வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சபரிமலை: கேரள அரசுக்கு திடீர் நெருக்கடி; பெண்கள் போராட்டம் தீவிரம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 08, 2018

சபரிமலை: கேரள அரசுக்கு திடீர் நெருக்கடி; பெண்கள் போராட்டம் தீவிரம்


கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.


கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத் தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
 

இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’என தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து வரும் ஏராளமான ‘‘பெண்கள் 50 வயது வரை காத்திருக்க தயார்’’ எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதி்வு செய்து வருகின்றனர். கேரளாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


சனிகிழமையன்று கோட்டயம் மற்றும் சங்கனாச்சேரியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும், அதனை சீராய்வு செய்து மனு அளிக்கபோவதில்லை என கேரளா அரசு கூறியதை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.


இதன் ஒரு பகுதியாக ஆரண்மூலாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. சபரிமலை அய்யப்பன் கோயில் ஐதீகத்தையும், சம்பிரதாயத்தையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முறையாக எடுத்துரைக்கவில்லை என குற்றம் சாட்டினர். முற்றுகையில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். fff


Popular Posts


No comments:

Post a Comment