வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கணவரை பழி தீர்க்க மனைவியை பலாத்காரம் செய்த இருவர்.. அதன் பிறகு அவர்கள் செய்த கொடூரம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 22, 2018

கணவரை பழி தீர்க்க மனைவியை பலாத்காரம் செய்த இருவர்.. அதன் பிறகு அவர்கள் செய்த கொடூரம்!மேற்கு வங்கம் மாநிலத்தில் ஒருவர் மீதான பகையை தீர்ப்பதற்காக அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம் நடந்துள்ளது. ஜல்பய்குரி மாவட்டத்தில் பழங்குடி கிராமத்தில் கணவன் மீதான தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்காக அவரது மனைவியை பழி வாங்க ரத்ன முண்டா மற்றும் பரிமல் ராய் ஆகியோர் திட்டமிட்டனர். இதனிடையே சம்பவ தினமான சனிக்கிழமை இருவரையும் மது அருந்துவதற்காக வீட்டுக்கு வருமாறு அந்த பெண்ணின் கணவன் அழைத்துள்ளார்.


கணவன் வரவில்லை
இந்நிலையில் இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வரவில்லை. கணவன் இரவு 10 மணி வரை வீடு வராததால் அதிர்ச்சி அடைந்த பெண் இருவரையும் அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு கணவரை தேடி சென்றார்.

பாலியல் பலாத்காரம் 
 இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த இருவரும் அந்த பெண்ணை பின் தொடர்ந்தனர். அப்போது ஒரு குளத்தின் அருகே அந்த பெண்ணை மடக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இரும்புக் கம்பியை சொருகிய நபர்கள் 
 அதன்பிறகும் வெறி அடங்காததால் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை குத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ரிக்ஷா இழுக்கும் நபர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

நிர்பயா சம்பவம்  
பாதிக்கப்பட்ட பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையின் விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் 2012-ஆம் ஆண்டு நிர்பயா சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அவரது மர்ம உறுப்பை இரும்பு கம்பியாலும் பாட்டிலாலும் தாக்கப்பட்ட கொடூரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment