வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-10-21
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 30, 2018

யாருக்காவது பாம்பு கடித்தால் உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுங்கள் வாழ்க்கையை காப்பாற்றலாம்!



வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

பாம்பு கடித்தால் முதலில் கடித்த இடத்திற்கு மேல் நன்றாக கயிரால் இறுக்கி கட்டவேண்டும். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


குறிப்பாக பாம்பு கடித்தவர்கள் நடந்தோ அல்லது ஓடவோ கூடாது ஏனென்றால் ரத்தம் ஓட்டம் அதிகரித்து விஷம் எளிதாக உடலில் கலந்துவிடும்.



சோப்பு கரைசலை அதில் போட்டு கழுவ வேண்டும் முக்கியமாக தொங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல்… அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன் !!



அடுக்கடுக்கான  மாற்றங்கள்  செய்யப்பட்டு  வருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ், ஆங்கில வழிக்கல்வி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் என அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு ஜொலித்து வருகிறது.


அதன்  தொடர்ச்சியாக, பள்ளி  கல்வித்துறைக்கு  என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல்  துவங்கப்பட  உள்ளது.  இதற்கான  பணிகளை  மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி,  ஒருங்கிணைந்த கல்விதிட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை  இயக்குனர்கள் அடங்கியகுழு அமைக்கப்பட்டு உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

தொழில்நுட்ப   பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை  பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.



படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், காட்சிபதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்..


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்த இந்த குழந்தை யார்? தற்போதைய நிலை என்னனு தெரியுமா?



1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலரது விருப்பமான படமாக இருந்து வருகிறது.


எப்போதும் சலிப்பு வராத படங்களில் ஓன்று என்றால் அதில் சூர்யவம்சம் படமும் இடம்பெறும். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து ஒரே பாடலில் மிகப்பெரிய செல்வந்தனாக மாறுவர் நடிகர் சரத்குமர். இதில் அவருக்கு மகனாக ஒரு குழ்நதை நட்சத்திரம் நடித்திருப்பார். படத்தில் ஆணாக காட்டப்படும் அந்த குழந்தை உண்மையில் அது பெண் குழந்தை. அந்த குழந்தை யார் ? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?  (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹேமலதா. இவர் தான் சூரியவம்சம் திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆண் வேடமிட்டு நடித்து மக்கள் மனதில் இன்றும் நிரைந்திருக்கிறார்.
இவங்க பட்ஷா, பூவே உனக்காக, சூரிய வம்சம் , இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி இப்படி பல படங்களில் நடித்துள்ளார்.


அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடிச்சிருக்காங்க சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல நாடகங்களில் நடித்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




பள்ளியில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு மாணவன் செய்த செயலை பாருங்க



பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்.


ஆனால் இங்கு ஒரு மாணவன் மாதவிடாய் ஏற்பட்ட சக மாணவிக்காக செய்ததை பற்றி இதில் பார்க்கலாம். பள்ளிகூடத்தில் படிக்கும் ஒரு பெண்மணி பள்ளிபேருந்தில் வீட்டிற்கு செல்லும் போதே அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த பள்ளியில் படிக்கும் அந்த பெண்ணை விட வயது மூத்த மாணவன் ஒருவன் உடனே அந்த பெண்ணின் காதின் ஓரத்தில் சென்று உன்னுடைய உடையில் ரத்த கறை ஏற்பட்டு இருக்கிறது நான் என்னுடைய சுவட்டரை தருகிறேன் அதை உன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு பத்திரமாக வீட்டிற்கு செல் என கூறியுள்ளான்.
(தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


ஆரம்பித்தில் அந்த மாணவி கொஞ்சம் சங்கடத்தோட இல்லை வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறாள். அதற்கு அந்த பையன் எனக்கு தங்கை இருக்கிறார்கள், எனக்கு புரிகிறது இது எல்லாம் பரவாயில்லை நீ சுவட்டரை எடுத்துக்கொண்டு போ என அந்த பொண்ணின் வீடு வரும் வரை பாதுகாப்பாக வந்துள்ளான்.



மாணவனின் இந்த செயலுக்காக அந்த பொண்ணோட அம்மா அந்த மாணவனை பாராட்டி பேஸ்புக்கில் உள்ள ஒரு பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள். அந்த அம்மாவிடும் கூறுவது போல் பதிவிட்டது இருந்தார்கள் அது என்னவென்றால் " நீங்கள் அந்த மாணவனின் அம்மா என்றால் உங்களுக்கு என்னுடைய நன்றி, நீங்கள் உங்க பையனை நல்லபடியாக வளர்த்திருக்கிறீர்கள்" அப்படி என்று பதிவிட்டு இருந்து இருக்கிறார்கள்.



அதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் பசங்க மிகவும் மோசமானவர்கள் தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்று பொதுவான கருத்து ஒன்று இருக்கிறது. ஆனால் நல்ல விஷயங்களையும் அவர்கள் செய்கிறார்கள் என்பதை உணர்த்தவே இதை நான் பதிவிடுகிறேன் என்று கூறி இருக்கிறார்கள் அந்த பொண்ணோட அம்மா.



இவர்கள் கூறுவது சரிதான். ஒரு பெண்ணோட வலியை உணர்ந்தவன் உண்மையான ஆண்மகன். அந்த பையனோட அந்த செயலுக்காக பலரும் அந்த பையனை பாரட்டிகொண்டு வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


இதற்காகத்தான் நீக்கப்பட்டாரா தோனி?



டி20 போட்டிகளில் இருந்து தோனி நீக்கப்பட்டது ஏன் என்பதற்கான புதிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.


இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இப்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீப காலமாக அவரது ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளிலும் அவர் தடுமாறி வருகிறார். டி20 போட்டியிலும் ரன் குவிக்க திணறி வருகிறார்.
 (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார்கள். இதில் அணியில் இடம் பிடிக்க இருவருக்கும் கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது.



இதுபற்றி பேசிய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ’அடுத்து நடக்க இருக்கிற ஆறு டி20 போட்டிகளில் தோனி விளையாட இல்லை. நாங்கள் 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை தேர்வு செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். டி 20-ல் தோனியின் வாழ்வு முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல’ என்று கூறியிருந்தார்.



தோனி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தோனி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஓய்வு பெற்றுவிட்டால், அதற்கு அடுத்த வருடம் அதாவது 2020 -ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பை டி20 தொடரில் தோனி பங்கேற்க மாட்டார். அவரது இடத்துக்கு மாற்று வீரரை தேட வேண்டியது அவசியம். அதனால் இப்போதே அதற்கான முயற்சியில் இந்திய கிரிக்கெட் அணி இறங்கியுள்ளது. தோனி நீக்கம் குறித்த முடிவு அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.



இதுபற்றி கேப்டன் விராத் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரிடம் ஆலோசிக்கப்பட்டது. அவர்களின் சம்மதத்துக்குப் பின்பே, தோனியின் நீக்கம் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சர்வதேச டி20 போட்டிகளில் தோனி இனி திரும்புவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
37 வயதான தோனி, 93 டி20 ஆட்டங்களில் பங்கேற்று 1,487 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 127.09.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts