வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தென்னை ஓலையில் இருந்து 'ஸ்ட்ரா' : தேவகோட்டை இளைஞர் அசத்தல்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 09, 2018

தென்னை ஓலையில் இருந்து 'ஸ்ட்ரா' : தேவகோட்டை இளைஞர் அசத்தல்


தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பொறியாளர் மணிகண்டன் தென்னை ஓலையில் ஸ்ட்ரா தயாரித்து வருகிறார்.சுற்றுச்சூழல் ஆர்வலரான மணிகண்டன்
நம்நாட்டில் விளையும் பொருட்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்


என்ற எண்ணம் கொண்டனர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் பொருட்களைத் தயாரிப்பதற்காக பெங்களூருவில் ஐ.டி., நிறுவன பணியை துறந்தார்.கூல்டிரிங்சிற்கு மாற்றாக தாய்லாந்து தொழில்நுட்பத்தின் மூலம் இளநீரைப் பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறார். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

தற்போது கூல்டிரிங்ஸ் அருந்த பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக பொறியாளர் ஷாஜிவர்கீசுடன் இணைந்து லீவிஸ்ட்ரா என்ற பெயரில் தென்னை மற்றும் பனை ஓலை ஸ்ட்ரா தயாரித்து வருகிறார்.மணிகண்டன் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த கிளைமேட் லாஞ்ச் பேட் கிரீன் பிசினஸ்'எனும் அமைப்பு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போட்டி நடத்தி வருகிறது.



சென்னையில் செப்டம்பர் 20ல் நடத்தியது. அதில் எங்களின் லீவிஸ்ட்ரா நிறுவனம் பங்கேற்று உலக போட்டிக்கு தேர்வானது.இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் நவம்பர் 1,2ல் 130 அணிகள் பங்கேற்ற போட்டியில் நாங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்து இரண்டாயிரம் யூரோ டாலர்கள் பரிசாக வென்றோம்.சுற்றுச்சூழலை பாதிக்காத இது போன்று மற்ற பொருட்களையும் தயாரிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும், என்றார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment