எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
உலகம் முழுவதும் மக்கள் வித்தியாசமான பழக்கத்துடன் வாழ்ந்து
வருகிறார்கள். அந்த வகையில் சீனா, ஜப்பான் நாடுகளில் அரசின் ஒரு குழந்தை
திட்டத்தால் மக்கள் தங்கள் வயசான காலத்தில் கூட வேலை செய்து வாழ வேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தொகையும் குறைய ஆரம்பிக்கிறது. புவியியல் புள்ளி
விவரங்களின் படி கிராமப்புற மற்றும் மலைப் பிரதேச பகுதிகளில் மக்கள் தொகை
குறைவாகத்தான் காணப்படும். அப்படிப்பட்ட ஒரு அதிசய கிராமம் தான் இது.
அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா? இங்கு மக்களை விட பொம்மைகளைத் தான்
அதிகம் பார்க்க முடிகிறது.
சிறிய கிராமம்
நாகோரோ என்ற சிறிய கிராமம் மேற்கு ஜப்பானின் மலைகளில் அமைந்துள்ளது. இங்கே
சென்று நீங்கள் பார்த்தால் ஒரு தெருவில் கூட ஆள் நடமாட்டத்தை பார்க்க
முடியாது. அந்தளவுக்கு தெருவே வெறிச்சோடி காணப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து
வந்ததாக கூறுகின்றனர். ஆனால் தற்போது இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை
வெறும் 27 மட்டுமே.
தனிமையை போக்க
எனவே கிராம மக்களிடையே உள்ள தனிமையை போக்க , அவர்களுள் ஒருவரான சுகிமி அயனோ
என்பவர் மனித அளவிலான சில பொம்மைகளை தெருக்களில் வைக்க முடிவு செய்தார்.
இதன் படி பார்த்தால் 69 வயதான பொம்மை தயாரிப்பாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக
பொம்மைகளைச் செய்து வைத்து வருகின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால்
தற்போது மக்களை விட பொம்மைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது தான்.
முதல் பொம்மை
பொம்மை தயாரிப்பாளர் 16 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய முதல் பொம்மையை
தயாரிக்கும் போது அந்த பொம்மைகளுக்கு என் தந்தையின் ஆடைகளை அணிவித்தேன்.
மேலும் எங்கள் தோட்டத்தில் வளர்க்கின்ற உணவுகளை பறவைகளிடம் இருந்து
காப்பாற்ற ஒரு பயமுறுத்தும் காக்கை பொம்மையை தயாரித்து அங்கே
நிப்பாட்டினேன் என்கிறார்.
தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள்
இந்த பொம்மைகளைத் தயாரிக்க மரக் குச்சிகள் மற்றும் நியூஸ் பேப்பர்
போதுமானது. எலாஸ்டிக் போன்ற துணிகள் பொம்மையின் முகத்தை செய்வதற்கும்,
கூந்தலுக்கு உல்லன் நூல்களையும் பயன்படுத்துகிறேன்.
இதை பார்த்தால் அச்சு
அசல் அப்படியே மனிதர்கள் போன்றே இருக்கும். உதட்டிற்கும் மற்றும்
கன்னத்திற்கும் பிங்க் கலர் லிப்ஸ்டிக் கொண்டு மேக்கப்பும் செய்துள்ளேன்.
இது அந்த பொம்மைகளுக்கு ஒரு இயற்கையான அழகை தருகிறது.
ரெடியா?
என்னங்க இந்த கிராமத்துக்கு போக நீங்க ரெடியா? அப்போ ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் உங்களை வரவேற்க பொம்மைகளும் தயாராக இருக்கிறது.
குழந்தைகளே இல்லை
இந்த கிராமத்தில் சிறிய வயதினர் என்றால் 55 வயது ஒருத்தர் தானாம். ஏனெனில்
இந்த கிராமத்தில் குழந்தைகளே கிடையாதாம் என்கிறார் அயனோ. இப்படி குறைந்து
வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு டோக்கியோவுக்கு வெளியில் உள்ள
பகுதிகளை புதுப்பிக்கவும் அரசாங்கம் நிறைய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக
உறுதியளித்துள்ளது. மனிதர்களே இல்லாமல் பொம்மைகள் மட்டுமே வாழும் சூழல்
வந்தால் கூட அதிசயப்பதற்கில்லை.
விபத்தில் இறந்து போனதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 20 வயது
இளைஞர் சுடுகாட்டில் எரிக்கும் முன் எழுந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி
அடைந்தனர்..
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முகமது
பாரூக்கான்.
அவர் கடந்த ஜூன் 21ம் தேதி விபத்தில் சிக்கியதால் தனியார்
மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த
பாரூக்கான் உடல்நிலை மோசமடைந்து கடந்த திங்கள்கிழமை உயிரிழந்துவிட்டதாக
மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து முகமது பாரூக்கானின் உடலை
உறவினர்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர். அழுது முடித்து, சுடுகாட்டில் கொண்டு
போய் எரிக்க முடிவு செய்தனர்.
சுடுகாட்டில் வைக்கப்பட்ட பின்னர்
பாரூக்கின் உடலில் அசைவுள் இருப்பதை கண்டு குடும்பத்தினர் மற்றும்
உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சில் பாரூக்கின் உடலை எடுத்துக்கொண்டு ராம்
மோகன்ராவ் லோகியா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்தனர்.
இதுபற்றி
விசாரித்த மருத்துவர்கள், உடனடியாக பாரூக்கின் உடல்நிலைய பரிசோதித்து உயிர்
இருப்பதை உறுதி செய்தனர். அவருக்கு வென்லேட்டிரில் வைத்து தீவிர சிகிச்சை
அளித்துவருகிறார்கள்.
இது தொடர்பாக முகமது பாரூக்கின் அண்ணன் முகமது இப்ரான் கூறுகையில்,
எரிப்பதற்காக உடலை முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தோம்.
அப்போது பாரூக்கின் உதடு அசைவது தெரிந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு
விரைந்து வந்தோம்.
இப்போது மருத்துவர்கள் வெண்டிலேட்டரில் வைத்து சிசிக்சை
அளித்து வருகிறார்கள். நாங்கள் என் தம்பியை காப்பாற்ற தனியார்
மருத்துவமனையில் ரூ.7லட்சம் வரை பணம் கட்டினோம். அதன் பிறகு எங்களிடம் பணம்
இல்லை என்று சொன்னோம்.
அதனால் அவர்கள் தம்பியை திங்கள் அன்று
இறந்துவிட்தாக அறிவித்துவிட்டார்கள்" என குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் நரேந்திர அகர்வால்
கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம்.
இச்சம்பவத்தின் உண்மை குறித்து முழுமையாக ஆராயப்படும். சம்பந்தப்பட்ட
நோயாளியின் நிலை மோசமாகவே உள்ளது. ஆனால் நிச்சயம் இது மூளைச்சாவு கிடையாது.
அவருக்கு இரத்த ஓட்டம், இதய துடிப்பு எல்லாம் இருக்கிறது. வெண்டிலேட்டரில்
வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார்.
காதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு திருநங்கனையுடன்
கணவர் வாழ்கை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தெரியாமல் கணவன்
மாயமாகிவிட்டதாக நினைத்து உள்ளார் அவரின் மனைவி.
இந்நிலையில், அவர் செய்த டிக்டாக் வீடியோவில் திருங்கனையுடன் இருப்பது
தெரியவந்தது. மேலும், அவர் திருங்கையுடன் ஒன்றாக வாழ்வது
கண்டுபிடிக்கப்பட்டது தற்போது அதிர்ச்சியடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்:
விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்பவரும்
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2013ம் ஆண்டு சுரேஷ்
என்பருக்கும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மாயமானார் சுரேஷ்:
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு
திரும்பவில்லை. கணவரை பல இடங்கிளல் தேடியும் சுரேஷின் மனைவி ஜெயபிரமா
போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
3 ஆண்டாக சுரேஷை தேடிய போலீசார்:
இந்நிலையில் கடந்த 3 ஆண்டாக சுரேஷனை விழுப்புரம் தாலுகா காவல் துறையினர்
பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும்
கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டது.
திருநங்கையுடன் டிக்டாக் வீடியோ:
இந்நிலையில், மாயமான சுரேஷ் திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ பதிவிட்டு
இருப்பதை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதை பார்த்த ஜெயப்பிரதாவின் உறவினர்கள், இதுகுறித்து, ஜெயப்பிரதாவிடம் அந்த
வீடியோவை காட்டியுள்ளனர்.
உடனே இந்த தகவலை தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன்
மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் ஜெயபிரதாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து விழுப்புரம் திருநங்கை அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகளிடம்
போலீசார் விசாரித்ததில், வீடியோவில் இருப்பவர் ஓசூரில் இருக்கும் திருநங்கை
என்று கண்டறிந்தனர்.
திருநங்கையுடன் பழக்கம்:
அதன் பிறகு ஓசூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ்
திருநங்கையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்ததை வந்ததை
தெரிந்துக்கொண்டனர்.
இதனையடுத்து அங்கு இருந்து சுரேஷை மீட்டு வந்த காவல்துறையினர், மனைவி
ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர்.
தொடர்ந்து சுரேசிடம் விசாரணை செய்ததில்
தான் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்போது
சில திருநங்கைகள் உடன் ஏற்பட்ட பழக்கத்தினால் திருநங்கையை திருமணம் செய்து
கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.
சுடிதார் அணிந்த இந்த இரு இளம்பெண்களை பார்க்கவே படு ஸ்மார்ட்டாக
இருக்கிறார்கள்.. இவர்களா இந்த காரியத்தை எல்லாம் செய்தது என்று நினைத்தால்
ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பீமண்ணா கார்டன் பகுதியில் 2 இளம் பெண்கள் இன்று
சுற்றி திரிந்துள்ளனர். ஒருவர் மஞ்சள் கலர் சுடிதார், இன்னொருவர் ரெட் கலர்
சுடிதாரில் இங்குள்ள கடைப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு, பொதுமக்களிடம் நகைகளை
பறிப்பதும், பணத்தை கொள்ளையடிப்பதுமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக,
இளைஞர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது, அந்த பணத்தை பறித்து
கொண்டு இந்த இளம்பெண்கள் ஓடியதாக தெரிகிறது.
இதனால் கூச்சலிட்ட அந்த இளைஞர், பெண்களை விரட்டி சென்றுள்ளார்.
பொதுமக்களும் சேர்ந்து 2 பெண்களையும் விரட்டி பிடித்துள்ளனர். அவர்களிடம்
இருந்த பர்ஸை வாங்கி பார்த்ததில், ஏகப்பட்ட நகைகள் இருந்திருக்கின்றன.
மேலும் பர்ஸில் 25 ஆயிரம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த பணத்தையும்
வைத்திருந்தது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் மொத்தமாக சேர்ந்து இரு
பெண்களையும் தாறுமாறாக கேள்வி கேட்டு விசாரித்தனர். அந்த பெண்கள்
குழந்தையின் வெள்ளிக்கொலுசைகூட விட்டு வைக்கவில்லை.
இவர்களிடமிருந்து 40 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள், 25
ஆயிரம் ரூபாய் பணத்தை பொதுமக்கள் பறிமுதல் செய்தனர். இந்த பெண்கள் யார்,
எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை என்பதால் போலீசாருக்கு தகவல்
அளித்துள்ளதாக தெரிகிறது.
குடும்பத்தில் ஏற்பட்ட சுமையால் பிஎச்டி படித்து டாக்டர் ஒருவர் மனைவி
குழந்தைகளை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறு நள்ளிரவில் இந்த அதிர்ச்சி
சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் பிரகாஷ் சிங் பிஎச்டி முடித்து
விட்டு ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
அவரது மனைவி சோனு சிங், 22 வயதான மகள் அதிதி, 13 வயாதான மகன் ஆதித்யா உடன்
சந்தோசமாகவே குடும்பம் நகர்ந்தது. குர்கானில் இவர்கள் குடும்பம்
செட்டிலாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஞாயிறு இரவுதான் அவர்களுக்கு கடைசி
இரவாகிப் போனது.
திங்கட்கிழமை காலையில் வீட்டில் நடமாட்டம் எதுவும் இல்லாமல் போகவே
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் கூறினர். சம்பவ
வீட்டிற்கு வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது அங்கே
அதிர்ச்சி காத்திருந்தது.
சோனு, அதிதி, ஆதித்யா ஆகியோர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு ரத்த
வெள்ளத்தில் கிடந்தனர்.
பக்கத்தில் இருந்த சீலிங் பேனில் தூக்கில் தொங்கிய
நிலையில் இருந்தார் பிரகாஷ். அவர்கள் வளர்த்த நான்கு நாய்களும் பரிதாபமாக
அமர்ந்திருந்தன. சடலங்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடலை
அனுப்பிவைத்தனர்.
மூன்று பேரின் உடலிலும் பலத்த காயங்கள் இருந்தன.
தலையிலும் அடிபட்டு ரத்தம்
வழிந்தோடியிருந்தது. நள்ளிரவு 2 மணியளவில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம்
என்று போலீசார் கூறியுள்ளனர். தூக்கத்திலேயே மூன்று பேரின் உயிரும்
பிரிந்துவிட்டது.
பிரகாஷின் பாக்கெட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில், குடும்பம் நடத்த
வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருக்கிறார்.
பிஎச்டி படித்து
விட்டு நல்ல வேலையில் இருப்பவர் தற்கொலை செய்வதற்கான காரணம் என்பது பற்றி
போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது பிரகாஷ் எழுதிய கடிதம்தானா? அல்லது
வேறு யாரேனும் கொலை செய்து விட்டு தற்கொலை போல செட்அப்
செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
* கடித்தால் ‘லெக் பீஸ்’ காலி தனுஷ்கோடி கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய அஞ்சாலை மீனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். கடலில் வாழும் மீன்கள் உணவுக்காக பயன்படுகிறது. சில மீன்கள் விஷம் பொருந்தியதாகவும் உள்ளன.
ஆபத்தை ஏற்படுத்தும் மீன்களில் ஒன்றுதான் அஞ்சாலை. மீனின் தலைப்பாகமும், உடலும் பாம்பு போன்று இருக்கும். அஞ்சாலை மீன்கள் கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமல்லாது, மீனவர்களுக்கும் ஆபத்தாது.
அஞ்சாலை வகை மீன்களின் வாய் பெரிதாகவும், பற்கள் கூர்மையானதாகவும் இருப்பதால், இது கடித்தால் வாய்க்குள் சிக்கும் சதைப்பகுதி முழுவதையும் தனியாக எடுத்து விடும்.
தப்பித்தவறி மீனவர்கள் இதனிடம் சிக்கி கை, கால்களில் கடித்தால் எலும்பைத்தவிர சதைப்பகுதி முழுவதும் தனியாக இதன் வாய்க்குள் போய் விடும். ஆபத்து நிறைந்த அஞ்சாலை மீன்கள் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வலையில் தப்பித்தவறி சிக்கி விட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இதனை வலையில் இருந்து எடுத்து மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள்.
குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதியில் வாழும் அஞ்சாலை மீன்கள் சில நேரங்களில் கடல் அலையுடன் சேர்ந்து கரை ஒதுங்குவதும் உண்டு. நேற்று காலை தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் உயிருடன் ஒரு அஞ்சாலை மீன் கரை ஒதுங்கியது. 3 அடி நீளம் கொண்ட அஞ்சாலை மீன் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரித்தனர். பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் கரை ஒதுங்கிய அஞ்சாலை மீனை பார்த்து ஆர்வத்துடன் மொபைலில் படம் எடுத்து சென்றனர்.
"ம்மா.. என் சாப்பாட்டுல வண்டி இருந்துச்சு.. புழு நெளிந்துச்சும்மா"
என்று பிள்ளைகள் சொன்னதை கேட்டு பெற்றோர்கள் கொதித்து போய்விட்டனர். "உன்
குழந்தையா இருந்தா இப்படி போடுவியா..
அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு
எளக்காரமா?" என்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட கேள்வி கேட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜாரில் அரசு
உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளான
சிவசக்தி நகர், பாரதியார் புதூர், குந்தா கோத்தகிரி, முள்ளிகூர், ஆடா உட்பட
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று
வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். இங்கு
படி க்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆவேசம்
உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா
உங்களுக்கு எளக்காரமா?" என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இதில் தலையிட்டு
சமரசம் பேசி, இது சம்பந்தமான கண்டிப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதி
தந்தார்கள்.
நான்கவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை மிகவும்
சமயோசிதமாக காப்பாற்றிய தாயக்கு இணையதளத்தில் தொடர்ந்து பாராட்டுகள்
குவிந்த வண்ணம் உள்ளது.
அதன்படி கொலம்பியா மாகணத்தில் மெடலின் என்ற பகுதியில் லிப்டில்
இருந்து அம்மாவும் சிறுவனும் வந்தனர், நான்கவது மாடிக்கு வந்த சில
நொடிகளில் சிறுவன் பால்கனியில் உள்ள கம்பியின் பக்கம் சென்று விடுகிறான்.
