வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஓடும் ரயிலுக்கு கீழ் சிக்கிய 1 வயது குழந்தை.. பதறிய பெற்றோர்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

ஓடும் ரயிலுக்கு கீழ் சிக்கிய 1 வயது குழந்தை.. பதறிய பெற்றோர்..உத்தர பிரதேசத்தில் ரயில் செல்லும் நேரத்தில், தண்டவாளத்தில் விழுந்த குழந்தை ஒன்று ஆச்சர்யமாக உயிர் பிழைத்து இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குழந்தைக்கு 1 வயதுதான் ஆகிறது. இந்த குழந்தை ரயில் தண்டவாளத்தில் விழுந்ததும், ரயில் அவளுக்கு மேலாக சென்றதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

மண்டியிட்டு விழுந்தது 
அந்த குழந்தை முதலில் ரயில்வே பிளாட்பாரத்தில் மண்டியிட்டு விளையாடி உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிளாட்பாரம் விளிம்பிற்கு சென்று பின் அங்கிருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தண்டவாளத்திற்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் உள்ள பகுதியில் அந்த குழந்தை சிக்கியது.

சரியாக ரயில் வந்தது 
இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் அங்கு ரயில் வந்துவிட்டது. அந்த குழந்தைக்கு மேலாக அந்த ரயில் வேகமாக சென்றுள்ளது.

ஒன்றும் ஆகவில்லை
இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பயந்து, நடுங்கி ''ஓ'' என்று கத்தினார்கள். ஆனால் ரயில் சென்று முடிக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்பதால், ரயில் செல்லும் வரை எல்லோரும் காத்திருக்க வேண்டிய நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ரயில் சென்ற பின் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

ஆச்சர்யம்
இந்த விபத்தில் அந்த குழந்தை அதிசயமாக உயிர் தப்பியது. அந்த குழந்தைக்கு இந்த விபத்தில் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த ஆச்சர்யமான சம்பவத்தை அடுத்து அந்த குழந்தையை அங்கிருந்த எல்லோரும் தூக்கி வைத்து உற்சாகமாக கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment