வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, March 10, 2019

84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்... சிறப்பு அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு


அமெரிக்காவில், 'எச் - 4' விசா பெற்று, பணியாற்றி வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அனுமதியை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றும், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொறியியல் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு, அமெரிக்காவில் பணியாற்ற, 'எச் - 1பி' என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் இந்த விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவனை, தங்களுடன் அமெரிக்கா அழைத்துச் செல்ல, எச் - 4 என்ற விசா வழங்கப்படுகிறது.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கலாம். ஆனால், அங்கு வேலை பார்க்கவோ, சொந்த தொழில் செய்யவோ முடியாது.

பரிந்துரை
இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, 2015ல், இந்த, எச் - 4 விசா நடைமுறையில் சிலசலுகையை அறிவித்தார்.அதில், 'எச் - 4 விசா வைத்திருப்பவர்கள், இ.ஏ.டி., எனப்படும், சிறப்பு பணி அனுமதி ஆவணம் என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும்' என, அறிவித்தார். இதன் வாயிலாக, எச் - 4 விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர், வேலைவாய்ப்பு பெற்றனர்.


இந்நிலையில், இந்த, எச் - 4 விசாவில் உள்ள சிறப்பு பணி அனுமதி ஆவண திட்டத்தை ரத்து செய்ய, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.இந்த முடிவு, ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'சிறப்பு பணி அனுமதி நடைமுறையை ரத்து செய்ய வேண்டாம்' என, அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க, எச் - 4 விசா வைத்துள்ளோர் தரப்பில் முடிவுசெய்யப்பட்டது. அமெரிக்காவில் வாழும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஒன்றிணைக்கும் விதமாக, 'ஐ.டி., ப்ரோ அலையன்ஸ்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் உதவியுடன், 'எச் - 4 விசா வைத்துள்ளவர்களுக்குவழங்கப்பட்டு வந்த சிறப்பு பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டாம்' என, வலியுறுத்தி,
வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கையெழுத்து
இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவிப்போர், இந்த இணையதளத்தில் பதிவாகியுள்ள மனுவில் கையெழுத்திட வேண்டும். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், இதற்கு ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தால், இதை அதிபர் மாளிகை மறுபரிசீலனை செய்யும் என்பது அந்நாட்டு நடைமுறை. அமெரிக்காவில், எச் - 4 விசாவில் சிறப்பு அனுமதி பெற்று பணியில் இருப்பவர்களில், இந்தியர்களே அதிகம். எனவே, அதிபர் டிரம்பின் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

அன்புமணியின் மகள் திருமணத்திற்காக ரூ.25 லட்சம் கேட்டார்கள்: குருவின் சகோதரி பேட்டி


 
மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் சகோதரி மீனாட்சி மற்றும் குருவின் மகன் கனலரசன் ஆகியோர் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 

குருவின் சகோதரி மீனாட்சி கூறுகையில்,

அன்புமணியின் வளர்ச்சிக்கு எங்க அண்ணன் இடையூறாக இருந்தார் என்ற காரணத்திற்காகத்தான் குருவை படிப்படிபாக அழித்தார்கள். வெளியில் வராதீங்க. மீட்டிங்கில் பேசாதீங்கன்னு சொன்னாங்க. கடந்த பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது, அதற்கு தி.நகருக்கு வந்தவரை வரவேண்டாம், வந்தால் ஜாதி கட்சி என பெயர் கெட்டுபோகும். வரவேண்டாம் என்று சொன்னார்கள்.திரும்ப வீட்டுக்கு வந்த எங்க அண்ணன், எங்க அப்பா இறந்த அன்றுகூட அழுதது கிடையாது. 


கண் கலங்கி இதற்கு மேல இந்த கட்சியில் நான் இருக்கணுமா என்று எங்க அக்கா தங்கச்சி நாலு பேருகிட்டேயும் கேட்டார். இதற்கு மேலேயும் இந்தக் கட்சியில் நீங்க இருக்க வேண்டாம். எங்களுக்குத் தேவை நீங்க மட்டும்தான் என்றோம். கட்சியில் இருந்து எதுவும் சம்பாதிக்கவில்லை. விவசாயம் செய்கிறோம். கஞ்ச குடிச்சாலும் கௌரவமாக வாழ்வோம் என்றோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரச்சாரத்திற்கே எங்க அண்ணன் போகவில்லை. கடைசி பத்து நாள்ல திடீரென நாலு பேர் நள்ளிரவு 12 மணிக்கு எங்க அண்ணன் காலில் விழுந்து பிரச்சாரத்திற்கு வருமாறு கெஞ்சினார்கள்.

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லலாம் என்று அழைத்தபோது குரு மறுத்துவிட்டதாக காடுவெட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி கூறினாரே?
 

ஜெயிலில் இருந்து வந்தபோதே எங்க அண்ணனின் உடல்நிலை சரியில்லை. அந்த சமயத்தில் அன்புமணியின் மகள் திருமணத்திற்காக ரூபாய் 25 லட்சம் வேண்டும் என்ற கேட்டார்கள். என்னிடம் ஏது பணம் என்று எங்க அண்ணன் சொன்னார். வட்டிக்காவது வாங்கிக்கொடுக்குமாறு கூறினார்கள். வட்டிக்கு வாங்கி கொடுத்து நான் எப்படி வட்டி கட்டுவேன் என்று எங்க அண்ணன் சொன்னார். 

அதனால அவுங்களுக்கும், எங்களுக்கும் ஆறு மாதம் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது. அதற்கு பிறகு கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்தார்கள். போய்ட்டு வந்தோம். உடல்நிலை சரியில்லாமல் யாரோ ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை வைத்து இவரே போய் ஆபரேஷன் செய்துகொண்டு வந்தார். மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி ராமதாஸ் உங்களிடம் ரூபாய் 25 லட்சம் கேட்டதாக சொல்வது நம்புகிற மாதிரி இல்லையே? குருவின் தாயார் பேசுகையில், சிங்கப்பூரில் சிகிச்சை அளித்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம் என்றார்.

Saturday, March 09, 2019

தண்ணீர் தாகம்., தோழி வைத்திருந்த பாட்டில் நீரை அருந்திய பின் வந்த வாந்தி.! பதறி ஓடிய ஆசிரியர்கள்., இறுதியில் நேர்ந்த சோகம்.!!



டெல்லியில் இருக்கும் ஹரிஷ் விகார் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சஞ்சனா என்ற 11 வயதுடைய மாணவி 5ம் வகுப்பு பயின்று வருகிறார்.


நேற்று மதியத்தின் போது இவருக்கு அதிகளவு தண்ணீர் தாகம் ஏற்பட்டதன் காரணமாக தனது தோழி வைத்திருந்த தண்ணீரை அருந்தியுள்ளார். பாட்டிலில் இருந்த தண்ணீரை அருந்திய சிறிது நேரத்திலேயே பாட்டிலையே தூக்கி எரிந்து விட்டு வாந்தி எடுத்தார்.
இதனை கண்டு அதிர்ச்சிடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.


மேலும்., இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார்.  மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும்., அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளியில் மாணவி குடித்த நீருக்கு அடுத்தபடியாக அவர் வாந்தி எடுத்ததை அறிந்த காவல் துறையினர்., உடனடியாக தடவியல் நிபுணரை அழைத்து கொண்டு சோதனை மேற்கொண்டனர்.


அந்த சமயத்தில் பாட்டிலில் இருந்த நீர் வெளியே ஊற்றும் சமயத்தில் நிறம் மாறியதை கண்டுள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவு வெளிவரும் பட்சத்திலேயே மாணவியின் இறப்பு குறித்த தகவலானது தெரியவரும் என்று தெரிவித்தனர்.

Thursday, March 07, 2019

ஆஃப் பாயில் சாப்பிட்டதால் எட்டு வயது சிறுமிக்கு மூளை முழுக்க புழு... அடக்கொடுமையே!

லீமாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது எட்டு. இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருக்கிறார். 
 

ஒவ்வொரு முறை தலைவலிக்கும் போது தன் பெற்றோரிடம் சென்று சொல்லி அழுது வந்தாள். பெற்றோர்களும் நாம் வழக்கமாகத் தலைவலிக்கு கொடுக்கப்படும் மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் லீமாவுக்கு கொஞ்சம் கூட தலைவலி குறைந்த பாடில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதுதான் லீமாவின் பெற்றோருக்கு பேரிடி காத்துக் கொண்டிருந்தது.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

தொடர்ந்து ஆறு மாதங்களாக தலைவலியை குறைக்க முடியாமல் டெல்லிக்கு அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபபட்டார். மருத்துவரும் சோதித்துப் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார். மூளையில் இருக்கும் வீக்கத்துக்கான காரணத்தை அறிய தலையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இருந்திருக்கின்றன.

மூளை வீக்கம் 

லீமாவுக்கு மூளையில் வீக்கம் இருந்திருக்கிறது. இந்த வீக்கத்தைக் குறைப்பதற்காக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தார் லீமா.

திடீர் எடை

ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டதால் லீமாவுக்கு 8 வயதிலேயே உடல் எடையானது 40 கிலோவிலிருந்து 60 கிலோவாக அதிகமாகிவிட்டது. உடல் எடை அதிகமாக அதிகமாக அவளுக்கு நடப்பதில் பிரச்சினை, மூச்சு விடமுடியாமல் தவிப்பது போன்ற பிரச்சினைகளும் கூடவே இருந்தன. தொடர்ந்து முழுமையாக மருத்துவமனையை மட்டும் சார்ந்து இருக்கும் நிலை அவளுக்கு உருவானது.

என்ன நோய் அவளுக்கு?  

ஒருநாள் தலைவலியால் மயக்கமே அடைந்து விட்டாள் லீமா. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீமாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் தான் தெரிய வந்தது லீமா நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

முட்டைகள்  

மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட லீமாவுக்கு உரிய சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. அவளுடைய மூளை நரம்பு மண்டலத்தை பரிசோதித்த போது தான் மருத்துவரும் அதிர்ந்து போனார். ஏனெனில் லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கான வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அது என்னவென்று சோதித்துப் பார்த்தார்கள். அது என்னவென்று தெரியுமா? ஆம் அவ்வளவும் நாடாப் புழுக்களின் முட்டைகள்.

ரத்த அழுத்தம்  

மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே லீமாவுக்கு ரத்த அழுத்தமும் அதிகமாகவே இருந்தது. அதனால் மிக கவனமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். நாடாப் புழுக்கள் கொடுத்த அழுத்தமானது மூளையை பாதித்ததோடு மூளையின் செயல்பாட்டையும் நிறுத்திவிட்டது. அதற்காக முதலில் மூளையில் அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர் கட்டி போல இருந்த முட்டைகளைக் கொல்வதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.


அபாயங்கள்  

மூளையில் உள்ள நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்கு மருந்து கொடுப்பது இன்னும் கூடுதல் சிக்கல்களையே கொடுக்கும். ஏனென்றால் அந்த சமயங்களில் மூளைக்கு அழுத்தங்களையும் அதிகரிக்கச் செய்யும். மூளையில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் கூட, முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்.

வலிப்பு உண்டாக வாய்ப்பு

இந்த மருந்துகள் மூலம் வலிப்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவு, சுகாதாரமின்மை ஆகியவை நாடாப்புழுக்கள் வயிற்றுக்குள் போக காரணமாகின்றன. அங்கிருந்து ரத்த ஓட்டத்தோடு கலந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்கின்றன. வலிப்பு நோய் ஏற்பட நாடாப்புழுக்களும் மிக முக்கியக் காரணமாக அமைகின்றன.

எவ்வளவு புழுக்கள் இருக்கும்?  

பொதுவாக மனித உடலுக்குள் நாடாப் புழுக்கள் இருப்பது இயற்கையான விஷயம் தான். இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 12 லட்சம் மக்களுக்கு இந்த நாடாப் புழுக்களால் வலிப்பு ஏற்படும் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாடாப்புழுக்கள் ஒருவகை ஒட்டுண்ணி ஆகும். ஊட்டச்சத்துக்காக ஒருவரைச் சார்ந்திருக்கும் உயிரினமான இது உணவை கிரகிப்பதற்காக நமது உடலுக்குள்ளே இருக்கிறது. நாடாப்புழுக்களில் மட்டும் கிட்டதட்ட 5000 க்கும் அதிகமான வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது 1 மில்லிமீட்டரில் இருந்து 15 மில்லி மீட்டர் வரை நீண்டு வளரக் கூடியது.

காரணம் என்ன?  

முழுமையாக வேக வைக்கப்படாத உணவுகளைச் சாப்பிடுவது தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சரியாக வேக வைக்காத முட்டை, காய்கறிகள், முட்டைகோஸ், கீரைகள் ஆகியவற்றாலும் இப்படி லீமாவைப் போன்று புழுக்களை உற்பத்தி செய்யும். அதோபோல் மாட்டிறைச்சி, சிக்கன், ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன் போன்ற மாமிச உணவுகள் கட்டாயம் நன்கு வேகவைக்கப்பட வேண்டும். ஏனென்றால் இவற்றில் லார்வாக்கள் அதிகம் இருப்பதால் இவை நாடாப்புழுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்து விடும்.


Wednesday, February 27, 2019

ஷாலினி அஜித் என்ன போன் வச்சிருக்கிறார் தெரியுமா?: தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

அஜித்தின் மனைவி ஷாலினி பயன்படுத்தும் செல்போனை பார்த்துவிட்டு வியக்காதவர்களே இல்லை. 
 

அஜித்தின் மனைவி ஷாலினி மகன்ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் வெளியே வரும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க விரும்பினால் போஸ் கொடுக்கிறார். அப்படி அவர் அண்மையில் தனது மகனுடன் வெளியே வந்தபோது தல ரசிகர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளார்.


அந்த செல்ஃபியை பார்த்தவர்களுக்கும் வியப்பும், அதிர்ச்சியுமாக இருந்தது. காரணம் ஷாலினி நோக்கியா 3310 செல்போனை கையில் வைத்திருந்தார். 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அந்த போனின் விலை ரூ. 3, 200 ஆகும். தற்போதுள்ள இளசுகளிடம் அந்த போனை கொடுத்தால் இதை எல்லாம் யார் பயன்படுத்துவார்கள் என்று தூக்கி வீசிவிடுவார்கள். ஆனால் கோலிவுட்டின் முன்னணி நடிகரின் மனைவி அந்த போனை தான் பயன்படுத்துகிறார். அஜித்தை போன்றே ஷாலினியும் சிம்பிளானவர். அஜித்தும் சாதாரண போன் பயன்டுபடுத்துவதாக அவருன் நடித்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 19, 2019

ஒரத்தி ஊராட்சியில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்திற்கு லஞ்சம் - PM Kisan Samman



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தி ஊராட்சியில் பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் (PM Kisan Samman) விவசாயிகள் நலன் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அப்போது, ஒவ்வொரு ஏழை விவசாயிகளிடமும் பெறப்படும் மனுவிற்கு தலா ரூ.100/- கையூட்டாக பெறப்படுவது இந்த பக்கத்தில் உள்ள வீடியோ மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது.  


ஒரத்தி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் இந்த மனுவானது, கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் 4 நபர்களின் மூலம் பெறப்படுகிறது. 




இந்த மனுக்களை பெறும்போது கிராம நிர்வாக உதவியாளர் சிவக்குமார் என்பவரின் துணையோடு அருகில் அமர்ந்திருக்கும் பெண் கையூட்டு பெறுவது மேற்காணும் வீடியோ மூலம் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

அரசு திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பயன்பெறும் இந்த திட்டத்தில் கூட ரூ.100/- கையூட்டு என்றால், அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு கையூட்டு வாங்கப்பட்டுள்ளதோ என்பது அதிகாரிகளுக்குதான் தெரியும். ஒரு மனுவிற்கு ரூ.100/- என்றால் அந்த ஊராட்சியில் குறைந்தபட்சம் 1000 மனுக்கள் பெறப்பட்டால் கூட ரூ.1,00,000/- வசூலாகிவிடும். 

இப்படி யோசிக்கும் பட்சத்தில் எந்தெந்த ஊராட்சியில் எவ்வளவு வசூல் என்று கணக்கிடும்போது அரசின் வருமானம் இதிலிருந்தே புலப்பட்டுவிடும். ஆனால் இந்த வருமானம் அரசிற்கா அல்லது அரசு அதிகாரிகளுக்கா என்பது யாருக்கு தெரியும். அரசின் எந்த திட்டம் வந்தாலும் அதில் முக்கிய “பங்கு” அரசு அதிகாரிகளுடையது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கெல்லாம் எப்போதுதான் முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


Sunday, February 10, 2019

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம், முள்ளிகொளத்தூரில் தி. மு. க. சார்பில் கிராமசபை கூட்டம்




காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகொளத்தூர் கிராமசபை கூட்டத்திற்கு வருகை புரிந்த காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் 
திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், கிராம பொதுமக்களிடையே உரையாற்றி குறைகளை கேட்டறிந்தார்.



மேலும்  முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்.திரு.V.தமிழ்மணி, முள்ளிகொளத்தூர் கிராம தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் திரு. R.K.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.