பின்பு கம்பியை பிடித்தபடி பார்த்த சிறுவனம் தவறி விழ தாய் உடனடியாக
சுதாரித்து சிறுவனின் கால்களை பிடித்து கொள்ள குழந்தை காயம் ஏதுமின்றி
தப்பித்து விட்டான். மேலும் தாய் மெதுவாக அந்த குழந்தையை இழுத்து
காப்பிற்றி விட்டார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்தி
சிசிடிவி காட்சியினை பலரும் பகிர்ந்து தாயின் சமயோசிதமான செயலை
பாரட்டியுள்ளனர். சிலர் அம்மாவினால் மட்டும் தான் நொடியில் செயல்படமுடியும்
என்று கருத்து
தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தாய் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தான் துறுதுறுவென
அங்குமிங்கும் ஓடிய குழந்தை விளையாட்டாக பால்கனியை எட்டிப்பார்த்தது.
பின்பு யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென குழந்தை தவறி கீழே விழுச்
சென்ற நொடியில், சிறிதும் தாமதிக்காமல் தாய் பாய்ந்து குழந்தையின்
காலைப்பிடித்து காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
14 வயதான சிறுவன் ஒருவன் தற்போது ஒரு வைரஸ்வை உருவாக்கியுள்ளான். இதன்
தற்போது இந்த உருவாக்கியுள்ள வைரஸ்சை ஏவியுள்ளதால், தற்போது உலகம்
முழுக்கவும் பரவியுள்ளது.
இதனால் உலகம் முழுக்க உள்ள ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மோடம்கள்
கடும்பாதிப்பில் சிக்கியுள்ளன. இணையம் மூலம் செயல்படும் பொருட்களில் வேகமாக
பரவி தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றது.
கணினி வைரஸ் என்றால்:
கணினி வைரஸ்கள் என்பன, சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணினி
செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணினியின் செயற்பாட்டையோ முழுமையாகவோ
பகுதியாகவோ பாதிக்கக்கூடிய கணினி ப்ரோக்ராம் ஆகும்.
இவற்றிக்கு இருக்கும்
ஒரு முக்கிய பண்பு இவற்றால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு
கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணினிகளுக்கு
பரவிச்செல்ல முடியும்.
ஸ்மார்டிவி, மோடம்களுக்கு பரவும்:
ப்ரோக்ராம்கள், கோப்புகளில் தன்னையும் இணைத்துக்கொள்ளும், இப்படி வைரஸ்
இணைந்துகொண்ட ப்ரோக்ராம்கள், கோப்புக்களை இன்னுமொரு கணனிக்கு எடுத்துச்
செல்லும்போது அந்தக் கணணியிலும் உள்ள கோப்புக்களில் மீண்டும் மீண்டும்
பதிந்துகொள்ளும்.
இவை கணனிக்கு வந்தபின், அதில் இருக்கும் கோப்புகளை அழிப்பது,
செயல்முறைமையின் சில பகுதிகளை செயல்படாமல் தடுப்பது. ஹர்ட்டிஸ்க்களை
செயலிழக்க, கணணிகளை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது என்று பல தலையிடிகளை
உருவாகலாம். தற்போது, ஸ்மார்டிவி, மோடம் உள்ளிட்டவைகளுக்கும் பரவும்.
இணையம் மூலம் செயல்படும் வைரஸ்:
இந்த வைரஸ், இணையம் மூலம் செயல்படும் பொருட்களின் ஸ்டோரேஜ் மற்றும் அதன்
நெட்வோர்க் கட்டமைப்பை முற்றிலுமாக அழித்து அதனை செயல் இழக்க செய்வதாக
கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை 14 வயதாகும் சிறுவன் உருவாக்கி உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைட் லீபன் என்னும் சிறுவன்:
லைட் லீஃபன் (Light Leafon) என்று அறிப்படும் அந்த சிறுவன்,
பிரிக்கர்போட்டை மையமாக வைத்து தான் சிலெக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,
அதனை இன்னும் பலம் வாய்ந்ததாக மாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிப்பு:
2017ஆம் ஆண்டு பிரிக்கர்போட் (BrickerBot) என்ற வைரசால், கிட்டத்தட்ட 60
ஆயிரம் பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பிரிக்கர்போட்டை
போன்றே சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸ், சர்வதேச அளவில் இணையம் மூலம்
செயல்படும் பொருட்களில் வேகமாக பரவி வருகிறது.
சிலெக்ஸ் வைரஸ்:
இந்த தாக்குதல் வேகமாக பரவி வருவதால், நமது வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவி
மற்றும் மோடம்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பொது மக்களும் சிந்திக்க
துவங்கியுள்ளனர். மேலும், இந்தியாவுக்குள் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகின்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்ப்பிணியான சாந்தி தேவி(30). இவர்
பிரசவ வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர்
ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் சேவைக்கு லைன் கிடைக்கவில்லை. அதற்குள் சாந்தி, மயங்கி விழுந்து
விட்டார். மருத்துவமனைக்கு செல்ல 10 கிமீ பயணம் செய்ய வேண்டும்.
சாந்தியின் உடல்நிலை கருதி, அவரது கணவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில்
சாந்தியை ஏற்றினார். 10கிமீ வாகனத்திலேயே சென்று சிஎச்சி
எனும் மருத்துவமனையை அடைந்தனர். ஆனால், அங்கு சாந்தியை 27 கிலோ மீட்டருக்கு
அப்பால் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள்
கூறியுள்ளனர்.
இதனையடுத்து சிஎம்சி நிர்வாகம் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது.
பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சாந்தி தேவி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சாந்தி தேவியின் கணவர் கமல் கூறுகையில், ‘நாங்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற துடித்தோம். ஆனால், முடியவில்லை.
108 எண்ணுக்கும் முயற்சித்தோம். எவ்வித பலனும் இல்லை. எனவேதான் வேறு வழி இன்றி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றோம்’ என கூறினார்.
சாந்தி
தேவி வசிக்கும் கிராமத்தினை அந்த தொகுதி எம்பி மாதிரி கிராமமாக
தத்தெடுத்தார். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என அப்பகுதி மக்கள்
கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் களையாமல், ஷவரில் குளிக்கும்
வகையிலான குளியல் கவசம் ஒன்று பிரபலமாகி வருகிறது.
நம்ம ஊரில் அடிக்கும் வெளியிலுக்கு ஷவரில் குளிப்பது ஒரு அலாதி சுகம்.
ஆனால் சென்னையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தில், ஷவரில் குளிப்பதெல்லாம்
எட்டாக்கனியாக மாறி வருகிறது.
ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு குடும்பமே
குளிக்க வேண்டிய நிலை தான் இங்கு நிலவுகிறது.
ஆனால் ஷவரில் குளிப்பதற்காக ஒரு பாதுகாப்பு கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
ஒரு நிறுவனம். குளிப்பதற்கு எதற்கு பாதுகாப்பு கவசம் எனும் உங்கள் மைண்ட்
வாய்ஸ் கேட்கிறது. அது எதற்கு என்றால் முகத்தில் போட்டிருக்கும் கேக்கப்
களையாமல் பார்த்துக்கொள்கிறது இந்த கவசம்.
ஹெல்மெட் மாடல்:
நம்ம ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஹெல்மட் போல் தான்
இருக்கிறது இந்த குளியல் கவசம். அதை லைட்டாக பட்டி டிங்கரிங் செய்து இதனை
உருவாக்கியிருக்கிறார்கள். பிளாஸ்டிக்கினால் ஆன இந்த கவசத்தின் மேல்
பகுதியில் ஒரு வில்க்ரோ டேப் இருக்கிறது. முகத்தில் கவசத்தை அணிந்து, அந்த
டேப்பை இறுக்க ஒட்டிவிட்டால் முகல் நனையாமல் குளிக்கமால்.
நல்ல வரவேற்பு:
ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குளியல் கவசத்துக்கு நல்ல
வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பொருளை அறிமுகப்படுத்திய நிறுவனத்தை
சிலாகித்து வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் எதற்கு இந்த குளியல் கவசம்
எனப் புரியாமல் தலையைச் சொரிந்து வருகின்றனர்.
பெரிய சந்தேகம் பாஸ்:
மக்களே நமக்கும் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. அது, ‘குளிக்கிறதே உடம்பில்
உள்ள அழுக்கு போக வேண்டும் என்பதற்காக தான். பல நாட்கள் குளிக்காமல்
இருப்பவர்கள் கூட தினமும் முகம் கழுவுவதை பார்த்திருக்கிறோம். ஆனால்
முகத்தில் தண்ணீர் படாமல் குளிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
வடிவேலு டயலாக்:
என்ன விஞ்ஞானமோ, விநோதமோ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா. அதற்கும்
மேல் அதனை வாங்கியும் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை
என்னவென்று சொல்வது. ‘நடுராத்திரி நாங்க ஏண்டா சுடுகாட்டுக்குப் போறோம்'
என்ற வடிவேலுவின் டயலாக் மாதிரி, மேக்கப் போட்டுட்டு நாங்க ஏண்டா குளிக்கப்
போறோம் என்கிறது நம்ம மைண்ட்வாய்ஸ்.
செல்பியால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை நாம்
கேள்விபட்டியிருக்கின்றோம். செல்போன் வழியாக எமன் நுழைந்து பல உயிர்களை பாச
கயிறு போல செல்பியை வீசி (எடுக்க வைத்து) பலரின் உயிரை பிரித்து விட்டதாக
கூறியுள்ளனர்.
பலரின் வாழ்கையே ஒரு செல்பியால், அடுத்த நெடியே பரிதாமாக பறிபேனானதும்
உண்டு. நாம் எதார்த்தமாக வாழ்கையில் புகைப்படங்களை நின்று ரசிக்கும்
வகையில் எடுத்த போது, அடுத்த நெடியே கூற்றுவன் கூவி வந்து அவனையும் தூக்கி
சென்றுள்ளான்.
குடும்ப பிரச்னையால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவதாக செல்பி எடுத்து
அனுப்பினார். இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் இவர் காப்பாற்றப்பட்ட
விசிஷயம் தான் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.
செல்பியால் பல உயிர்பறிபோனது:
பலர் செல்பி எடுக்க மலையேற்றங்களில் நின்று எடுத்தனர். அப்போது,
எதிர்பாரதவிதமாக தடுக்க விழுந்து இறந்ததும் உண்டும்.
மேலும், சிலர் தண்டவாளத்தின் அருகேவும் ரயில் செல்லும் முன் செல்பி எடுக்க
முயன்ற போது, அவர்களின் உயிர் அடுத்த நொடியே பஸ்பம் ஆனதும் பார்த்து
இருப்போம். பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும், செல்பியால் குடும்ப உயிரிழந்து
சோகத்தில் முழ்கியதையும் பார்த்து இருக்கின்றோம்.
உயிரை காப்பாற்றிய செல்பி:
ஓரே ஒரு செல்பியால் பல்வேறு சம்பவங்களில் பலரின் உயிர்கள் பரிபோனதும் உண்டு
என்பது இருக்கட்டும். தற்போது குடும் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள
சென்ற ஒருவர் எடுத்த செல்பி உயிரை காப்பாற்றியும் உள்ளது. இது பலரையும்
வியக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்துள்ளது கேரளாவில் தான்.
கேரளாவை சேர்ந்த வாலிபர்:
கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த வாலிபர் மணி ( பெயர்
மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
வெறுத்து போன மணி, தன் வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார். நேராக
சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தார்.
தற்கொலைக்கு முன் செல்பி:
யாருமற்ற இடத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு, வாழ்கையே ரொம்ப வெப்பா
இருக்கு நண்பர்களே. வாழ்ந்தது போதும், அதனால் தற்கொலை பண்ணப்போறேன் என்று
பேசியபடி செல்பி எடுத்தார். அதை தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட
தண்டவாளத்தில் படுத்துவிட்டார்.
செல்பி வாட்ஸ் ஆப் குரூப்களில் சேரானது:
இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணி எங்கு தண்டவாளத்தில்
படுத்து கிடக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயன்றனர். அதற்காக செல்பியை
உடனடியாக பல வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட குரூப்களில் சேர் செய்தனர்.
அப்போது அவர் எடுத்த செல்பியில் ஒரு மைல் கல் காணப்பட்டது.
82 என்ற தண்டவாள எண்:
அப்போது அவர் எடுத்த செல்பியில் 82 என்ற எண் தெரிந்தது. அதை வைத்து ரயில்வே
அதிகாரிகளை கொண்டு விசாரித்தனர். அது சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகில்
உள்ள இடம் என தெரியவந்தது. உடனடியாக அங்கியிருந்த கேட் கீப்பருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியை சேந்த சிலரை அழைத்துக் கொண்டு சிலர்
சென்றனர்.
போலீசார் அறிவுரை:
ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக் கொண்டிருந்த மணியை போலீசார்
மீட்டனர். குடும்ப பிரச்னைக்கு தற்கொலை தீர்வாக என்று போலீசார் நீண்ட நேரம்
கவுன்சிலிங் கொடுத்து வழக்குபதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.
முறுக்கு மீசையுடன், கம்பீரமாக நிற்கிறாரே.. இவர்தான் 4 வயசு
குழந்தையை நாசம் செய்து பாத்ரூம் பக்கெட்டில் பிணமாக போட்டவர்.. பலியான
குழந்தையின் பெரியப்பா..
அதிலும் இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது
வெட்கக்கேடு!
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்த தம்பதி
ராஜேந்திரன் - செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு கார்முகிலன் என்ற 7 வயது
மகனும் ,ஷன்மதி என்ற 4 வயது மகளும் உள்ளனர்.
கார்முகிலன் 2-ம் கிளாஸ் படிக்கிறான். அவனை டியூஷனில் விடுவதற்காக
செந்தமிழ்ச்செல்வி நேற்று கிளம்பி சென்றுள்ளார். வீட்டில் ஷன்மதியை தனியாக
இருந்தாள். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து பார்த்தால் ஷன்மதியை காணவில்லை.
பாத்ரூம் பக்கெட்
பதறியடித்து கொண்டு எல்லா இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
அதனால் திருமுல்லைவாயில் போலீசில் புகார் கொடுக்க ஓடினார். திரும்பவும்
வந்து அக்கம்பக்கம் வீடுகளில் நுழைந்து தேடினார். அவருடன் பொதுமக்களும்
சேர்ந்து தேடினார்கள்.
ஒருசிலர் செந்தமிழ்செல்வி வீட்டுக்கே இன்னொரு முறை
வந்து தேடி பார்க்கலாம் என்று பார்த்தபோதுதான, ஷன்மதி, வீட்டின் பாத்ரூமில்
உள்ள பக்கெட்டில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணமாக
கிடந்தாள்.
பிறப்பு உறுப்பு
தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது குழந்தைக்கு பிறப்பு
உறுப்பில் காயம் இருந்தது. முதல் சந்தேகமே பக்கத்து வீட்டுக்காரர் மீதுதான்
விழுந்தது. அவர் செந்தமிழ்செல்வியின் சொந்தக்காரர்தானாம். பெயர் மீனாட்சி
சுந்தரம், ஓய்வுபெற்ற ராணுவ வீரர். வயசு 60!
கம்மல், தலைமுடி
முதலில் சந்தேகத்தின்பேரில்தான் அவரது வீட்டுக்குள் சென்று போலீசார்
சோதனையிட்டனர். அப்போது படுக்கை அறையில் குழந்தையின் உடைந்த கம்மல்,
தலைமுடி கிடந்தது. அதேபோல மீனாட்சி சுந்தரத்தின் உடையிலும் ரத்தக்கறை
இருந்தது.
அவரது வீட்டின் பாத்ரூமில் பினாயில் வாடையும் வந்தது. இப்போது
போலீசார் தங்கள் பாணியில் வேலையை காட்டினர். கடைசியில் குழந்தையை பாலியல்
வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டார்.
வா.. விளையாடலாம்
போலீசாரிடம் சொல்லும்போது, "வீட்டில் குழந்தை தனியாக இருந்தது. வா..
விளையாடலாம் என்று என் வீட்டிற்கு கூட்டி சென்றேன். என் படுக்கை அறையில்
வைத்து மூர்க்கத்தனமாக பலாத்காரம் செய்தேன். இதில் குழந்தை இறந்துவிட்டாள்.
பயந்து போன நான், குழந்தையின் சடலத்தை பாத்ரூமுக்கு எடுத்துச்சென்று
கோணிப்பையில் கட்டி வைத்தேன்" என்றார்.
தாத்தா.. தாத்தா
இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்
அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட கொடுமை, இந்த
மீனாட்சி சுந்தரம் பெரியப்பா முறை என்றாலும், எப்பவுமே தாத்தா, தாத்தா
என்றுதான் கூப்பிட்டு கொண்டு ஆசை ஆசையாக ஓடிவருவாளாம் குழந்தை!