வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பேருந்துக்காக காத்திருந்தபோது பரிதாபம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; 8 மாத கைக்குழந்தையும் உயிரிழந்த சோகம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

பேருந்துக்காக காத்திருந்தபோது பரிதாபம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; 8 மாத கைக்குழந்தையும் உயிரிழந்த சோகம்மதுரை அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்தி, கொள்ளுப்பேரன் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
   


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள வடிகப்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி மரத்தி (வயது 60). இவரது மகள் லெட்சுமி (45). இவருக்குத் திருமணமாகி வசந்தி (22) என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.(தொடர்ச்சி கீழே...)    

இதையும் படிக்கலாமே !!!

இவர்களுக்கு அத்விக் என்ற 8 மாத கைக்குழந்தை உள்ளது. மரத்திக்கும், அத்விக்கிற்கும் உடல்நிலை சரியில்லாததால், தாய், மகள், பேத்தி, கொள்ளுப்பேரன் ஆகியோர் குடும்பமாக இன்று (சனிக்கிழமை) காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து மதுரை-சேலம் நான்கு வழிச்சாலைக்கு நடந்து வந்துள்ளனர். சாலையைக் கடந்து எதிர்புறம் மதுரை செல்வதற்கான பேருந்து நிறுத்திற்குச் சென்றுள்ளனர். பேருந்துக்காக சிறிது நேரம் காத்திருந்தனர்.

அப்போது, மதுரையிலிருந்து கோவையை நோக்கிச் சென்ற கார், திடீரென்று தாறுமாறாக ஓடி பேருந்து நிறத்தத்தில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே லெட்சுமியும், அவரது தாய் மரத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வசந்தியும், கைக்குழந்தை அத்விக்கும் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர்களும் இறந்துவிட்டனர். அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதல்கட்ட விசாரணையில், வடுகப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே கார் வந்தபோது காரின் இடதுபக்கம் முன் டயர் பஞ்சராகிவிட்டது. பஞ்சாரானதால் கார் நிலைதடுமாறி அவர்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது. பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்தி, கொள்ளுப்பேரன் ஆகியோர் கார் மோதி பலியான இந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment