வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-09-29
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 10, 2019

மதுராந்தகம் வட்டம் விண்ணம்பூண்டி விவசாயியிடம் லஞ்சம் பெற்று சிக்கிக் கொண்ட சர்வேயர் | Land Surveyar arrested when getting Bribery from Former

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணம்பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி செல்லப்பன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.







இந்நிலையில் பட்டா மாற்றம் செய்ய ஒரத்தி நில அளவையர் (Surveyor) ராஜகுரு மற்றும் உதவியாளர் (Assistant) திருப்பதி ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். இந்த லஞ்ச பணத்தை அளிக்க இயலாத விவசாயி செல்லப்பன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.


பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய பணத்தை விவசாயி செல்லப்பன் என்பவர் நில அளவையர் மற்றும் உதவியாளரிடம் அளித்தபோது, அங்கு மறைந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜகுரு மற்றும் திருப்பதி ஆகியோரை நேற்று (09.10.2019) கைது செய்தனர். மேலும் இதில் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tuesday, October 08, 2019

ப.சிதம்பர பரிதாபங்கள்: ஒரு வேளை உணவை மூணு வேளைக்கு சாப்பிடுகிறார்! எட்டு கிலோ குறைந்தார். P. Chithambaram is losing his weight to 70kg

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 'ஹெச்.பி.எஃப்' எனும் பெயரில் ஒரு அரசு நிறுவனம் இருந்தது. ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் என்பதே இது. 


நம் தேசத்தின் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் எக்ஸ் ரே உள்ளிட்டவைகளுக்கான ஃபிலிமை தயாரித்த நிறுவனம். இந்த நிறுவனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தனர். 

அவர்களின் குடும்பத்தையும் சேர்த்தால் சில ஆயிரக்கணக்கான மக்கள் பிழைத்தனர். இந்த நிறுவனத்தில் கட்டமைப்பு வசதிகளுக்காக சில ஆயிரம் கோடிகளை அரசு முதலீடு செய்து, சூப்பர் ஸ்பெஷல் மெஷிஇதைன்களை வாங்கி வைத்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்நிறுவனத்தின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஒரேடியாக மூடப்பட்டுவிட்டது.

உள்நாட்டிலேயே இப்படியொரு சூப்பர் நிறுவனம் இருக்கையில், வெளிநாட்டின் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து நாம் ஃபிலிமை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் பல கோடி ஏழைகள் எக்ஸ்ரே மருத்துவ செலவுக்காக தங்கள் சக்தியை மீறி செலவு செய்கின்றனர்.
இதை ஏன் இங்கே சொல்கிறோம் என்றால்.....இந்த 'HPF' நிறுவனம் முடங்கியதன் பின்னணியில் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகள் சுட்டிக்காட்டப்படுகிறது அழுத்தமாக. சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ப.சிதம்பரத்தின் வட்டாரம், இந்த அரசு தொழிற்சாலைக்கு இப்படியொரு நிற்கதி நிலையை கொண்டுவந்துவிட்டார், அதை நம்பி இருந்த குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. 

ரெண்டு வேளை சோறு கூட அவர்களில் பலருக்கு உறுதியில்லை! என்று குமுறுகிறார்கள். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் ஏக கெடுபிடியில், திகார் சிறையிலிருக்கும் ப.சிதம்பரம் பெரும் துயரத்தில் இருக்கிறாராம். ஒரு அரசன் போல் வாழ்ந்து பழகிவிட்ட அவரால் சிறையின் அவஸ்தை வாழ்க்கையை சகிக்க முடியவில்லையாம். அதில் உச்ச கொடுமை, உணவு சிக்கல்தான்.

சிறைக்குள் வரும்போது 78 கிலோ எடை இருந்தவர், எட்டு கிலோ இழந்து இப்போது எழுபது கிலோதான் இருக்கிறாராம். வட இந்திய சிறை உணவுகள் அவருக்கு ஒத்து வராததால் வீட்டு உணவை எடுத்துக் கொள்ள உத்தரவிடும்படி நீதிமன்றத்தை அவரது குடும்பம் அணுகியது. இதற்கு சி.பி.ஐ.யும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனவே வீட்டில் சமைக்கப்பட்ட உணவை ஒரு வேளை மட்டும் வழங்கிடலாம்! என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொடியுடன் இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம், ரசம் சாதம், தோசை, ஆப்பம், இடியாப்பம் என்று எளிதாக செரிமானமாகும் உணவுகளாக கொடுக்கப்படுகின்றனவாம்.

ஒரு வேளை மட்டுமே வீட்டிலிருந்து வரும் உணவை, மூன்று வேளைக்கும் பிரித்து வைத்து உண்கிறாராம் சிதம்பரம். மூன்று வேளையும் மூன்று ரகங்களில் விதவிதமாய் உண்டு பழகிய நாக்கின் நிலையை பாருங்கள்.

விதி வலியதுதானே!

Sunday, October 06, 2019

ஆபாச பேச்சு நடிகை நிலானிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது | Man arrested for threatening Actress Nilani

சின்னத்திரை நடிகை நிலானியை செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் அடுத்த அஷ்டலட்சுமி நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை நிலானி.



இவர், கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் இவரது காதலர் காந்தி லலித்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார்.இதற்கிடையே  காதலருடன் ஏற்பட்ட தகராறில்   பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார். காதலரின் சாவுக்கு நிலானி காரணம் என புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது அவரது நண்பர் காப்பாற்றினார்.


கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற போது அவருக்கு உதவிய  அவரது நண்பர் காட்பாடியை சேர்ந்த மஞ்சுநாதன் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக நிலானி புகார் கொடுத்தார். அதன்படி, போரூர் போலீசார் மஞ்சு நாதனை கைது செய்துள்ளனர்.

Saturday, October 05, 2019

நடிகை ரேவதி மீது இப்படிப்பட்ட வழக்கா...? அதிர்ச்சியில் தமிழ் மக்கள் | Tamil Actress Revathi News Case

நடிகை ரேவதி மற்றும் மணிரத்தினம் ஆகியோர் கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் குறிப்பிட்டது என்னவெனில் நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் தாக்கப்படுவதாகவும், சிறுபான்மையினர் இந்தியாவில் வாழவே மிகவும் அச்சப்படுவதாகவும் எழுதப்பட்டது.


அக்கடிதத்தில் மேற்கண்ட விவகாரம் சம்மந்தமாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து நீண்ட கோரிக்கையினை முன்வைத்தனர். அந்த கடிதத்தில்



  • நாட்டின் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதனாலேயே ஒருவர் தேசதுரோகி, தேசவிரோதி என்றெல்லாம் முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. 
  • எந்த ஒரு குடிமகனும் தனது சொந்த நாட்டிலேயே உயர்பயத்துடன் பய உணர்வோடு வாழக்கூடாது.

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 03/10/2019 அன்று பீகார் நீதிமன்றத்தில் 50 நடிகை நடிகர்கள் மீதும் FIR போடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நடிகை ரேவதி மீது தற்போது தேச துரோகி வழக்கு பாய்ந்துள்ளது.

இனி தனியார் ரயிலில் பணிப்பெண்கள்! விவரம் உள்ளே | Courtesans at Private Trains in India

இந்தியாவில் ரயில் சேவையைத் தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. முதல்கட்டமாகத் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் சேவையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று (அக்டோபர் 4) தொடங்கி வைத்தார். விமானத்தைப் போல பணிபெண்கள் சேவை உட்பட அனைத்து வசதிகளும் இந்த ரயிலில் பயணிகளுக்காக ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.




லக்னோ டெல்லி இடையே இயக்கப்படும் இந்த ரயில் ரயில்வேயின் ஒரு அங்கமாக இருக்கும் ஐஆர்சிடிசியால் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் 166 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக இன்று தனியார் மூலம் விரைவு ரயில் இயக்கப்பட்டது.





வாரத்தில் ஆறு நாட்கள் லக்னோ முதல் டெல்லி வரை இயக்கப்படும் இந்த ரயிலானது, லக்னோவிலிருந்து காலை 6.10 மணிக்குப் புறப்பட்டு டெல்லி ரயில் நிலையத்தை நண்பகல் 12.25 மணிக்கு வந்தடையும். ஏறக்குறைய 6.15 நிமிடங்களில் டெல்லியை அடையும். இடையில் கான்பூர், காஜியாபாத் ஆகிய இரு இடங்களில் மட்டுமே நின்று செல்லும். டெல்லியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.05 மணிக்கு லக்னோ வந்தடையும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


இந்த ரயிலின் எக்ஸிக்யூடிவ் ஏசி கார் சேர் கோச்சுக்கு ரூ.2,450ம், ஏசி சேர் கார் கோச்சுக்கு ரூ. 1,280ம் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்ஸிக்யூடிவ் கோச்சில் 56 பேரும், ஏசி கோச்சில் 78 பேரும் பயணிக்கலாம். இந்த ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸைப் பொறுத்தவரை, ஐஆர்சிடிசி டாக்ஸி வாடகை, ஹோட்டல் முன்பதிவு போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடும் வழங்கப்படும்.


ஒரு மணி நேரத்துக்கு ரூ.100ம், இரண்டு மணி நேரத்துக்கு ரூ.250ம் வழங்கப்படும். இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச பயண காப்பீடு வழங்கப்படும். பயணிகளின் உடமைகளை அவர்களது வீட்டிலிருந்து எடுத்து வருவதும், மீண்டும் கொண்டு சேர்க்கும் பணியையும் ஐஆர்சிடிசி வழங்கவுள்ளது. ரயில் சேவை ஊழியர்களால் உணவு வழங்கப்படும், ஆர்.ஓ தண்ணீர் வழங்கப்படும்.


டீ, காபி தயாரிக்கும் இயந்திரங்கள் ரயில் பெட்டியில் வைக்கப்படும் சொகுசு வசதிகளான இருக்கை முன் எல்சிடி தொலைக்காட்சி, படிப்பதற்கு வசதியாக மின்விளக்குகள், செல்போன் சார்ஜ் வசதி, கண்காணிப்பு கேமரா என்பன உட்பட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர கால் பட்டனை அழுத்தினால், சேவை ஊழியர்கள் வந்து பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவார்கள். இதற்காக விமானத்தைப் போல பணிப்பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். க்ரூவ் சர்வீஸ்க்காக தனியாக நேர்காணல் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.