வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Death News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Death News. Show all posts
Showing posts with label Death News. Show all posts

Thursday, September 01, 2022

மழை நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு.!

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.


இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் ஐய்யஞ்சேரி நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ் மணிமாலா தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருக்க அவரது மனைவியும் வேலை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களது வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர்களது இரண்டு வயது மகள் ஷாலினி மாயமாகியுள்ளதை அறிந்து அவரை தீவிரமாக தேடிய நிலையில் அவர்களது வீட்டு வெளியே குடிநீர் தண்ணீர்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. அதில் ஷாலினி உடல் பிரேதமாக கண்டறியப்பட்டுள்ளது.

அதனைக் கண்டு அவரது தாய் கதறி அழுது பின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஷாலினி உரை கொண்டு சென்ற போது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருக மேலும் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 18, 2022

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்..! கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்.!

கன்னியாகுமரி மாவட்டம் கழுவந்திட்டை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின், தொழிலாளி. இவருடைய மகள் பென்சி (19). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் பாக்கி வைத்து இருந்ததாகவும், அதை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதனால், கடந்த சில நாட்களாக பென்சி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்து விடும் பென்சி நேற்று காலையில் படுக்கை அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அவருடைய தாயார் பென்சியை எழுப்ப சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது பென்சி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பென்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் 


முந்தைய கன்னியாகுமரி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, January 10, 2022

கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்..!

செஞ்சி அருகே கிணற்றில் மூழ்கி மூன்று பெண் சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஹேமாவதி, கலையரசி ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். வெங்கடேசனின் உறவினர் மகள் சுபாஷினி.

இந்த மூன்று சிறுமிகளும் திலகவதியுடன் சேர்ந்து நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அருகே இருந்த குட்டை கிணற்றில் மூன்று பேரும் குளிக்கச் சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலகவதி கிராம மக்களிடம் கூறினார்.உடேன போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் மூன்று சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு, சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

விழுப்புரம் மாவட்ட செய்திகள் 


முந்தைய விழுப்புரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 27, 2021

🔴மதுராந்தகத்தில் பெண் கவுன்சிலர் தற்கொலையால் பரபரப்பு..!

மதுராந்தகம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (35). இவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிவந்தார். இவரின் கணவர் செந்தில். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றுகிறார். தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளான். 

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 15வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ரேணுகா பெற்றிப்பெற்றார். இதன்பிறகு அவர், திமுகவில் இணைந்து பணியாற்றிவந்தார்.

இந்த நிலையில், இன்று காலை ரேணுகா தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்ததும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, குடும்ப பிரச்சனை காரணமாக ரேணுகா தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். பெண் கவுன்சிலர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்