Run World Media: 06/19/20

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 19, 2020

சரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில் | Vil Ambu News

 சரஸ்வதிக்கு ஏகப்பட்ட கள்ளக்காதலர்கள்.. தன் சந்தோஷத்துக்கு மகள் தொந்தரவாக இருந்ததால், கட்டையால் அடித்து அவரை கொன்றே விட்டார் சரஸ்வதி.. இப்போது 7 வருஷம் ஜெயில் தண்டனை அவருக்கு கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சரஸ்வதி.. 29 வயதாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு 5 குழந்தைகள்.
ஆனால் சரஸ்வதிக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.. பல பேருடன் கள்ளக்காதல் நீடித்தும் வந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 2017-ம் வருஷம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி சரஸ்வதியின் மகள் திரிஷா திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்... திரிஷாவுக்கு 4 வயசு.

குழந்தையை டெஸ்ட் செய்த டாக்டர்கள் திரிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.. அதனால் இந்த விஷயம் போலீசுக்கு போனது.. ஊட்டி நகர மேற்கு போலீசார் சந்தேக மரணமாக இதன்மீது கேஸ் பதிவு செய்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது. அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில் திரிஷாவின் தலையில் பலமான அடிபட்டுள்ளதாகவும், யாரோ கட்டையால் அடித்துள்ளதாகவும் கூறப்பட்டது..
அதனால் முதல் கிடுக்கிப்பிடி விசாரணையே சரஸ்வதியிடம் ஆரம்பித்தனர்.. எடுத்த எடுப்பிலேயே உளறி கொட்டினார் சரஸ்வதி. கள்ளக்காதல் செய்யும்போது ஒருமுறை திரிஷா நேரில் பார்த்துவிட்டாராம்.. இந்த காதல்களுக்கு எல்லாம் திரிஷா தடையாக இருந்ததால்தான் கட்டையால் அடித்து கொன்றதாக பெற்ற தாய் வாக்குமூலம் தந்தார். இதையடுத்து சரஸ்வதியை ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் ஊட்டி மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணையும் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.. அதட்னபடி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற மகளையே கொலை செய்த சரஸ்வதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சரஸ்வதியை கோவை மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

சரஸ்வதியை கைது செய்தபோதே, மற்ற குழந்தைகள் 4 பேரையும் ஒரு காப்பத்தில் சேர்த்தனர்.. அங்குதான் அவர்கள் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய தமிழ் ராக்கர்ஸ்: கீர்த்தி சுரேஷ் பாவம் | Tamil Rockers | Vil Ambu News

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று ஓடிடியில் வெளியான பெண்குயின் படம் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுகம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்த பெண்குயின் படம் இன்று ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் நல்ல வேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


பெண்குயின் படத்தில் கீர்த்தி தன் மகனை தொலைத்துவிட்டு தேடித் திரியும் கர்ப்பிணி தாயாக நடித்துள்ளார். கீர்த்தியின் நடிப்பை குறை சொல்வதற்கு இல்லை. கீர்த்தி ஒல்லியாகிப் போன பிறகு வயதானவர் போன்று தெரிவதாக ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். ஆனால் ரிதம் கதாபாத்திரத்திற்கு கீர்த்தி கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.


விறுவிறுப்பாக போக வேண்டிய படம் இரண்டாம் பாதியில் சொதப்பிக் கொண்டது. கீர்த்தியின் மகனை கடத்தியது யார், ஏன் கடத்தினார் என்பது தெரிய வரும்போது இம்புட்டு தானா என்பது போன்று ஆகிவிடுகிறது. படம் எப்பொழுது முடியும் என்று நினைக்கும் அளவுக்கு இரண்டாவது பாதி ஊர்ந்து செல்கிறது.

படத்தை பார்த்தவர்கள் கீர்த்தி சுரேஷின் நடிப்பு நன்றாக இருக்கிறது. மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெண்குயின் படம் ஓடிடியில் ரிலீஸான வேகத்தில் அதை தமிழ் ராக்கர்ஸ் ஆட்கள் கசியிவிட்டுள்ளனர். பெண்குயின் படத்தை கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது புகார் அளிக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


எந்த படம் வெளியானாலும் அது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை ஆன்லைனில் கசியவிடுவதையே ஃபுல்டைம் வேலையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் முடங்கிப் போயிருக்கிறது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் மட்டும் முடங்கவில்லை. முன்னதாக கடந்த மாதம் வெளியான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் கசியவிட்டு வேடிக்கை பார்த்தது. அதுவும் பொன்மகள் வந்தாள் ஓடிடியில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டது.


தமிழ் ராக்கர்ஸால் தயாரிப்பாளர்கள் தான் பாவம் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த தமிழ் ராக்கர்ஸ் ஆட்களுக்கு ஒரு முடிவே இல்லையா, அவர்களை அடக்க ஒருத்தர் கூடவா இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் அடைக்காமல் விட மாட்டேன் என்று முன்பு விஷால் சபதம் எடுத்தார். சபதம் எடுத்த கையோடு அதற்கான வேலையிலும் ஈடுபட்டார். அதன் பிறகு அவர் அந்த பொறுப்பை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டு தன் பட வேலைகளை பார்க்கச் சென்றுவிட்டார்.


புதுப்படங்களை வெளியிடும் முன்பு அதை தமிழ் ராக்கர்ஸில் வெளியட தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தயாரிப்பாளர்கள் நீதிமன்றங்களுக்கு செல்கிறார்கள். அவர்கள் தடை உத்தரவு வாங்கிய பிறகும் கூட தமிழ் ராக்கர்ஸ் புதுப்படத்தை கசியவிடுகிறது. சில தயாரிப்பாளர்களோ தங்கள் படத்தை கசியவிட வைக்க வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸிடமே கோரிக்கை விடுத்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸை அடக்க ஹீரோ அல்ல அதற்கும் மேல் ஒருவர் தேவைப்படுகிறார். அந்த நபர் எப்பொழுது வருவார் என்பது தான் தெரியவில்லை.

ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு | Vil Ambu News

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
 
உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார். நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர்.
 


இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே  பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.ஏதேனும் சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் 2 பேர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து கவுதம் புத்தா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து 
போலீசார் கூறும் போது  லக்னோவுக்கும், மதுராவுக்கும் இடையே பேருந்து சென்றுகொண்டு இருக்கும் போது இரவு 2 மணியளவில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.பேருந்தின் கடைசி சீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஓட்டுநர்களில் ஒருவரை கைது செய்யப்பட்டு உள்ளார். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரு நபர்களைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி; தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு | 10th all pass updated news | Vil Ambu News

10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
 நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த நிலையில், 10ம் வகுப்புக்கான பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது.  கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
 

எனினும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் 10ம்வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.  சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர் என்றும் 50 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.

இந்நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  இந்த தகவலை உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
 

காதலனுடன் ஓடிய மகள்.. ராத்திரியோடு ராத்திரியாக கொன்று.. தீவைத்து எரித்து .. ஒரு தாயின் கொடூர செயல்!

ராத்திரியோடு ராத்திரியாக மகளின் சடலத்துக்கு தீ வைத்து இறுதி சடங்கையும் செய்துவிட்டார் பெற்ற தாய்.. இந்நிலையில், தன்னுடைய காதலி சாவித்ரி, ஆணவ கொலை செய்யப்பட்டுவிட்டதாக, காதலன் அளித்த புகாரின்பேரில் தாய் உள்ளிட்ட 7 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் விவேக்.. இவர் ஒரு பெயிண்ட்டர்.. 

திருவரங்குளம் பகுதியை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணை காதலித்தார்.. சாவித்திரி புதுக்கோட்டை அரசு கல்லூரியில் 3-ம் வருடம் படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் திருவரங்குளம் அரசுப்பள்ளியில் பத்தாம் கிளாஸ் வரை ஒன்றாக படித்தவர்கள்.. 8 வருஷமாகவே உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளனர்.. இருவருக்கும் இப்போது 20 வந்துள்ளனர்.. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.. இந்த காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.கண்டிப்பு 
அதனால் அவரது அம்மா மகளை கண்டித்துள்ளார்.. மேலும் அவசர அவசரமாக சாவித்திரிக்கு அறந்தாங்கியை சேர்ந்த ஒருவருடன் கல்யாணமும் பேசி முடித்துள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சாவித்திரி, விவேக்கிடம் அழுதுள்ளார்.. தன்னை எங்காவது அழைத்து சென்றுவிடும்படியும், ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளும்படியும் கதறி உள்ளார்.


சாவித்ரி
இதனால் விவேக்கும் சாவித்திரியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு ஒரு வாடகை காரையும் ஏற்பாடு செய்தார். பின்னர் கடந்த 7ஆம் தேதி இரவு 2 பேரும் அந்த காரில் புறப்பட்டுள்ளனர். ஆனால், வழியில் குளித்தலையில் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.. அப்போது விவேக்கிற்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்று சொல்லி, சாவித்திரியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்தனர்.


மர்ம மரணம் 
மேலும் விவேக்கிற்கு திருமண வயது எட்டும் வரை, வேறொருவரை திருமணம் செய்ய சாவித்திரியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவாதத்தினை பெற்றோரிடம் போலீசார் வாங்கி கொண்டு அனுப்பினர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சாவித்திரி பிணமாக கிடந்தார்... அவரது மர்ம மரணத்துக்கு காரணமும் தெரியவில்லை.. மேலும் சொந்தக்காரர்களுக்கும் தெரியப்படுத்தாமல், இரவோடு இரவாக சாவித்திரியின் உடலை ஒருசில உறவினர்களே சேர்ந்து எரித்து இறுதி சடங்குகளையும் முடித்து விட்டனர்.


விசாரணை 
இதை பற்றி அக்கம் பக்கத்தில் கேட்டதற்கு தூக்கு போட்டு இறந்து விட்டார் என்று உறவினர்கள் சொல்லி உள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் தெரிந்து ஆவேசமடைந்த விவேக், காதலியை ஆணவ கொலை செய்து விட்டதாக புதுக்கோட்டை எஸ்பி ஆபீசில் புகார் தந்தார்.. அதனடிப்படையில் விசாரணை ஆரம்பமானது.

7 பேர் மீது வழக்கு 
இதனிடையே சாவித்திரியின் சடலத்தை வருவாய்த் துறையினருக்குகூட தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக திருவரங்குளம் விஏஓ இளையராஜா மற்றொரு புகார் தந்தார். இதன்பேரில்தான் சாவித்ரியின் பெற்றோரிடம் விசாரணை ஆரம்பமானது.. பின்னர், சாவித்திரியின் தாயார் சாந்தி, பெரியம்மா விஜயா, மாமா முருகேசன், பெரியப்பா நடேசன், முருகேசன், தாய்மாமா சிதம்பரம் என 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தமிழகம் 
காதலி ஆணவ கொலை செய்யப்பட்டதாக காதலர் புகார் அளித்த நிலையில், பெண்ணின் தாய் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மட்டுமில்லாமல் தமிழகம் முழுதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் மாதர் சங்கமும் தலையிட்டுள்ளது.. எப்படியாவது இறந்துபோன பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்