வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 14 வயதில் தாயான சிறுமி.. வள்ளியூரை பதற வைத்த வக்கிர பலாத்காரம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

14 வயதில் தாயான சிறுமி.. வள்ளியூரை பதற வைத்த வக்கிர பலாத்காரம்நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென வயிற்று வலி வந்துவிட்டது.

டாக்டர்கள் பரிசோதனை
 வலி பொறுக்க முடியாமல் மாணவி அழுது புரண்டாள். அதனை பார்த்து பதறிபோன பெற்றோர்கள் மகளை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், பெற்றோரிடம் "பிரசவ வலியால் துடிக்கிறாள், அதனால் உடனே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்கள்" என்று சொன்னார்கள்.  (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

ஆண் குழந்தை
 இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், வயிற்று வலியால் துடிக்கும் மகளை எதுவும் கேட்காமல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள். அங்கு சென்ற கொஞ்ச நேரத்திலேயே சிறுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நிலைகுலைந்து போன பெற்றோர்கள் கதறி அழுதார்கள்.மிரட்டி பாலியல் 
 பிறகு சிறுமியிடம் தந்தை, விசாரித்தபோது தான் உண்மை நிலவரத்தை கூறினாள். செல்வம் என்னும் கட்டிட தொழிலாளி தன்னை கட்டாயப்படுத்தி இந்த நிலைமைக்கு ஆளாக்கினார் என்றும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே 2 ஆண்டுகளாகவே இப்படித்தான் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் சிறுமி அழுதுகொண்டே தெரிவித்தாள்.


செல்வம் எஸ்கேப்
 இதையடுத்து சிறுமியின் தந்தை வள்ளியூர் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். தன் மகளின் பாழாக்கிய செல்வத்தை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார். ஆனால் செல்வம் தற்போது எஸ்கேப். அதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment