எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், லா.எண்டத்தூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமும், 17 பேர் படுகாயமும் அடைந்தனர்.
திண்டிவனத்திலிருந்து உத்திரமேரூர், மதுராந்தகம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்ற இந்த தனியார் பேருந்தானது இன்று மாலை 03.10 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாடு இழந்ததால் விபத்தில் சிக்கியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் லேசான காயமடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும், படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் படுகாயமடைந்த விஜி என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்த மேல்மருவத்துர் காவல் உதவி ஆய்வாளர் திரு.அன்பு அவர்கள் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே சர்கார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு
திரும்பிய விஜய் ரசிகர்கள் 2 பேர் புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த
விபத்தில் இறந்தார்கள்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார். அவருடைய மகன்
தினேஷ்குமார் (வயது 18). கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார்
என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர்
அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவருடைய மகன் சித்திக் (18). கோவை
பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு
படித்து வந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இருவரும் விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று முதல் காட்சியிலேயே விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க முடிவு செய்தார்கள்.
அதன்படி நேற்று முன்தினம் தீபாவளி அன்று, புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு
தியேட்டரில் காலை 6 மணி காட்சி பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருவரும்
சென்றார்கள். படம் பார்த்துவிட்டு 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில்
வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தார்கள். புஞ்சைபுளியம்பட்டி
அருகே உள்ள நல்லூர் மாதேஸ்வரன் கோவில் பகுதியில் சென்றபோது எதிரே வந்த
லாரியும், மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் படுகாயம்
அடைந்த தினேஷ்குமாரும், சித்திக்கும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு
சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம்
அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து
வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி
வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் வைத்திருந்த தினேஷ்குமார், சித்திக்கின் உடல்களை பார்த்து
அவர்களுடைய பெற்றோர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களையும் கண்கலங்க
செய்தது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு
சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான்.
கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன்
கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக
மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு
கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி
ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார்
என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண்
நிர்வாண நிலையில் பிணமாக ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும்,
அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே????
உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார்
என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது
சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து
ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார்
கைது செய்தனர். காதலித்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக
கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு
செயலுக்கும் பல வித விளைவுக...
-
படித்த பெண்ணாக இருந்தாலும், ஏன்
டாக்டராகவே இருந்தாலும் கூட சாதிய வெறியில் சிக்காமல் தப்ப முடியாது
போலும். ஆந்திராவில் அப்படி ஒரு ச...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து
வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான்
தான் இளையவள். நான் ஒரு அப்..