வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மிரட்டி மிரட்டியே.. படு பாதக கள்ளக்காதலன்.. 16 வயதிலேயே பாழான பிஞ்சு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 22, 2018

மிரட்டி மிரட்டியே.. படு பாதக கள்ளக்காதலன்.. 16 வயதிலேயே பாழான பிஞ்சு16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
         

கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக்கி அவளது வாழ்க்கையையே நாசமாக்கி விட்டிருக்கிறார் அந்த கொடூர காம மனிதன்!! நாளுக்கு நாள் கள்ளக்காதல் அவலங்கள் பெருகி வருகின்றன. அதன் முடிவுகளோ பயங்கரமான விளைவுகளை தந்து கொண்டிருக்கின்றன. விவரம் தெரிந்து பெரியவர்கள் செய்யும் கள்ளக்காதலால் பிஞ்சுகளும், உலகம் அறியா குழந்தைகளும்தான் சிக்கி சீரழிகிறார்கள்.


கள்ளக்காதல் 
தண்டையார்பேட்டையில் கணவரை பிரிந்த ஒரு பெண் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவரை பிரிந்த பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக உருவாகி நின்றது. இப்படித்தான் 2 வருடங்கள் இந்த கள்ள உளவு போய் கொண்டிருந்தது.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

மிரட்டி பலாத்காரம் 
 ஒருநாள் மகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் மகளை கூட்டிக் கொண்டு மருத்துவமனை சென்றார் தாய். ஆனால் அங்கே போனபிறகுதான் விஷயம் தெரிந்தது, மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று. இதை கேட்டு ஷாக் ஆன அம்மா, என்ன விவரம், யார் காரணம் என்றெல்லாம் விசாரித்தார். அதற்கு மகள், ஆட்டோ ஓட்டுனர் தண்ணி அடித்துவிட்டு தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.


பாட்டி வீட்டில் சிறுமி 
 மேலும் இப்படி மிரட்டி மிரட்டியே பலமுறை நாசம் செய்ததாக கூறி அழுதாள் அந்த சிறுமி. இதைக் கேட்ட தாய், மேலும் ஷாக் ஆனார். அதன்பிறகு அந்த ஆட்டோ டிரைவரை உண்டு இல்லை என்று ஒருவழி பண்ணிவிடுவார் என்று பார்த்தால், சிறுமியை அழைத்து கொண்டு போய் தனது அம்மா வீட்டில் விட்டுவிட்டார்.


கணவர் எங்கே?  
அதாவது மகள் கர்ப்பம் என்றால் இவருக்கு மானம் போய்விடுமாம். பாட்டி வீட்டுக்கு சிறுமிக்கோ சிறிது நாளில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக ராயபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், சிறுமியிடம், "கணவர் எங்கே?" என்று கேட்க... அதற்கு சிறுமி திருதிருவென விழிக்க... பிறகுதான் நிலைமையை உணர்ந்து டாக்டர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

2 குழந்தைகள்  
பின்னர் போலீசார் விசாரணையில்தான் மேற்கண்ட விவரங்கள் எல்லாம் தெரியவந்தது. சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்ததுமே ஆட்டோ ஓட்டுனர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனாலும் போலீசார் வலைவீசி தேடி நேற்றுமுன்தினம் அவரை போக்சோவில் கைது செய்தனர். கைதான ஆட்டோ டிரைவர் இரு குழந்தைகளின் தகப்பனாம்!!

அனைத்து செய்திகளையும் படிக்க (முகப்பு)-HOME PAGE

 அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment