வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொறுமையின் பெருமை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

பொறுமையின் பெருமை!



நன்றாக உழைத்து, நாலு காசு சம்பாதிக்கிறோம். அதை நல்லவிதமாக செலவு செய்கிறோமா என்றால், பதில் சொல்ல முடியவில்லை.




அதேபோல, பொறுமையில் சிறந்தவள் பூமாதேவி என்போம். அந்த பூமி மீது தான், அனைவரும் நடமாடி, அதன் உதவியால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த பூமாதேவியிடமிருந்து பொறுமையைக் கற்றோமா என்றால், பதில் சொல்ல தெரியவில்லை.


(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மகாமேதாவி, தலைசிறந்த அறிஞர் மற்றும் பெரும் கவி போன்ற சிறப்புகளைப் பெற்றவர் மாதுருகுப்தன். அவரைப் பாராட்டாத மன்னர்களே இல்லை என்று சொல்லலாம். இருந்தாலும், மாதுருகுப்தருக்கு, ஒரு வருத்தம் இருந்தது. 'எல்லாரும் பாராட்டினால் கூட, சிறந்த இலக்கிய ரசிகரான சந்திரகுப்த விக்கிரமாதித்தன் நம்மைப் பாராட்ட வில்லையே... எப்படியாவது அவர் பாராட்டை பெற வேண்டும்...' என்ற எண்ணத்தில், அந்த மன்னரிடம், பணியாளராக சேர்ந்தார்.



'என்றாவது ஒருநாள், பாராட்டாமலா இருக்கப் போகிறார்...' என்று பொறுமையாக, மன்னர் ஏவிய பணிகளை செய்து வந்தார், கவிஞர்.
ஒருநாள், உறங்கிக் கொண்டிருந்த மன்னர், திடீரென விழித்தெழுந்து, 'யாரங்கே...' எனக் கத்த, கவிஞர் போய் நின்றார். 'சற்று வெளியே இரு...' என்ற மன்னர், சற்று நேரத்தில் வெளியில் வந்து, கவிஞரிடம் ஒரு கடிதத்தை தந்தார்.
'இதை பிரித்துப் பார்க்கக் கூடாது; பிரித்து பார்த்ததாக தெரிந்தால், கடும் தண்டனை கிடைக்கும். இதை கொண்டு போய், காஷ்மீரில் உள்ள என் அமைச்சர்களிடம் கொடு...' என்று, ஆணையிட்டார்.



பெரும் கவிஞரான மாதுருகுப்தரும், மன்னர் தந்த கடிதத்தோடு, காஷ்மீர் சென்றார். ஒரு வழியாக அமைச்சர்கள் இருந்த இடத்தை தேடிப் பிடித்து, மன்னரின் கடிதத்தை, கொடுத்தார். கடிதத்தை வாங்கிய அமைச்சர்களோ, அதைப் பிரிக்காமல், 'தாங்கள் தான் மாதுருகுப்தர் என்பவரா?' என, கேட்டனர்.
மாதுருகுப்தருக்கு ஆச்சரியம்...
 




'என் பெயர் எப்படி, உங்களுக்கு தெரியும்?' எனக் கேட்டார்.
பதில் சொன்ன அமைச்சர்கள், 'உங்களுக்கு முன்பே, துாதர் ஒருவரை அனுப்பி, நீங்கள் வருவீர்கள் என்றும், காஷ்மீர் அரசராக உங்களை நியமிக்கும்படியும் மன்னர் கடிதம் அனுப்பியிருக்கிறார். 'காஷ்மீர் அரச சிம்மாசனம், உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதே தகவலைத்தான் இந்தக் கடிதத்திலும் சொல்லியிருப்பார்...' என்றபடியே, மன்னர் அனுப்பிய கடிதத்தைப் பிரித்தனர்.


அவர்கள் சொன்னபடியே இருந்தது கடிதத்தில்.
விவரம் அறிந்த மாதுருகுப்தர், மேலும் வியந்தார். கண்களில் கண்ணீர் ததும்பியது.'ஹூம்... மன்னரைப் புகழ்வதா அல்லது நாம் பொறுமையாக இருந்தோமே, அந்தப் பொறுமையைப் புகழ்வதா... இந்த மன்னர் அளித்தது, சாதாரண பாராட்டா... அரச பதவியை அல்லவா அளித்திருக்கிறார்...' என, மகிழ்ந்தார்.பொறுமை ஒருநாளும் வீண் போகாது என்பதை விளக்கும் வரலாறு இது.வினாடி நேரப் பொறுமையின்மையால் எவ்வளவோ இன்னல்களை அனுபவித்த நாம், பொறுமையாகத்தான் இருந்து பார்க்கலாமே. சாதகம் விளையுமே தவிர, பாதகம் விளையாது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment