வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா?ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரயில் பிஎச்பி என்று தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரயில் ஆகும். இதில் பயணிகள் யாரும் செல்லவில்லை. ரயில் பெட்டிகள் அனைத்திலும் இரும்பு தாதுக்கள் இருந்துள்ளது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எப்படி ஓடியது
 பிஎச்பி நிறுவனத்தின் இரும்பு தாது உற்பத்தியகத்தில் இருந்து போர்ட் ஹெட்லன்ட் நோக்கி இந்த ரயில் சென்று இருக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ரயில் நிலைய அதிகாரிகளின் சோதனைக்காக ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி இருக்கிறார். அவர் கீழே இறங்கிய சில நிமிடத்தில் அந்த ரயில் வேகமாக நகர தொடங்கி உள்ளது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

எவ்வளவு தூரம் ஓடியது
 சில நிமிடத்தில் வேகம் பிடித்த ரயில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் இப்படியே சென்றுள்ளது. பல முக்கிய ரயில் நிலையங்களை இந்த ரயில் கடந்து சென்று இருக்கிறது.


எப்படி நிறுத்தினார்கள் 
 இதையடுத்து போர்ட் ஹெட்லன்ட் நகரத்திற்குள் இந்த ரயில் வந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேகமாக தண்டவாளத்தை உடைக்கும் பணி நடந்து இருக்கிறது. போர்ட் ஹெட்லன்ட் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் முன்பு உள்ள ஆள் இல்லாத பகுதியில் தண்டவாளம் இடிக்கப்பட்டு ரயில் செயற்கையாக தடம்புரள வைக்கப்பட்டது.


மோசம் போயிட்டு
 இதன் காரணமாக பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டது. இதனால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான இரும்பு தாதுக்கள் மண்ணில் விழுந்து நாசமானது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
No comments:

Post a Comment