வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வைரமுத்துவால் ஐஸ்வர்யா ராயும் பாதிக்கப்பட்டாரா? சின்மயி விவகாரத்தில் மூக்கை நுழைத்தார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

வைரமுத்துவால் ஐஸ்வர்யா ராயும் பாதிக்கப்பட்டாரா? சின்மயி விவகாரத்தில் மூக்கை நுழைத்தார்


கடந்த சில தினங்களாக ஊடகத்துறை, சினிமா துறையை சேர்ந்த பெண்களை தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.
பாலிவுட்டில் நானா படேகர் தொடங்கில் கோலிவுட்டில் வைரமுத்து வரை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் பாடகி சின்மயியிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், அதிலிருந்து தப்பித்த பிறகு வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மறுத்ததற்கு பிரபல அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி மிரட்டியதாகவும் சின்மயி பதிவிட்டிருந்தார்.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சின்மயிக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வைரமுத்து குறித்து வெளிப்படையாக தெரிவித்த சின்மயிக்கு நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
இந்த மூவ்மென்ட்டில் வெளியே வந்ததுக்கு நன்றி! எல்லோரும் அவருடைய தைரியத்தை பாராட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் MeTooIndia குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, பாலியல் துன்புறுத்தல் குறித்து நான் கடந்த காலத்தில் பேசியிருக்கிறேன், இனியும் பேசுவேன்.
 

இப்போது, ஒரு பிரசாரம் முன்னெடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூகவலைதளங்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. MeToo பிரசாரத்தை நாம் நீர்த்துபோகாமல் முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment