வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 15 வயது சிறுவனுக்கும் 60 வயது பாட்டிக்கும் நடந்ததை பாருங்க
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

15 வயது சிறுவனுக்கும் 60 வயது பாட்டிக்கும் நடந்ததை பாருங்கபார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு அசாமில் கோல்பாரா என்ற மாவட்டத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 15 வயது சிறுவன் ஒருவனை படிக்க பள்ளிக்கூடம் அனுப்பினார்கள் அவனது பெற்றோர். ஆனால் படிப்போ சரிவர அவனுக்கு ஏறவில்லை. அதனால் கட்டிட வேலையாவது செய்யட்டும் என்று அந்த வேலைக்கு அனுப்பினார்கள்.

தவறான எண்
 கட்டிட வேலையை பார்த்து வந்த சிறுவனுக்கு நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். இப்படித்தான் ஒரு மாசத்துக்கு முன்னாடி, ஒருநாள் வேலையை சீக்கிரமாகவே முடித்துவிட்டார். அதனால் தன் நண்பர்களிடம் போனில் பேசலாம் என்று செல்போனில் நம்பரை போட்டார். ஆனால் நண்பனுக்கு பதிலாக வேறு ஒரு எண்ணிற்கு போய்விட்டது. ஒரு பெண்தான் போனை எடுத்தார். (தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!
தொடர்ந்து பேசினார்
 தவறான எண் என அந்த பெண் கூறியும் சிறுவனால் போனை கட் செய்ய முடியவில்லை. காரணம், அந்த குரலில் அப்படி ஒரு இனிமை.. குரலை கேட்க கேட்க சிறுவனுக்கு என்னென்னமோ ஆனது. அதனால் அடிக்கடி அந்த பெண்ணுடன் செல்போனில் பேச தொடங்கினான். அந்த பெண்ணும் சிறுவனுடன் தொடர்ந்து பேசினார்.பிரம்மபுத்திரா நதிக்கரை
 ஒரு கட்டத்தில் அந்த குரலை கேட்காமல் சிறுவனால் இருக்கவே முடியவில்லை. இப்படியே நாட்கள் ஓடியது. ஒருநாள் இருவரும் நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்காக பிரம்மபுத்திரா நதிக்கரை ஓடும் சுக்குவாஜார் கிராமத்தில் சந்திப்பதென இடத்தையும் தேர்ந்தெடுத்து கொண்டனர்.


உறைந்த சிறுவன் 
 அதன்படியே சிறுவன் அந்த இடத்திற்கு ஓடோடி சென்றான். இனிமையான குரலுக்கு சொந்தமானவரை காண ஆர்வத்துடன் காத்திருந்தான். அந்த குரலுக்கு உரிமையானவர் எப்படியெல்லாம் இருப்பார் என கனவுகள், கற்பனைகள் ஒருபக்கம் ஓட ஆரம்பித்தது. தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரரும் அங்கு வந்து நின்றார். ஆனால் காத்திருந்த சிறுவன் விக்கித்து உறைந்து ஷாக்காகி போய் நின்றான்.சிறுவன் அதிர்ச்சி 
காரணம், வந்து நின்றது 60 வயது பாட்டி. ஆனால் இதைவிட அதிர்ச்சி, இருவருக்கும் மூதாட்டியின் குடும்பத்தினர் கல்யாணம் செய்து வைக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கணவனை இழந்த பாட்டியிடம் கேட்டபோது, "அவரது பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை என் உயிர் நண்பராகவே நினைக்கிறேன், திருமணம் செய்ய நினைக்கவில்லை" என்கிறார்.


சிறுவனின் நிலை
 என்றாலும், குழந்தைகள் உரிமைகளுக்கான மாநிலப் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. ஒருவேளை இது சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. ஆனால் விக்கித்து நின்ற சிறுவனின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது என்று யாருமே எதுவுமே சொல்லவில்லை!!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment