு நேர்காணலில் நான் எண்களை மிகவும் விரும்புகிறேன். எல்லா
இடங்களிலும் ஒருவித தொடர்பைக் காண்கிறேன். நான் கார் எண் தகடுகளைப்
பார்த்தாலும் கூட. சில நேரங்களில் என்னால் இரவில் தூங்க முடியாது என்று
தெரிவித்தார்.
மிகவும் பிரபலமான யாஷ்வின்
யாஷ்வின் சரவணன் தான் வேகக் கணக்கீட்டு திறனுடன் பிறக்கவில்லை என்று
நம்புகிறார்,. ஆனால் அவர் தன் சொந்த முயற்சியால், 100%
வெற்றியடைந்துள்ளார்.
அவர் பரிசளிக்கப்பட்டவர் என்று மறுத்த போதிலும், யாஷ்வின் ஒவ்வொரு நாளும் 5
முதல் 10 நிமிடங்கள் மட்டுமே மன எண்கணிதத்தை பயிற்சி செய்கிறார்.
சில
சமயங்களில் அவர் பயிற்சி கூட செய்ய மாட்டார்.
இப்போதைக்கு, யாஷ்வின் மலேசியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலும் மிகவும்
பிரபலமாகிவிட்டார். மேலும் அவரது வேக கணக்கீட்டு வீடியோ 1.5
மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
பசங்கள பார்த்தால் நம்ம ஊர் போல இல்லை.. பைக் ஓட்டிக் கொண்டே செல்பி
எடுத்தார்கள்.. அடுத்த நிமிஷம் உயிருக்கு போராடி மண்ணில் அசைவற்று
கிடக்கிறார்கள்.
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. எந்த ஊர் என்று சரியாக தெரியவில்லை. 3
இளைஞர்கள் ஒரே பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருத்தர் தலையிலும் ஹெல்மட் இல்லை. 3 பேருமே சின்ன வயசு
பிள்ளைகள்தான். வடநாட்டு சாயல் உள்ளது. செல்போனில் ஹிந்தி பாட்டு
பின்னணியில் கேட்க முடிகிறது.
நெடுஞ்சாலையில் வேகமாக போய் கொண்டே இருக்கும்போது, பைக்கின் நடுவில்
உட்கார்ந்திருந்தவர் செல்பி எடுக்கிறார். வண்டி ஓட்டுபவரும், பின்னாடி
உட்கார்ந்திருந்தவரும் காமிராவையே அடிக்கடி பார்த்து வருகிறார்கள். போஸ்
கொடுக்கிறார்கள்..
சிரிக்கிறார்கள்!
எதிரே எந்த வண்டி வந்ததோ தெரியவில்லை.. எதிரே வந்த வண்டி மோதியதா, அல்லது
இவர்கள் போய் எந்த வண்டியிலாவது மோதி கொண்டார்களா தெரியவில்லை..
அடுத்த
செகண்ட் தரையில் விழுந்து கிடக்கிறார்கள். 2 பேருக்கு அசைவே இல்லை.. ஒருவர்
மட்டும் மெதுவாக கண்களை திறக்கிறார். 3 பேருமே ரத்தத்தில் புரண்டு
கிடக்கிறார்கள்.
இந்த பிள்ளைகளுக்கு இப்போது என்ன ஆச்சு என்றும் தெரியவில்லை.
யாராவது
இவர்களை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்களா? நல்லா இருக்கிறார்களா
என்ற தகவலும் இல்லை. ஆனால் செல்பி எடுத்து கொண்டே பைக் ஓட்டி வந்த விபரீதம்
மட்டும் வீடியோ மூலம் விளங்குகிறது!
இளம்பெண்ணை இழுத்து வைத்து கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்,
பிறகு அவசர அவசரமாக தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு மின்னலென
பறந்துவிட்டார்..
ஏன்?
கவுந்தப்பாடி அருகே உள்ள பகுதி செந்தாம்பாளையம். இங்கு ஒரு இளம்பெண்
தோட்டத்து பாதையில் கவுந்தப்பாடியை நோக்கி தன்னுடைய வீட்டுக்கு டூ வீலரில்
போய் கொண்டிருந்தார்.
