வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விமான விபத்தில் பலியான காதலனின் ஆசையை நிறைவேற்றிய காதலி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 17, 2018

விமான விபத்தில் பலியான காதலனின் ஆசையை நிறைவேற்றிய காதலிஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பலியாகினர். இவர்களின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


இந்த விமான விபத்தில் பலியானவர்தான் ரியோ நந்தா பிரதாமா.
இன்டனுக்கும், ரியோவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்கவிருந்த நிலையில் ரியோ விமான விபத்தில் மரணமடைந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்த நிலையில் தனது காதலன் தன்னிடம் கூறிய வார்த்தைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண ஆடை அணிந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்து இன்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது,

ரியோ எனது முதல் காதலர். நாங்கள் சுமார் 13 வருடங்களாக காதலித்து வந்தோம். அவர் என்னிடம் ஒருமுறை தான் திருமணத்துக்கு தாமதமாக வந்தால் திருமண ஆடை அணிந்து கையில் பூச்செண்டுடன் அதனைப் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பும்படி கூறியிருந்தார். அவர் விளையாட்டாகத்தான் கூறினார். என்னால் தற்போது உள்ள உணர்வை விவரிக்க முடியவில்லை. நான் உனக்காகச் சிரிக்கிறேன் ரியோ. நான் சோகமாக இருக்க மாட்டேன். நீ எப்போதும் என்னைத் தைரியமாக இருக்குமாறு கூறுவாய். நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment