வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-01-27
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, February 06, 2019

கூட்டிபெருக்கி சுத்தம் செய்யும் ஸ்வீப்பர் வேலைக்கு விண்ணப்பித்த BE, MBA, MCom, MTech பட்டதாரிகள்..?

தலைப்பைப் படித்த உடனேயே இது அரசு வேலை என புரிந்து கொண்டீர்களா..! சபாஷ் சரி தான். 


 தமிழக அரசு 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு கல்வித் தகுதி தேவை இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வழக்கம் போல அடித்து நொறுக்கிவிட்டார்கள் நம் தமிழக இளைஞர்கள். 14 பணி இடங்களுக்கு 4,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றன. இந்த தேர்வுக்கே சராசரியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்களாம். 70 பேரின் விண்ணப்பங்கள் ரத்து செய்யபப்ட்டு 3,930 பேருக்கு தேர்வு அனுமதிக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்களாம்.


அரசாங்க காசு  

இந்த 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு 15,700 முதல் 50,000 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயித்திருக்கிறார்களாம். இதில் இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்களாம். மொத்த 14 பணி இடங்களில் 4 General Category, 4 OBC, 3 MBC, 2 SC, 1 STs.


யோகி ஆதியநாத் மாநிலத்தில் 

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் உத்திரப் ப்ரிஅதேசத்தின் 62 பியூன் வேலைக்கு 93,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இந்த 93,000 பேரில் தங்கள் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முனைவர் பட்டங்கள் (டாக்டர் பட்டம்) பெற்றவர்களும் உண்டு.


மும்பையில்  

மகாராஷ்டிரத்தில் மந்திரலயாவில் 13 உணவு பரிமாறுபவர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பிட்த்திருந்தனர். இதிலும் கணிசமாக பட்டப் படிப்பு படித்தவர்கள் எல்லாம் சரமாறியாக விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் கேட்கப்பட்டிருந்த கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி தான்.


NSSO  

சமீபத்தில் மோடி அரசின் அராஜக நடவடிக்கைகளில் ஒன்றாக தேர்சிய மாதிரி சர்வே அமைப்பின் தரவுகள் மத்திய அரசால் வெளியிடப் படாமல் இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018லேயே வெளியாகி இருக்க வேண்டிய வேலைவாய்ப்பு விவரங்கள் வரும் மார்ச் 2019-ல் தான் வெளியிட இருக்கிறார்களாம். அதில் சொல்லப்பட்டது போலவே இந்தியவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புகள் சரிந்து வருவதையே இது காட்டுகிறது.

டிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! பெண்களே உஷார்

சோஷியல் மீடியாவில் நீங்கள் ஷேர் செய்யக்கூடிய புகைப்படம் அல்லது வீடியோ உங்களுக்கே தொல்லையாக மாறும் என்பதற்கு, பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும். 
 

சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒரு பகிர்வு அடிக்கடி வைரல் ஆகுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சோஷியல் மீடியா ஆப் வைரலாகி வருகிறது என்றால் அது டிக்டாக்தான் (Tik Tok). 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

சிறிய அளவிலான வீடியோக்களை ஷேர் செய்ய அறிமுகமான தளம்தான் இது. ஆனால் இன்று இளைஞர்களை, அதிலும் இளம் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.


தமிழகம் டாப் 

டிக்டாக்கில் பாடலுக்கு நடனமாடி அதை பதிவேற்றம் செய்வதில் இளம் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாநிலங்களில் தமிழகம் மற்றும் கர்நாடகா பெண்கள் டிக்டாக் வீடியோ அப்லோடிங்கில், கணிசமாக உள்ளனர். இந்த வீடியோக்களுக்கு வரும் லைக்ஸ், பாராட்டு கமெண்ட்டுகள் இவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக டிக்டாக்கில் அடிமையாக வைத்திருக்க உதவுகிறது.


ஆபாசம்  

ஆனால் இதில் மற்றொரு விபரீதமும் உள்ளது. ஆபாச கருத்துக்களை கமெண்ட்டுகளாக போடும் நெட்டிசன்கள் ஒருபக்கம் என்றால், இந்த குடும்ப பெண்களின் வீடியோ, மற்றும் அவர்கள் உருவ படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதை ஆபாசமாக சித்தரித்து அதற்குரிய வெப்சைட்டுகளில் பதிவேற்றி ரசிப்போர் மற்றொரு பக்கம். இதனால் பல குடும்ப பெண்களின் வாழ்க்கை கெட்டழிகிறது.


பெங்களூரில் பிரபலம்  

இப்படியான ஒரு சம்பவம், பெங்களூர் நகரையடுத்து ஆனேக்கல் பகுதியிலுள்ள ஒரு 20 வயது கல்லூரி பெண்ணுக்கும் நடந்துள்ளது. கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்தான் அந்த பெண். இவருக்கு சுமார் 1.3 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு இவர் டிக்டாக் ஆப்பில் பிரபலம் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். இதுவரை அவர் பெற்ற லைக்ஸ் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டுமாம்.


ஆபாச சித்தரிப்பு  

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் முதல், கவிதாவை ஆபாச பட நடிகை போல சித்தரித்து, மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் சுற்ற ஆரம்பித்துள்ளன. இது கவிதா கவனத்திற்கு வந்தபோது இடிந்தே போய்விட்டார். என்ன செய்வது என்று யோசித்து, இந்த தகவலையும் அவரே ஒரு வீடியோவில் கூறி, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து அதையும் டிக்டாக்கில் பதிவேற்றினார். ஆனால், பிரச்சினை அதிகரித்ததே தவிர, ஓய்ந்தபாடில்லை.


விடமாட்டேன்  

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான, கவிதா, இதுகுறித்து, பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி கவிதா நிருபர்களிடம் கூறுகையில், எனது நடிப்பு திறமையை காட்டவே டிக்டாக்கை பயன்படுத்தினேன். இது ஃபன்னுக்காகத்தான். ஆனால், ஒரு சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக நான் டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேங்க் அக்கவுண்டை செக் பண்ணிட்டீங்களா..? 2,000 வந்திருக்கலாம்... அதிரடியாக அசரடிக்கும் மோடி..!




தேர்தல் நெருங்கி வருவதால் இம்மாதம் 2 ஆயிரம் ரூபாயையும், தேர்தலுக்கு முன் 2 ஆயிரம் ரூபாயையும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.



பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாயும், 2018-2019 நிதி ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை 2,000 ரூபாய் என 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாக அறிவித்திருந்தது. 



தற்போது தேர்தலுக்கு முன்பு இந்த நிதி உதவியை விவசாயிகளுக்கு அளித்தால் வாக்குகளை எளிதாகக் கவர முடியும் என கருதிய பாஜக தலைமையிலான மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் முதல் தவணையை இம்மாத இறுதிக்குள் வழங்கி விட்டால் தேர்தலுக்கு முன்பு இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் அளிக்க முடியும் என கணக்குபோட்டுள்ளது.



இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் அதிகப்படியான விவசாயிகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ளதால் யோகி ஆதித்யநாத் இந்த நிதி உதவியை வேகமாக அளிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளார். இது தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள உத்திரப்பிரதேச மாநில எதிர் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய அரசிடமிருந்து நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. 


Monday, February 04, 2019

சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே கூறுபோட்டு தின்னும் மர்ம நபர்..

நெல்லை மாவட்டத்தில் சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே வெட்டி கூறுபோட்டு தின்னும் மர்ம நபரை அப்பகுதியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.





நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகிலுள்ளது டி.ராமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கனகசபாபதியின் மகன் முருகேஷன் (43).
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். முருகேஷனுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கம் உண்டாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மனைவி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர் தின்று செல்வதாக தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.



தகனம்

இந்த நிலையில் கிராமத்து மக்களிடையே பெரும் பீதியும்,பரபரப்பும் உருவானது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். அவரை உறவினர்கள் சுடுகாட்டில் தகனம் செய்து விட்டு திரும்பி உள்ளனர்.



மூதாட்டியின் உடல்  

இதனை தொடர்ந்து இறந்து போனவர்களின் உடலை சாப்பிடும் மர்ம நபர் யார் என தெரிய வேண்டும் என நினைத்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சம்பவத்தன்று இரவு சுடுகாட்டுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் காத்திருந்த வேளையில் பிணம் எரிந்து கொண்டிருந்த போது அங்கு கையில் அரிவாளோடு வந்த முருகேசன் எரிந்து கொண்டிருந்த மூதாட்டியின் சடலத்தை கம்பால் விலக்கி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.


விசாரணை  

இதனைக்கண்ட மறைந்திருந்தவர்கள் குரல் எழுப்பி கற்களால் எரிந்துள்ளனர். பின்னர் அவர் ஓடியதாகவும் கூறுகின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் இது குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீஸார் மனித மாமிசம் சாப்பிட்ட முருகேசனை பிடித்து விசாரணை செய்தனர்.


மனநல மருத்துவமனை

அவரிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியாத நிலையில் ஊர்மக்களின் நிதி உதவியோடு தனியார் வாடகை வாகனத்தில் வாசுதேவநல்லூரில் இருந்து சென்னை கீழ்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு போலீஸார் பாதுகாப்போடு அனுப்பி வைத்துள்ளனர்.

தோழியிடம் வம்பிழுத்தவனை அடிச்சு மூஞ்சியை உடைத்த காஜல் அகர்வால்

தோழியிடம் சில்மிஷம் செய்தவனை முகம் வீங்கும் அளவிற்கு அடித்துள்ளார் காஜல் அகர்வால். 


ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமானது என்று அவர் தெரிவித்துள்ளார். காஜலை பார்த்தால் சாதுவாக தெரிகிறார் அல்லவா, ஆனால் நிஜத்தில் கோபம் வந்தால் காளியாக மாறிவிடுவாராம். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,


தமிழ்  


நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வட நாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் அடியாகிவிடுமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.


காதல் 

தற்போதைக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை. எனக்கு பிடித்தவரை பார்த்தால் காதலித்து மணப்பேன். இல்லை என்றால் பெற்றோர் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்வேன். இதுவரை நல்ல நல்ல படங்களில் நடித்திருக்கிறேன்.


தாக்குதல்  

நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன்.


படுக்கை  

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்கிறார் காஜல் அகர்வால்.


இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லையா? களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...!

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





பையோமெட்ரிக் வருகை, ஸ்மார்ட் வகுப்புகள் என நீளும் இந்த பட்டியலில் புதிதாக ரோபோட் டீச்சர்களும் இணைந்துள்ளது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தமிழகத்தில் பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


அதிரடி அறிவிப்பு  

இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்விக் கூடங்களில் கணினி மயமாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையினையும் அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


ஜேக்டோ ஜியோ  

ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பயோமெட்ரிக் பதிவு  

பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ரோபோ டீச்சர்  

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Sunday, February 03, 2019

‘பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து 11 வயது சிறுவன்!

பிரபலமான பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு செல்போன் கேம் டிரெண்டிங்கில் இருக்கும். அந்தவகையில் பிரதமரே தனது பேச்சில் குறிப்பிடும் அளவிற்கு பப்ஜி கேம் தற்போது நமது நாட்டில் டிரெண்டிங்காக இருக்கிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வயது வித்தியாசம் இல்லாமல் இதை விளையாடி வருகின்றனர். பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி எப்போதும் இதனை விளையாடியபடியே இருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டானது பொழுதுபோக்காக இல்லாமல், பொழுதை பாழடிப்பதாக அமைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த விளையாட்டிற்காக அதிக நேரம் செல்போனிலேயே செலவழிக்கின்றனர்.


பள்ளிச் சிறுவன்:  

இந்நிலையில், இந்த விளையாட்டைத் தடை செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுவன் அஹத் நிசாம், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளான். தனது தாயின் உதவியுடன் அஹத் இந்த வழக்கைத் தொடுத்துள்ளான்.


தடை கோரி வழக்கு:  

அந்த மனுவில், ‘பப்ஜி விளையாட்டை, தான் சில நாள்கள் விளையாடியதாகவும், அதிலிருந்து தனக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்ததாகவும், மேலும் அதில் கொலை போன்ற வன்முறைகள் அதிகமாக இருப்பதாலும் இந்த கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.


ஆணையம் தேவை:  

மேலும் ஆன்லைன் நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் தனது மனுவில் அஹத் தெரிவித்துள்ளான்.


குஜராத்:

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரிலும் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தேசிய குழந்தைகள் ஆணையத்தில் மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டனில் அசத்தும் விஜய் மகள்

விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார். 


தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக திட்டமிட்டுள்ளாராம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஷங்கர் இயக்கத்தில் ஜேசன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஜேசனின் தங்கை திவ்யா சாஷாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபாடு அதிகம். அவர் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.


சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார் அவர். பள்ளியின் பேட்மிண்டன் அணியில் திவ்யாவும் உள்ளார். பேட்மிண்டன் அணியின் புகைப்படங்களை அந்த பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் திவ்யா உள்ளார். அந்த குழு அண்மையில் நடந்த போட்டி ஒன்றில் 3வது இடம் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்.. ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு மாலி. இவர் படாஸ் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பாபுவின் ஐந்து மாத குழந்தை, எப்போதும் வாயில் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தது. இதனை நிறுத்துவதற்காக, பாபுவின் மனைவி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது சிலர், உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் வைத்தால் ஜொள்ளுவிடுவதை நிறுத்திவிடும் என ஆலோசனை கூறியுள்ளனர். 
இதையடுத்து, ஒரு உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் பாபுவின் மனைவி வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மீன் குழுந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீன் வெளியே எடுக்கப்பட்டது. அக்கம்பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தாய் செயல்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Saturday, February 02, 2019

ஆதார் கார்டில் தெளிவாக இல்லாத புகைப்படத்தை மாற்றுவதற்கு புதிய ஏற்பாடு: உள்ளே லிங்க்.!

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் பயனர்களின் முகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை. 


அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டைகளைப் பயணிக்கும் சூழ்நிலையே இங்கு உருவாகி இருந்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


புகைப்படத்தை மாற்ற அனுமதி  

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கமும் ஒரு தீர்வை வழங்க முடிவு செய்து, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற பயனர்களுக்கு அனுமதியும் வழங்கியிருந்தது. அதன்படி உங்கள் ஆதார் அட்டையில் உள்ள ஆதார் புகைப்படத்தை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.


ஆன்லைன் சேவை  

உங்களின் ஆதார் புகைப்படத்தை மாற்ற எவ்வித ஆன்லைன் சேவைக்கும் இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதே உண்மை. ஆன்லைன் இல் புகைப்படத்தை மாற்றுவது பாதுகாப்பானதல்ல என்ற காரணத்தினால் அரசாங்கம் ஆன்லைன் சேவையை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஃப்லைன் முறை  

உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை பயனர்கள் இரண்டு முறையில் மாற்றிக்கொள்ளலாம், இவ்விரண்டு முறைகளுமே ஆஃப்லைன் முறைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் பாதுகாப்பு கருதி அரசாங்கம் ஆஃப்லைன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.


முழு விபரங்களுடன் கடிதம்  

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றப் பதிவு மையத்தை நீங்கள் நாடவேண்டும் அல்லது உங்கள் ஆதார் அட்டைப் புதுப்பிக்கப்பட்ட புகைப்படம் பெற UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுத வேண்டும்.


செயல்முறை 1: 

ஆதார் அப்டேட் படிவத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கரெக்ஷன் படிவத்தைச் சரியாக நிரப்பி UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுதி அனுப்பினால் இரண்டு வாரங்களுக்குள் உங்களின் புதிய ஆதார் கார்டு வீடு வந்து சேரும்.


செயல்முறை 2: 

அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் சென்று, உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற நேரடியாகப் புகார் அளிக்கலாம். இரண்டு வாரங்களுக்குள் புகைப்படம் மாற்றப்பட்ட புது ஆதார் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்து புதிய கார்டு வழங்குவதற்கு ரூ.15 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதார்  

ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்த கவலையில் இருந்தவர்களுக்கு தீர்வளிக்கும் விதமாக சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பில் வங்கி கணக்குகள், மொபைல் நம்பர்கள் மற்றும் பள்ளி மாணவர் சேர்க்கை போன்றவற்றிற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் வாலெட்  

இதனால் வங்கி கணக்கு திறக்கும் போது, புதிய மொபைல் இணைப்பு பெறும் போது, அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சேவைகளை தொடர்வதற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய கட்டாயம் நீங்கியிருக்கிறது. ஆதார் தீர்ப்பை தொடர்ந்து பலரும் தங்களது ஆதார் நம்பரை அவரவர் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலெட் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து டீலின்க் செய்ய ஆர்வம் செலுத்துகின்றனர்.


பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள்:  

வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதார் நம்பரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள் அறியப்படாத நிலையில், பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். எனினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதாரை டீலின்க் செய்ய நினைப்போர் அருகாமையில் உள்ள அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.


வழிமுறை 1:

பேடிஎம் வாடிக்கையாளர் சேவை மைய எண் @ 01204456456 அழைக்க வேண்டும். 
வழிமுறை 2:  

ஆதாரை அன்-லின்க் செய்வதற்கான கோரிக்கையை விடுக்க வேண்டும்.


வழிமுறை 3:

இனி உங்களது ஆதார் கார்டின் தெளிவான புகைப்படத்தை இணைக்கக் கோரும் மின்னஞ்சல் உங்களுக்கு வரும். இந்த மின்னஞ்சலில், "Dear Customer, in order to process your request, we need you to send us a clear picture of your updated Aadhaar card for validation purpose. Request you to share the same with us." என குறிப்பிடப்பட்டு இருக்கும்.

வழிமுறை 4:  

மின்னஞ்சலுக்கு பதில் எழுதி, உங்களின் ஆதார் கார்டு தெளிவான புகைப்படத்தை இணைக்க வேண்டும்.


வழிமுறை 5:  

பேடிஎம்மில் இருந்து உங்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் வரும், இதில் உங்களது ஆதார் விவரங்கள் 72 மணி நேரத்திற்குள் டீலின்க் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கும். 

வழிமுறை 6:  

தெரிவிக்கப்பட்ட கால அளவு நிறைவுற்றதும், உங்களது ஆதார் டீலின்க் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


ஆதார் கார்டு விவரங்கள் டீலின்க் 

இது கவலை அளிக்கிறது! மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை கொண்டு எளிமையாக செய்துவிட முடியும் என்றாலும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பொது மக்கள் தங்களது ஆதார் விவரங்களை அவரவர் வங்கி கணக்குகள், டிஜிட்டல் வாலெட்கள் மற்றும் இதர சேவைகளில் இருந்து டீலின்க் செய்ய விரும்புகின்றனர். மேலும் டீலின்க் செய்ய, பேடிஎம் பயனர்களின் ஆதார் கார்டு புகைப்படத்தை அனுப்பக் கோருகிறது. இதனால் பயனருக்கு சங்கடமான சூழல் ஏற்படுகிறது. எனினும் பேடிஎம் கணக்கில் இருந்து ஆதார் கார்டு விவரங்களை டீலின்க் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.