அப்போது பின்னாடியே ஒரு இளைஞர் பைக்கில் வந்தார். திடீரென அந்த
பெண்ணின் டூவீலர் மீது பைக்கில் இடித்தார். இதில் நிலைகுலைந்து அந்த பெண்
கீழே விழுந்துவிட்டார்.
பிறகு அவரது கன்னத்தில் பளார் பளார் என
அறைவிட்டார். இதில் அந்த பெண் அலறினார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அந்த இளைஞர்
பைக்கை எடுத்து கொண்டு திரும்பி பார்க்காமல் பறந்தார்.
நடந்த சம்பவம்
குறித்து கவுந்தப்பாடி போலீசில் பெண் புகார் கொடுக்கவும், இளைஞர் அதிரடியாக
கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணையில், அந்த இளைஞர் பெயர் வல்லரசு
என்பதும் வயசு 20 என்பதும் தெரியவந்தது.
இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறாராம்.. ஒரு பெண்ணை
காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு வல்லரசுவை பிடிக்கவில்லை.
பலமுறை காதலை சொல்லியும் அந்த பெண் வல்லரசுவை ஏற்று கொள்ளவில்லையாம்.
இதனால் டென்ஷன் ஆகிவிட்ட வல்லரசு, தன் காதலியை நாலு சாத்து சாத்தலாம் என்று
முடிவு செய்துள்ளார்.
அதற்காக விரட்டி வந்து, பளார் பளார் என நாலு அறை விட்டு, அந்த பெண் கீழே
விழுந்து எழுந்த பிறகுதான் அவர் காதலி இல்லை, வேறு ஒரு பெண் என
தெரியவந்துள்ளது.
முகத்தை பார்த்ததும், பைக்கை எடுத்து கொண்டு எஸ்.ஆகி
உள்ளார். இந்த விசாரணைக்கு பிறகு வல்லரசுவை கவுந்தப்பாடி போலீசார் கோபி
கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் ஜெயிலில் அடைத்தனர்.
வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த 20 வயது இளம்பெண் ஒருவர் போலீசாரிடம்
சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில்
பார்க்கலாம்.
இன்றைய சூழலில் கார் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய
தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. ஒரு கார் இருந்தால் நினைத்த இடத்திற்கு
நினைத்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் ஒன்றாகவும்,
சௌகரியமாகவும் சென்று வர முடியும்.
இல்லாவிட்டால் ஆட்டோவிலோ அல்லது பஸ்ஸிலோ
கூட்ட நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி பயணிக்க வேண்டியதிருக்கும்.
அதுவும் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு எல்லாம் சென்று வர
முடியாது. இதுதவிர கார்கள் என்பவை ஒருவரின் அந்தஸ்தை வெளிக்காட்டும்
விஷயமாகவும் பார்க்கப்படுகின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் கார்களுக்கு
தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சொந்தமாக கார் வாங்க
வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது.
ஆனால் ஒரு சிலரால் மட்டுமே சொந்த கார் கனவை நிறைவேற்ற முடிகிறது.
மற்றவர்களுக்கு சொந்த கார் என்பது எட்டாக்கனியாகவே மாறி விடுகிறது. கார்கள்
சற்று விலை உயர்ந்தவை என்பதே இதற்கு முக்கியமான காரணம். எனினும் தொடர்ந்து
பலர் அந்த கனவை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று கடுமையாக
முயற்சித்து கொண்டுதான் உள்ளனர்.
ஆனால் இங்கே ஒரு பெண் கார் வாங்க வேண்டும் என்பதற்காக வினோதமான ஒரு
முயற்சியை செய்து சிக்கலில் சிக்கி கொண்டிருக்கிறார். கார் வாங்க பணம்
இல்லாததால், அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார். அதுவும்
கள்ள நோட்டுகளை அச்சடிக்க அவர் மிகவும் சாதாரணமான பிரிண்டர்களை
பயன்படுத்தியுள்ளார்.
கள்ள நோட்டு பிரச்னை இன்று அனைத்து இடங்களிலுமே காணப்படுகிறது. கள்ள
நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தால், பொருளாதார ரீதியிலான சவால்களையும் ஒரு
நாடு எதிர்கொள்ள நேரிடும்.
எனவே கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும்,
புழக்கத்தில் விடுவதும் சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. இதற்கு உலகின்
பல்வேறு நாடுகளிலும் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இருந்தபோதும் இவற்றை எல்லாம் கடந்து கள்ள நோட்டுகள் எப்படியாவது
புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் சட்ட விரோத
கும்பல் இதற்காக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.
அவர்கள்
அச்சடிக்கும் கள்ள நோட்டுக்கள் அச்சு அசலாக நல்ல நோட்டுகளை போலவே
இருக்கும். இதற்கான நுணுக்கங்களையும் அவர்கள் கற்று கொள்கின்றனர்.
எனவே எது நல்ல நோட்டு? எது கள்ள நோட்டு? என்ற வித்தியாசத்தையே
உங்களால் கண்டறிய முடியாது. ஆனால் இந்த பெண் தனது வீட்டில் சாதாரண
பிரிண்டரில் அச்சடித்த கள்ள நோட்டுகளை கார் டீலர்ஷிப்பில் கொடுத்துள்ளார்.
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள Kaiserslautern என்ற நகரில்தான்
இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உள்ளூரில் உள்ள டீலர்ஷிப் ஒன்றுக்கு சென்ற அந்த பெண், கார் வாங்குவது
தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காருக்கு
அவர் 'கேஷ்' கொடுக்கும் வரை அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது.
அதன்பின்தான் சிக்கலே வந்தது. காருக்காக 15 ஆயிரம் யூரோ மதிப்பிலான கள்ள
நோட்டுகளை அந்த பெண், ஊழியர்களிடம் வழங்கியுள்ளார்.
கார் டீலர்ஷிப் ஊழியர்கள் பார்த்த உடனேயே இதனை கள்ள நோட்டு என
கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல்
கொடுத்தனர்.
இதன் பேரில் விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை அதிரடியாக
கைது செய்தனர். அத்துடன் அவரது வீட்டில் ரெய்டும் நடத்தினர். அங்கு சாதாரண
பிரிண்டரும், மேலும் 13 ஆயிரம் யூரோ கள்ள நோட்டுக்களும் இருந்தன.
கள்ள நோட்டு அச்சடிப்பதற்கான உபகரணங்களோ அல்லது அதற்கான அடிப்படை
அறிவோ அந்த பெண்ணிடம் இல்லை. இருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்ற
ஆசையில், அவர் இதனை செய்து சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். ஆனால் அந்த
பெண்ணின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் அவருக்கு 20 வயது
மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.
சந்தையில் புழக்கத்தில் விடும் நோக்கத்துடன் கள்ள நோட்டுகளை
அச்சடிப்பது என்பது ஜெர்மனியில் சட்ட விரோதம்.
இந்த குற்றத்திற்கு அங்கு
குறைந்தபட்சம் ஒரு வருட சிறை தண்டனையாவது விதிக்கப்படும். கார்
வாங்குவதற்கு மாத தவணை முறை உள்பட ஏராளமான எளிமையான வழிமுறைகள் இருக்கவே
செய்கின்றன.
விலை சற்று அதிகம் என்பதால், புதிய காரை வாங்க முடியாவிட்டாலும் கூட,
செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் மிக குறைவான விலையில், நல்ல தரமான கார்களும்
கிடைக்கின்றன.
அவற்றில் ஒரு நல்ல காரை தேர்வு செய்தால், உங்கள்
பர்சுக்கும் பங்கம் ஏற்படாது. எனவே கார் வாங்க இதுபோன்ற சட்டத்திற்கு
புறம்பான வழிகளை எல்லாம் தேர்வு செய்ய வேண்டாம்.
வேலைக்கு போகாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்த கணவன் ஒருவன் குடும்ப
சண்டையில் மனைவியின் மூக்கைக் கடித்து காயப்படுத்தியிருக்கிறான்.
பர்ஸ்சில் இருந்து பணத்தை எடுத்தியா என்று கேள்வி கேட்டதற்காக மனைவியின்
மூக்கை காயப்படுத்தி 15 தையல் போட வைத்திருக்கிறான். குஜராத் மாநிலம்
அகமதாபாத் நகரின் கோடாசார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளனது.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா குல்வானி. 40 வயதாகும்
ரேஷ்மாவின் கணவர் பெயர் கைலாஷ் குமார்.வேலையில்லாத வெட்டி ஆபிசர். ரேஷ்மா
கைலாஷ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். பாவேஷ் கல்லூரியில் படிக்கிறார்.
பாவனா டியூசன் சென்டரில் வேலை செய்கிறார். தீபக் 12ஆம் வகுப்பு
படிக்கிறார்.
வீட்டு வேலையும் செய்து கொண்டு, படிக்கும் பிள்ளைகளுக்கு அனைத்து
வேலைகளை செய்து விட்டு வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி
வந்தார்.
சம்பளப்பணத்தில் செலவு செய்தது போக அவசிய தேவைக்காக ரூ. 3000
பர்சில் வைத்திருந்தார். செவ்வாய்கிழமை பர்ஸை பார்த்த ரேஷ்மாவிற்கு
அதிர்ச்சி காத்திருந்தது. பர்சில் இருந்த பணத்தை காணவில்லை.
யார்
எடுத்திருப்பார்கள் என்ற யோசனையில் பிள்ளைகளிடம் கேட்டார். அவர்களும்
பணத்தை பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர்.
தனது கணவன் கைலாஷ்குமாரிடம் 3000 பணத்தை எடுத்தியா என்று கேட்டார். அதற்கு
முதலில் மறுத்த அவன், பின்னர் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக
கூறினான்.
அதற்கு கணவனை திட்டி சண்டை போட்டார் ரேஷ்மா. கைலாஷ் குமாரின்
கோபம் அதிகரித்தது. மாறி மாறி சண்டை போட்டு திட்டிக்கொண்டனர்.
ஆத்திரமடைந்த கைலாஷ் குமார் ரேஷ்மாவின் தலைமுடியை பிடித்து தரதரவென
இழுத்துச்சென்று கீழே வீசினார்.
முகத்தின் அருகே வாயை கொண்டு போய் மூக்கை
கடித்து துப்பினார். இதில் ரேஷ்மா அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்
பக்கத்தினர் ஓடி வந்து ரேஷ்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரேஷ்மா அளித்த புகாரின் பேரில் கைலாஷ் குமார் மீது எப்ஐஆர் பதிவு
செய்துள்ளனர். படுகாயமடைந்த ரேஷ்மாவின் மூக்கின் மேல் 15 தையல்
போடப்பட்டுள்ளது. ஐசியுவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வெட்டியாக ஊரைச்சுற்றிய கணவன், பர்ஸில் இருந்து பணத்தை எடுத்ததோடு
கேள்வி கேட்ட மனைவியை படுகாயப்படுத்திய சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து இளவரசி டயானா மறைந்து 23 வருடங்களுக்கு மேலாகியும் அவரது
புகழ் கொஞ்சம் கூட மறையவில்லை. அவர் உடற்பயிற்சி செய்யும் போது
அணிந்திருந்த நேவி ப்ளூ டி-சர்ட் ஒன்று தற்போது சுமார் 37 லட்சம்
ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதன் மூலம் அவரை நேசிப்பவர்கள் இன்னமும்
இருக்கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள், நகைகள், புகைப்படங்கள் போன்றவை
அவ்வப்போது ஏலத்தில் விடப்படுவது வழக்கம். இதற்கு முன்பும் கடந்த 2017ஆம்
ஆண்டில் அவர் பயன்படுத்திய வெள்ளி கைப்பை ஒன்று சுமார் 10 லட்சம்
ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில முக்கியமான நபர்களின் வாழ்க்கை பனித்துளிபோல் முதல் நாள் இரவில் தோன்றி
மறுநாள் காலையில் சூரியன் உதித்த உடனே உருகி காணாமல் போவது போல்
மிகக்குறுகிய காலத்தில் தோன்றி மறைந்துவிடுவதுண்டு. அதற்கு ஒரு உதாரணம்,
டயானா பிரான்செஸ் ஸ்பென்சர் எனப்படும் டயானா.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1961ஆம் ஆண்டில் பிறந்து வளர்ந்து
பின்னாளில் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட நெருக்கத்தால், இளவரசர்
சார்லஸ் உடன் காதல் வயப்பட நேர்ந்தது.
இதனையடுத்து தனது 20ஆவது வயதில்
சார்லஸை மணந்து வெகு விரைவிலேயே இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். இவை
எல்லாமே மின்னல் வேகத்தில் தோன்றி சட்டென மறைந்தது போல் ஆகிவிட்டது.
டயானாவின் அழகு
இயற்கையிலேயே டயானா அழகி என்பதால் தான் பயன்படுத்தும் பொருட்களையும்
அழகானதாகவும் காஸ்ட்லியானதாகவும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வந்தார்.
அவர்
பயன்படுத்திய ஆடைகள், கைப்பை முதல் கைக்கடிகாரம் வரை அனைத்துமே லட்ச
ரூபாய்க்கும் கூடுதலாகவே இருந்தது. மேலும் அவர் பயன்படுத்திய பொருட்கள்
அனைத்தும் அன்றைய கால கட்டத்தில் ஃபேஷனாக மாறியதும் உண்டு.
அதேபோல்
அவரையும் அவர் பயன்படுத்தும் பொருட்களையும் பார்த்து படம் பிடிப்பதற்காகவே
பாப்பராசிகள் (paparazzi) என்னும் பத்திரிக்கை நிருபர்களும்
காத்திருந்ததும் நடந்தது.
டயானா மரணம்
கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில்
பாப்பராசிகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக காரில் வேகமாக சென்றபோது
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
அவர்
மரணமடைந்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவரின்
புகழும், அவர் பயன்படுத்திய பொருட்களின் மீதும் இன்றைக்கும்
பெரும்பாலானவர்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்பது ஆச்சர்யமளிக்கும்
உண்மையாகும்.
டயானாவின் பொருட்கள் ஏலம்
டயானா பயன்படுத்திய பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவது
வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் அவர் பயன்படுத்திய 78 பொருட்களை
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
அதில் குறிப்பாக அவர் பெயரின் முதல்
எழுத்தை குறிக்கும் D என்னும் எழுத்து பொறிக்கப்பட்ட நெக்லஸ், வெள்ளியால்
செய்யப்பட்ட கைப்பை, அவர் திருமணத்தில் வெட்டப்பட்ட கேக் துண்டு போன்றவை
அப்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
ரூ. 37 லட்சத்திற்கு ஏலம்
வெள்ளியால் செய்யப்பட்ட கைப்பை மட்டுமே சுமார் 15000 பவுண்டுகளுக்கு மேல்
விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் உடற்பயிற்சி செய்யும்போது
அணிந்திருந்த நேவி ப்ளு ஸ்வெட்டர் டைப் டி-சர்ட் ஒன்று சமீபத்தில் ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டது. ஏல விற்பனையின் முடிவில் அந்த டி-சர்ட் சுமார் 37
லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்தும் மறையாத புகழ்
நேவி ப்ளூ ஸ்வெட்டர் டி-சர்ட் ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையானதற்கு
முக்கிய காரணம், டயானா கார் விபத்தின் போது அதே போல ஒரு நீல கலர்
டி.-சர்ட்டையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மறைந்தது 22
ஆண்டுகள் ஆன பின்பும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் அதிக விலைக்கு
விற்பனையானது, அவரின் புகழ் இன்னும் குறையவில்லை என்பதையே உணர்த்துகிறது.