வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என் ரோஜா உன்னிடம் வந்து சேர்ந்ததா அன்பே.. உருக வைத்த இங்கிலாந்து பெண்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

என் ரோஜா உன்னிடம் வந்து சேர்ந்ததா அன்பே.. உருக வைத்த இங்கிலாந்து பெண்!இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரது இதயத்தையும் உருக்கியுள்ளது. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உணர்ச்சிப் பெருக்கான சம்பவம் இது.


 பிர்மிங்காமின் சுட்டன் கோல்ட்பீல்டில் ஒரு படகு மையம் உள்ளது. அதன் பெயர் பிவிஜிஎஸ் ரோவிங். இந்த படகு இல்லத்தின் நுழைவாயில் கேட்டில் ஒரு ரோஜாப் பூவும், கூடவே ஒரு குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது. அதை வைத்தது யார் என்று தெரியவில்லை.   (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!
 அதைப் பார்த்த அந்த படகு மையத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் குறிப்பைப் பார்த்து அதிர்ந்து விக்கித்து நின்று விட்டனர். அந்த குறிப்பில், யாராவது இந்த ரோஜாவை ஏரியில் போட முடியுமா? எனது மறைந்த கணவரின் அஸ்தி இந்த ஏரியில்தான் கலந்துள்ளது.
 
 என்னால் ஏரிக்குச் செல்ல முடியவில்லை. எனது வீல் சேர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் படகு இல்லத்தின் நுழைவாயிலும் மூடப்பட்டு விட்டது. நான் இரவுக்குள் வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டும். நன்றி என்று எழுதப்பட்டிருந்தது. 
 
இதைப் பார்த்து நெகிழ்ந்து போன படகு இல்லத்தினர் அந்த ரோஜாவை, பெயர் முகம் தெரியாத அப்பெண்ணின் விருப்பபடி ஏரியின் நடுவில் விட்டனர். மேலும் அதை புகைப்படம் எடுத்து தங்களது டிவிட்டரிலும் போட்டுள்ளனர். அதில் யார் என்று தெரியாது. ஆனால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.


வைரல் புகைப்படம்
 உலகெங்கும் இந்த ரோஜா புகைப்படமும், அப்பெண்ணின் நெகிழ்ச்சியான கோரிக்கையும் வைரலாகியுள்ளது. பலரும் உருக்கமாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். மனிதம் உயிர்ப்போடு இருக்கிறதென்றால்.. அந்த உயிர்ப்பை பிடித்து இறுக்கி வைத்திருப்பது காதல்தான்... அன்பும், பாசமும், காதலும் இயைந்து உருகி ஓடுகிறது இப்பெண்ணின் உணர்வுகளில்.


உயிர்ப்பிக்கப்பட்ட மனிதம் 
மனிதகுலம் மீதான நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மனிதம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.வருத்தத்துடன் கூடிய மகிழ்ச்சி
 இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. படகு இல்லத்துக்குப் பாராட்டுக்கள்.


அருமையான செய்தி
 நான் இதுவரை படித்த செய்திகளிலையே மிகவும் அழகான, அதேசமயம், மிகவும் துயரமானது இதுதான்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment