வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 19, 2019

அச்சச்சோ 1000 ரூபாய் பொங்கல் பரிசு உங்களுக்குலாம் இல்லையா....? தமிழக அரசு அதிர்ச்சி தகவல்...? விவரம் உள்ளே...! 1000 rupees pongal price for Tamilnadu people

தமிழக மக்களுக்கு பொங்கள் பரிசுத் தொகையாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1000/- வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 


இந்நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற அறிவிக்கைகள் வரப்பெற்று தேதிகள் அறிவிக்கப்பட்டன.


தற்போது தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளதால் 37 மாவட்டங்களில் புதியதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 28 மாவட்டங்களில் ரூ.1000/- பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட மாட்டாது என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

இந்த அறிவிப்பால் 28 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

மதுராந்தகம் ஏரியை அணையாக மாற்றி சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய திட்டமா…? Madurantakam Dam Project News

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியானது இம்மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி என்ற பெருமைக்குரியது. மதுராந்தகம் ஏரியானது 2411 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 
இந்த ஏரி பாசனத்தினால் சுமார் 2853 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 23.3 அடியாகும். 694 கன அடி நீர் தேக்கி வைக்கப்படுகிறது. மதுராந்தகம் ஏரியின் பாசன வசதியினால் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மூன்று போகங்களிலும் செழிப்பாக உள்ளது. சுமார் 30 கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் இந்த ஏரியினால் குடிநீர் தட்டுப்பாடின்றி உள்ளனர். 
 
60 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரி தூர்வாரப்பட்டது. தற்போது 6 முதல் 7 அடி வரை மண் படிந்து ஏரியின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதாகவும், இதனால் அதிக நீர் வீணாவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் நேரடியாக பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே இந்த குற்றச்சாட்டாகம்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் சுமார் 10 லட்சம் லாரிக்கு மேல் மண் எடுத்தால் மட்டுமே ஏரியை முழுமையாக தூர் வார முடியும் எனவும் ஆனால் அந்த மண்ணை கொட்டுவதற்கு இடமில்லை எனவும் இதனாலேயே இத்தனை ஆண்டுகாலமாக தூர்வாரப்படவில்லை எனவும் புள்ளிவிவரங்களை அடுக்கினர்.
மேலும் தற்போது உள்ள 110 தானியங்கி ஷட்டர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும் தற்போது இதில் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஏரியின் பாதுகாப்பு காரணமாக மதுராந்தகம் ஏரியை அணையாக மாற்றப்பட உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படகு மூலம் ஏரியின் அனைத்து பகுதிகளிக்கும் சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் ஆழம் கணக்கிடுதல் மற்றும் பிற சோதனைகளை முடித்தபின்னர் புதிய அணை கட்டுவதற்கு சுமார் "2000 கோடி" செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது 694 கன அடியாக உள்ள நீரானது 1 டி.எம்.சியாக தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 1 டி.எம்.சி தண்ணீரில் 700 கன அடி நீர் விவசாய பாசனத்திற்கும் 300 கன அடி நீர் சென்னை குடிநீருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 
இதுமட்டுமல்லாமல் ஏரிக்கரைமீது பொழுதுபோக்கு சுற்றுலா தளம் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். 
60 ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் தற்போது அணையாக மாற்றப்பட எடுத்துள்ள முடிவு தமிழக அரசின் சாதனையா..? அல்லது விவசாயிகளுக்கு கிடைத்த ஆறுதலா..? என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும். 


Tuesday, December 17, 2019

மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு - Massive demonstration and Bandh in Madurantakam

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் காஞ்சி கிழக்கு மற்றும் காஞ்சி மேற்கு மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாநிலத்தலைவர் A.M.விக்கிரமராஜா அவர்களின் ஆலோசனைப்படி, காஞ்சி மண்டல தலைவர் M.அமல்ராஜ் அவர்களின் தலைமையில் "ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து" இன்று காலை (17.12.2019) மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. 


இந்த ஆர்பாட்டத்தை மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்க தலைவரும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளருமான G.J.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார். 

மேலும்  மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்க செயலாளர் N.அப்துல் சமத், பொருளாளர் S.ஹீராலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். AMAZON, FLIPKART போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சுயலாபத்திற்காக வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை கண்டித்து கடையடைப்பு ஆர்பாட்டத்தில் வணிகர்கள் அனைவரும் ஈடுபட்டு ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து பல்வேறு கண்டன கோஷங்களை முழங்கினர். 


மேலும் அரசாங்கமும் ஆன்லைன் வர்த்தகத்தினை படிப்படியாக முடக்க வேண்டும் என போராட்டத்தில் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிடப்பட்டது.

புஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா? Pushpavanam Kuppusamy Daughter Missing...?

"செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. டாக்டர் பல்லவியை காணவில்லை.. காரை எடுத்து கொண்டு போனார்.. எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. கண்டுபிடித்து தர வேண்டும்" என்று புஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமானதாக ஒரு புகார் போலீஸில் தரப்பட்டுள்ளது. 


ஆனால் இது போலியான செய்தி. நான் எங்கும் போகவில்லை என்று பல்லவியின் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டுள்ளது. பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.. 

மூத்த மகள் பல்லவி.. டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் டாக்டர் பல்லவியை காணவில்லை என்று புகார் ஒன்றினை தந்துள்ளார்.


தகராறு 
அந்த புகாரில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்துடன் காரை எடுத்து கொண்டு சென்றுள்ளார் பல்லவி.. ஆனால், நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.


ஸ்விட்ச் ஆப் 
பல்லவியின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. அதனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பல்லவியின் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் "Guys some random fake news is spreading that I've been kidnapped or lost or something... I'm absolutely fine.. Do NOT believe such fake stuff!" என்று அதில் இடம் பெற்றுள்ளது.

 
நம்ப வேண்டாம் 
அதாவது, "நண்பர்களே, நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் காரணமாக, பல்லவி காணாமல் போய் விட்டாரா அல்லது பத்திரமாக இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது


உண்மை என்ன? 
இதுவரை புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் சொல்வதே உண்மையாக இருக்க முடியும் என்பதால் மக்கள் அவர்களின் விளக்கத்துக்காக காத்துள்ளனர்.

Monday, December 16, 2019

மதுராந்தகத்தில் விபத்து - விவரம் உள்ளே | Madurantakam Bus Accident News 16.12.2019

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) இன்று (16.12.2019) காலை சுமார் 10.30 மணியளவில் நடந்த விபத்தில் 1 பெண் பலி மற்றும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் சென்ற அரசு பேருந்து மதுராந்தகம் பணிமனை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கியபோது அதன் பின்புறமாக வந்த லாரி மோதியதில் அரசு பேருந்தின் பின்புறம் முற்றிலும் சேதமடைந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். 
அரசு பேருந்தின் பின்புறமாக லாரி மோதியதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் ரோட்டின் இரும்பு வேலியை இடித்து கொண்டு 10 அடி தூரம் தள்ளப்பட்டது. 
அந்த தருணத்தில் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணிபுரிந்துவரும் பானுமதி (வயது 32) என்பவர் அதே பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற போது அவர் இரும்பு வேலிக்கும் பேருந்திற்கும் இடையில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சம்பவம் குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Sunday, December 15, 2019

வயக்காட்டில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் ஊழியர் கொலையா? ஆத்தூரில் பரபரப்பு! Athur Beauty Paurler Staff Murder News

நள்ளிரவு வயக்காட்டில் சடலமாக விழுந்து கிடந்தார் இளம்பெண்.. இவரை கொலை செய்தார்களா, அல்லது தற்கொலையா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். 



சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராண்டி வலசு காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் குப்புசாமி.. இவர் ஒரு லாரி டிரைவர்.. இவர்ருடைய மனைவி சசிரேகா. இவர்களுக்கு 23 வயது மகள் கவுசிகா.


3 வருஷங்களுக்கு முன்பு கவுசிகாவுக்கும், சின்ன சேலத்தை சேர்ந்த சரவணனுக்கும் கடந்த கல்யாணம் நடந்தது. இது ஒரு காதல் திருமணம்.. திருப்பூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். ஒரு வயதில் பூசிகா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். சரவணன் அலுமினிய கதவுகள் செய்யும் தொழில் செய்து வந்தார். கவுசிகாவும் அதே பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார். 

கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆனாலும் தம்பதிக்குள் நிறைய சண்டை வந்துள்ளது.. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதை தங்கள் வீட்டிலும் கவுசிகா சொல்லி வந்துள்ளார். சமீபத்திலும் அப்படி தகராறு வந்துவிடவும், கவுசிகா அம்மா வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே போன கவுசிகா திரும்பி வரவே இல்லை.. அதனால் பதறி போன பெற்றோர், கவுசிகாவை தேடி சென்றனர்.. 

அப்போது ஒரு வயக்காட்டில் கவுசிகா மயங்கி விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து அலறிய குடும்பத்தினர், வாழப்பாடியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், கவுசிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இது சம்பந்தமாக மல்லியக்கரை போலீசில் புகார் கொடுத்தனர். 

அதில் தங்கள் பெண்ணின் சாவில் மர்மம் உள்ளது.. யாரோ அடித்து கொன்றிருக்கிறார்கள்.. முகம், கால்களில் காயங்கள் உள்ளன.. நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதன் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆத்தூர் உதவி கலெக்டரின் விசாரணையும் நடந்து வருகிறது. 

பியூட்டி பார்லரில் வேலை பார்த்ததால், கவுசிகாவுக்கு ஏதாவது பிரச்சனையா? அல்லது குடும்ப தகராறா? யாராவது கொலை செய்தார்களா? அல்லது தற்கொலையா? என்றெல்லாம் விசாரணை நடந்து வருகிறது.

Friday, December 06, 2019

[தற்போது] என்கவுன்டரில் 4 பேர் சுடப்பட்டனர் | ஹைதராபாத் டாக்டர் கொலை வழக்கு | All 4 accused in Hyderabad vet rape and murder accused killed in police encounter

ஹைதராபாத் கால்நடை மருத்துவர்  கடந்து நவம்பர் 28 அன்று கற்பழிக்கப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் 4 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.





இந்நிலையில் இந்த லாரி ஒட்டுநர்கள் 4 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து தெலங்கானா பொலிஸார் விசாரித்து வந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தனர். அச்சமயத்தில் தப்பி ஓட முயன்ற 4 லாரி ஓட்டுநர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இந்தியாவே ஆவலாக பார்க்கப்படும் தருணமாக இச்செய்தி உள்ளது.
இதே தண்டனை தான் ஏற்கனவே கிடப்பில் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கும் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


 
Read in English:
All four accused in the Hyderabad veterinarian rape-murder case have been killed in a police encounter at NH-44.
As per initial reports, the four accused were taken to the crime scene for recreation of the crime when they tried to escape.


The charred body of a young woman, working as an assistant veterinarian at a state-run hospital, was found under a culvert in Shadnagar area of Hyderabad on November 28, a day after she went missing.


Four persons were arrested in connection with the incident on November 29. This is a breaking copy and will be updated with further details.