வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தில் அ.ம.மு.க. நகர செயலாளர் முன் அறிவிப்பின்றி நீக்கம்..! பொறுப்பாளர்கள் அதிருப்தி.!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 03, 2022

மதுராந்தகத்தில் அ.ம.மு.க. நகர செயலாளர் முன் அறிவிப்பின்றி நீக்கம்..! பொறுப்பாளர்கள் அதிருப்தி.!!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் முன்அறிவிப்பின்றி அக்கட்சியில் இருந்து நீக்கியதால் நகர கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.


மதுராந்தகம் நகரம்  24 வார்டுகளை கொண்டது. இந்த வார்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட நகரஅணி, மாணவரணி, மகளிரணி, அம்மா பேரவை, விவசாய அணி, வர்த்தக சங்க அணி, வழக்கறிஞர் அணி, மற்றும் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கட்சியில் வகித்து வருகின்றனர், இந்நிலையில் கடந்தமாதம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோதண்டபாணி முன்னிலையில் திருப்போரூரில் நடைபெற்ற நகர ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களை அக்கட்சியிலிருந்து அனைவரும் விலகி மாற்றுக் கட்சியில் இணைவோம் என கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

ஆனால் இதை மறுத்த மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை
கே.சி.சரவணன் தனது ஆதரவாளர்களும் என்னை சார்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தொண்டர்களும் எப்பொழுதும் கழகத்தை விட்டு நீங்க மாட்டோம் என மாவட்ட செயலாளர் கோதண்டபாணியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்ட மாவட்ட செயலாளர் கோதண்டபாணி தொடர்ந்து சரவணன் மீது தலைமைக் கழகத்துக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கழகத்திற்காக பாடுபடுவேன் என தெரிவித்த  நகர செயலாளர்  தொடர்ந்து  தொடர் மழையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து மூன்று கட்டங்களாக வெள்ள நிவாரண நல உதவிகளை வழங்கியுள்ளார். 

இந்த நல உதவிகளை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் கண்ட
மாவட்ட செயலாளர் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி மதுராந்தகம் நகர செயலாளர் சரவணன் அக்கட்சியிலிருந்து நீக்கியதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் மூலம் அறிவிப்பு தெரிந்த கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அதிருப்திக்கு உள்ளாகினர், ஆகவே நகர செயலாளர் நீக்கம் குறித்து தலைமை கழகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுராந்தகம் கழகப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tag: AMMK Candedate Dismissed Without Priror Information in Chengalpattu District Madurantakam Town

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment