வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேளச்சேரியில் 2 மாத குழந்தை மாயம்: தாயே கொன்றது அம்பலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 08, 2018

வேளச்சேரியில் 2 மாத குழந்தை மாயம்: தாயே கொன்றது அம்பலம்வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது.

சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன் கோவில் ஏரிக்கரை அருகில் குடியிருப்பில் வசிப்பவர் வெங்கண்ணா (30) இவரது மனைவி உமா (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு 2 மாதத்துக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை சந்தோஷமாக வளர்த்து வந்த அவர்கள் நேற்று முன் தினம் காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து தூங்கியதாகவும், அப்போது பக்கத்தில் படுத்துக்கிடந்த குழந்தையை காணவில்லை. யாரோ குழந்தையைக் கடத்திவிட்டதாக கணவன் மனைவி இருவரும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


போலீஸார் புகாரைப்பெற்று குழந்தையைத் தேடினர். ரோந்துப்போலீஸார் சிலர் அதிகாலையில் அதிகாலை பெண் ஒருவர் குழந்தையை மார்பில் அணைத்த படி தட்டி கொடுத்து கொண்டே சென்றதை பார்த்ததாக விசாரணையில் தெரியவந்தது. பெற்றோர் புகாரில் அவர்களில் தாய் உமா பதற்றம் செயற்கையானதாக இருப்பதும், மழைக்காலத்தில் கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள் காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்து தூங்கியதாக கூறியது நம்பும்படியாக இல்லை என்பதால் போலீஸார் சந்தேகத்துடன் விசாரணை நடத்தினர்.


ஆனால் ரோந்து போலீஸார் ஒரு பென் குழந்தையை தூக்கிச் சென்றதை பார்த்தேன் என்று கூறியதால் போலீஸாருக்கு குழப்பமாக இருந்தது. இதனால் தாய் உமாவை ரோந்து போலீஸாரிடம் காட்டியபோது அவர்தான் என்று கூறினர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, உமா குழந்தையை ஏரிப்பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து உமாவைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். குழந்தையை கொன்றது நான்தான் அருகில் உள்ள ஏரியில் பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிவிட்டேன் என்று கூறியுள்ளார்.


குழந்தை பால்குடிக்கும் போது தனக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பலமுறை வெங்கண்ணாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளாததல் வலி தாங்க முடியாமல் குழந்தையைக் கொலை செய்து ஏரியில் உடலை வீசியதாக ஒப்புக் கொண்டார். கொலை செய்ததற்கான காரணத்தை உமா கூறியதை போலீஸாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் குழந்தையைக் கொலை செய்ததால் அவரை போலீஸார் கைது செய்தனர். மனநல பாதிப்பால் குழந்தையை உமா கொன்றிருப்பார் என தெரிகிறது இதுபோன்ற மனப்பிறழ்வுகள் ஆயிரத்தில் ஒருவருக்கு நடக்கும் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Popular PostsNo comments:

Post a Comment