வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-08-11
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, August 17, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் | Anaikunnam stone Quarry issue | Run World Media

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் ஊராட்சியில் சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கிராம பொது மக்களால் கிராம சபை கூட்டமானது புறக்கணிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.


மேற்கண்ட புறக்கணிப்பு போராட்டத்திற்கு காரணம் என்னவெனில் "ஆனைக்குன்னம் ஊராட்சியில் கல்குவாரி வரப்போகிறது" என்பதை அறிந்து கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016-2017 மற்றும் 2017-2018, 2018-2019 ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொது மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்படி இயற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இதுநாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத ஊரக வளர்ச்சி துறை, கனிம வளத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டு  போராட்டம் நடைபெற்றது.

மேற்படி ஆனைக்குன்னம் கிராமத்தில் தற்போது கல்குவாரி உள்ள பகுதிக்கு அருகே தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்குவாரியின் வழியேதான் எலப்பாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் செல்வதில் மிகவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கல்குவாரியின் அதிக சப்தம் மற்றும் சிதறல்களின் காரணமாக ஆனைக்குன்னம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் "மான், மயில்" போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் அழிந்து கொண்டே வருகிறது.

எனவே, இந்த "கல்குவாரியினை சீல் வைத்து பொதுமக்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துமா இந்த அரசு...?" என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | கனமழை காரணமாக விடுமுறை | Run World Media

கனமழை காரணமாக  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் மழை பொழிந்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் திரு.மோகனசுந்தரம் அறிவித்தார்.

Friday, August 16, 2019

ATM விதிகள் மாற்றம்..! வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி..!

இன்று இந்தியாவில் வங்கிக் கணக்கைப் வைத்திருப்பவர்கள், வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசின் ஜன் தன் திட்டமும் ஒரு காரணம் எனச் சொல்லலாம். 
 அதற்காக இந்தியாவில், அனைத்து தரப்பு மக்களிடமும் நிதிசார் அறிவு அதிகரித்துவிட்டது எனச் சொல்ல முடியாது. இன்று வரை, இந்தியாவின் கிராம புறங்களில், அதிகம் படிக்காத ஏழை, எளிய மக்கள் இன்னும் ATM இயந்திரங்களைத் தான் அதிகம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


ATM சிக்கல்
 ATM இயந்திரத்தைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது தான் இன்று வரை பெரும்பாலான இந்திய மக்களின் இ வங்கிப் பயன்பாடு. சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து, இந்த ATM இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு உச்ச வரம்புகள் விதிக்கப்பட்டன. பொதுவாக எஸ்பிஐ வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், ஒரு ஏடிஎம் (டெபிட்) கார்டைப் பயன்படுத்தி ஐந்து முறை மட்டுமே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். அது போக 3 முறை மட்டுமே மற்ற வங்கி ATM இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டது. ஆக மாதம் ஒரு ஏடிஎம் கார்ட் மூலம் 8 பணப் பரிமாற்றங்கள் மட்டுமே பயன்படுத்தலாம்.


 கட்டணம் 
 கட்டணம் அதற்கு மேல் அதிகமாக பயன்படுத்துபவர்களின் வங்கிக் கணக்கில் இருந்தே வங்கிகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கின. மிகக் குறிப்பாக ATM இயந்திரங்களின் கோளாறு மற்றும் பணம் இல்லாதது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பரிமாற்றத்தை முழுமையாக செய்ய முடியவில்லை என்றால் கூட, அந்தப் பரிமாற்றத்தையும் ஒரு பரிமாற்றமாக கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் தொடர்ந்து ஆர்பிஐ கவனத்துக்கு வந்த பின் தான் இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்களாம்.


ATM கோளாறுகள் 
 ATM கோளாறுகள் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியான RBI, கடந்த புதன்கிழமை அன்று (ஆகஸ்ட் 14, 2019) வங்கி ATM இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாத பரிமாற்றங்கள் மற்றும் ATM இயந்திரங்களில் டெக்னிக்கல் கோளாறுகளால் தடைப்பட்ட பரிமாற்றங்களை, இலவச பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனச் சொல்லி இருக்கிறது. அதோடு ATM இயந்திரங்களில் பணத்தை வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்வது மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் பாக்கி தொகைகளைப் பார்க்கப் பயன்படுத்தும் பரிமாற்றங்களையும் இலவச பரிமாற்றங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறதாம்.
செல்லாது செல்லாது
  அதாவது ATM வழியாக வங்கிக் கணக்கில் இருக்கும் பாக்கி தொகையைப் பார்ப்பது (Balance Enquiry) மற்றும் வங்கி ATM இயந்திரங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் (Bank fund transfer) செய்வது எல்லாமே இனி ஒரு பணப் பரிமாற்றங்களாக கருதப்படாது. சுருக்கமாக ஒவ்வொரு மாதமும் எட்டு ATM பரிமாற்றங்கள் மட்டுமே வங்கிகள் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த எட்டு பரிமாற்றங்களில் மேலே சொன்ன பரிமாற்றங்கள் கணக்கில் வராது.


இதெல்லாம் கணக்கில் வரக் கூடாது 
 இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 1. பேலன்ஸ் பார்ப்பது, காசோலை ஆர்டர் செய்வது, வரி செலுத்துவது 2. வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வது 3. வங்கி ATM இயந்திரக் கோளாறு காரணமாக பணம் எடுக்க முடியாமல் போவது 4. வங்கி ATM இயந்திரத்தில் போதிய பணம் இல்லாததால் பணம் எடுக்க முடியாமல் போவது... போன்ற ATM பரிவர்த்தனைகள் எல்லாம், வங்கி நமக்கு வழங்கி இருக்கும் மாதம் எட்டு இலவச ATM பரிமாற்றங்கள் கணக்கில் வராது. இதை ஒரு ATM பரிவர்த்தனையாக கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதல் கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது.

கணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி

கள்ளக்காதலால் கணவனை சுத்தியலால் அடித்த கொடூர மனைவி


கணவன் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில்.. அவரது கால்களை கட்டி போட்டு... கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி... மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவி... சுத்தியலால் தலையில் அடித்து... கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் மனைவி. இது எல்லாத்துக்கும் காரணம் நாசமா போன கள்ளக்காதலே! அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி பாவிஷ்யா பர்ஹகோஹைன் - குவின்சியா. 5 வருடத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. 4 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். குவின்சியாவுக்கு வயசு 28!



பாவிஷ்யா, பவாயில் உள்ள கால் சென்டரில் வேலை செய்து வந்தபோது, மும்பையை அடுத்த வசாய் அருகே நைகாவில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். அந்த சமயத்தில் சத்விர் நாயர் என்ற 24 இளைஞருடன் குவின்சியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ள உறவு வளர்ந்தது. இந்த இளைஞர் மெஹந்தி போடும் வேலை பார்ப்பவராம். விஷயம், கணவனுக்கு இது தெரிந்ததும், மனைவியை கண்டித்தார்.. கேட்கவில்லை!!


ஆத்திரம்
  இதனால் வீட்டை காலி செய்து விட்டு வசாய் கிழக்கு, பிரதாப்கட் சொசைட்டியில் வாடகைக்கு வந்து குடியேறினார். ஆனால் கள்ளக்காதலன் சத்விரும் அதே பகுதிக்கு வந்து குடியேறினார். இதனால் தம்பதிக்குள் சண்டை வெடிக்க ஆரம்பித்தது. இப்படித்தான் சம்பவத்தன்றும் சண்டை வந்தது. பிறகு தூங்க போய்விட்டார். ஆனாலும் கள்ளக்காதலை பிரிக்க நினைக்கும் கணவன் மீது ஆத்திரத்திலேயே இருந்த குவின்சியா, கொல்ல முடிவு செய்து.. கள்ளக்காதலனை போன் போட்டு வீட்டுக்கு வர சொன்னார்.


மிளகாய் பொடி 
 தூங்கிக் கொண்டிருந்த பாவிஷ்யாவின் துணிகளை முதலில் கழட்டினர்... கால்கள் இரண்டையும் கட்டினர்... கொதிக்கும் எண்ணெய்யை அவருடைய உடல் மீது ஊற்றினர்... மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவினர்... பிறகு சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்தனர்... உடலில் கரன்ட் ஷாக்கூட கொடுத்தனர்!


போலீஸ் 
 வலி தாங்காமல் பாவிஷ்யா அலறி, கையில் கிடைத்த குக்கர் உள்ளிட்ட பாத்திரங்களை தூக்கி இந்த கள்ளக்காதல் ஜோடி மீது எறிந்தார். ஆனால் அவை இவர்கள் மீது படாமல், ஜன்னல் வழியாக வெளியே போய் விழுந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து, உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.



பாத்ரூம்
 போலீசார் விரைந்து வருவதற்குள் வீடே அமைதியாக இருந்தது. கள்ளக்காதல் ஜோடி அமைதியாக சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் இரண்டும் கதறி அழுதவாறே இருந்தனர். பாவிஷ்யா பாத்ரூமில் வைத்து பூட்டப்பட்டு கிடந்தார். இதையடுத்து கதவை உடைத்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் விழுந்து கிடந்த பாவிஷ்யாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கைது
குழந்தைகளை குவின்சியாவின் சொந்தக்காரர்களிடமும் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த ஜோடியை போலீசார் கைது செய்து,கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாவிஷ்யாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.



Thursday, August 15, 2019

இறுக்கி கட்டி பிடித்து லிப் கிஸ்.. அடுத்த சில நொடிகளில் நேர்ந்த விபரீதம்.. துயரத்தில் முடிந்த இன்பம்

உச்சியில் உள்ள பாலத்தில் காதல் ஜோடி கட்டிப்பிடித்து கொண்டு முத்தம் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது, இருவருமே நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். பெரு நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

 மேபெத் எஸ்பினாஸ் - ஹெக்ட்டா
 

 இவர்கள் இருவரும் தீவிரமான காதலர்கள். பெத்தலஹேம் என்ற 60 அடி உயரமுள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். பாலத்தில் செல்லும்போதே நடுவில் ஒரு இடத்தில் நின்று இருவரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.


அப்பொழுது ஹெக்ட்டார், தனது காதலியை தூக்கி பாலத்தின் தடுப்பு கம்பி மீது ஏற்றி உட்கார வைத்தார். பிறகு இருவருமே ஒரு கட்டத்தில் ஒருத்தருக்கொருவர் லிப் லாக் முத்தம் கொடுத்து கொள்ள ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் காதலி, ஹெக்ட்டாரை தன் காலுக்குள் இழுத்து கொண்டு வந்து வைத்து, உதட்டில் அழுத்தமாக முத்தம் தந்தார்.


அப்போது, இருவரும் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பிறகு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அது தற்போது வைரலாகி வருகிறது.


பிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை

கணவனை பிரிந்து பிரியாவால் வாழவே முடியவில்லை.. அதனால் அவரை அடக்கம் செய்த இடத்துக்கு பக்கத்திலேயே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தை சேர்ந்த தம்பதி முத்துச்செல்வன் - பிரியா. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகிறது. 7 வயது, 4 வயது மற்றும் 2 வயது என்று மொத்தம் 3 மகன்கள் இந்த தம்பதிக்கு உள்ளனர்.



கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் மோதி முத்துச்செல்வன் இறந்துவிட்டார். கணவன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தவர் பிரியா. அவர் இறந்ததில் இருந்தே நிலைகுலைந்து போயிருந்தார். 28 வயதான பிரியா,கூலி வேலைக்கு சென்று, தன்னுடைய 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார்.

ஆனாலும் எவ்வளவு உழைத்தாலும் வருமானம் போதவில்லை. இருப்பினும் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் கணவனின் நினைவு, மற்றொரு பக்கம் வறுமை என்று துவண்டு போய்விட்டார். அழுது அழுது உயிர் வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவெடுத்த பிரியா, நேற்று முன்தினம் 3 குழந்தைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, வெளியே கிளம்பினார்.

எம்.ஆர்.பாளையம் உப்பாற்றங்கரையில்தான் முத்துச்செல்வனை அடக்கம் செய்தனர். அதனால் மயானத்துக்கே சென்ற பிரியா, கணவர் அடக்கம் செய்த இடத்தில் நின்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்
 . இதில் உடலெல்லாம் கருகி அங்கேயே விழுந்து இறந்தார் பிரியா. தகவலறிந்து விரைந்து சென்ற சிறுகனூர் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல் 3 பிஞ்சுகளும் அழுதது ஊர் மக்களை கலங்க வைத்து.

சிறுமிகளை சித்ரவதை செய்து கற்பழித்த ஹாஸ்டல் உரிமையாளர்கள்... மதுரையில் நடந்த கொடுமை!!

12 வயசு குழந்தை உட்பட 4 சிறுமிகளுக்கு தனியார் விடுதியில் பாலியல் தொல்லை தந்த டிரஸ்ட் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கும் சீல் வைத்தனர். 


மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். கருமாத்தூரை சேர்ந்த ஞானபிரகாசம், ஆதிசிவன் ஆகியோர்தான் இந்த காப்பகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிசிவனும் நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி உள்ளனர்.இந்த காப்பகத்தில் தங்கி உள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் அந்த காப்பகத்திற்கு திடீரென சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு தங்கி உள்ள சிறுவர் - சிறுமிகளை நேரில் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது 4 சிறுமிகள் சித்திரவதை செய்து பலவந்தமாக [பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகள் அழுதுகொண்டே இந்த தகவல்களை சண்முகத்திடம் தெரிவித்தனர்.
ஆதிசிவன் பலமுறை அவரது அலுவலகத்தில் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக  தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் பாதிக்கப்பட்ட அந்த 4 சிறுமிகளையும் உடனடியாக மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். மற்ற சிறுவர்-சிறுமிகளும் வேறு வேறு விடுதியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலியல் புகார் குறித்து குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கிரேஸ் ஷோபியாபாய் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகி ஆதிசிவனை கைது செய்தனர்.
மேலும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் விடுதியில் சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் மதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதரவற்ற பெண் குழந்தைகளை பாதுகாப்பதாக சொல்லி வேலியே பயிரை மேய்ந்த கதைபோல சிறுமிகளை தொடர்ந்து மிரட்டி சித்திரவதை பண்ணி பாலியல் பலாத்காரம் செய்த நபரை உரிய விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுதர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாலியல் புகார் காரணமாக சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் ‘சீல்’வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

அரிவாளால் வெட்டிய கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டி அடித்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.




நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவரது மனைவி செந்தாமரை. இவர்களுடைய இரு மகன்கள் மற்றும் மகள் வெளியூர்களில் வசிக்கின்றனர். சண்முகவேலும் செந்தாமரையும் கல்யாணிபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றன
கடந்த 11-ந் தேதி அன்று இரவு 9.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சண்முகவேல் வீட்டுக்கு வந்தனர். அவர்களில் ஒருவன் சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயன்றான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து செந்தாமரை வெளியே ஓடி வந்தார். உடனே கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.


ஆனால் அதைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அந்த வயதான தம்பதியர் நாற்காலிகள், ஸ்டூல், கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி தாக்கினார்கள். அவர்களுடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல், கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். போகும் போது கொள்ளையர்கள் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.


இந்த காட்சிகள் அனைத்தும் சண்முகவேல் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதைப் பார்த்த பலரும், கொள்ளையர்களுடன் போராடி துணிச்சலுடன் விரட்டி அடித்த வயதான வீரத்தம்பதியை வியந்து பாராட்டினார்கள்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று முன்தினம் சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் வீட்டுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து கொள்ளை சம்பவம் குறித்து கேட்டு அறிந்ததோடு, அவர்களுடைய துணிச்சலை பாராட்டினார்.
அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கையில் கிடைப்பதை வைத்து துணிச்சலுடன் செயல்பட மற்றவர்களுக்கு இந்த தம்பதி தூண்டுதலாக இருந்ததால், அவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. எனவே அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிந்துரை கடிதம் எழுதினார்.


இதைத்தொடர்ந்து, சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலை பாராட்டி அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 இதன்படி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது,  சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிச்சலுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

Wednesday, August 14, 2019

பச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா..

தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாததால் அதை ரூ 1000-த்துக்கு விற்பனை செய்ய முயன்ற தாயை போலீஸார் கைது செய்தனர். 
 
வாராங்கல்லில் ஜாங்கான் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜையா. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. ராஜையா எந்த வேலைக்கும் செல்லாததால் கைக் குழந்தையை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சுஜாதா கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுஜாதாவுக்கும் ராஜையாவுக்கும் நேற்று தகராறு நடந்தது.

கூவி ஏலம் 
இதையடுத்து சுஜாதா கணவரிடம் கோபித்து கொண்டு வாராங்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து விடுவதாக கூவி கூவி ஏலமிட்டார்.

விசாரணை  
விசாரணை இதனால் சுஜாதாவின் ஊர்காரர்களும் ஜாங்கான் மாவட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

வாராங்கல்  
அப்போது தனது கணவர் சரியில்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை விற்க முயற்சித்தேன் என்றார். பின்னர் மேலும் விசாரணையில் நான் வாராங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஊருக்கு திரும்ப சிலரிடம் பணம் கேட்டேன்.


போலீஸ் கைது 

அதற்கு அவர்கள் குழந்தை கொடுத்துவிட்டு போ என்றனர் என சுஜாதா தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவரை மீண்டும் சந்திக்க செல்வதாகவும் சுஜாதா தெரிவத்தார். இதுபோல் மாற்றி மாற்றி பேசுவதால் சுஜாதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

காப்பகத்தில் 
குழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தாய் மனநிலை சரியில்லாதவர் போல் பேசுவதால் குழந்தையை அதற்கான காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

1½ வருடம் சினிமாவுக்கு முடக்கு; நடிகை சமந்தா கர்ப்பம்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன.




மெர்சல், தெறி, அஞ்சான், இரும்புத்திரை, யூடர்ன், நடிகையர் திலகம், தங்க மகன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்டவை சமந்தா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.

தெலுங்கில் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஓ பேபி’ படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் நடித்து வருகிறார்.


சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட் குறையவில்லை. இந்தநிலையில் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்க முடிவு செய்துள்ளார்.

1½ வருடங்கள் புதிய படங்கள் எதிலும் நடிக்க மாட்டேன் என்று தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவர் கூறிவிட்டாராம். கைவசம் உள்ள 96 படத்தை விரைவாக முடித்து விட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.

சன்னி லியோனோனுக்கும் மோடிக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னனு தெரியுமா?

கூகுள் தேடுதல் பட்டியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர் பிரபலம் நடிகை சன்னி லியோன் தான் என கூகுள் அறிவித்துள்ளது.



பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இந்தியாமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக சன்னி லியோன் நீடித்து வருகிறார்.

 இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் சன்னி லியோன் தான் டாப்பில் இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான்,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விடவும்



 சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம் பேர் சன்னி லியோனைத்தான் தேடி இருக்காங்களாம். பெரும்பாலானோர் சன்னி லியோன் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத்தான் விரும்பி பார்த்துள்ளார்களாம். மேலும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் கூகுளில் விரும்பி பார்த் உள்ளார்களாம்மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சன்னிலியோனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேடியிருக்காங்க என்று கூகுள் சொல்லியிருக்கிறது.

 அதிலும் . குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதுபற்றி அறிந்து நடிகை சன்னி லியோன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த பெருமைக்கு தன்னுடைய ரசிகர்கள்தான் காரணம் என்கிறார்.



Monday, August 12, 2019

டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்களுக்கு வேலை : கடைசிநாள் 21-8-2019-ந் தேதியாகும்.

இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனம் சுருக்கமாக பி.டி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 

மொத்தம் 391 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
 என்ஜினீயர் பணிக்கு கிரேடு-1 தரத்தில் 61 பேரும், கிரேடு-2 பணிக்கு 171 பேரும், கிரேடு-3 பணிக்கு 109 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர் பணிக்கு 37 பேரும், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் பணிக்கு 13 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு என்ஜினீயர் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.400 கட்டணம் செலுத்த வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 21-8-2019-ந் தேதியாகும்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!


வாகனம் இல்லையென்றாலும் அதற்கான பேன்சி எண்ணை முன்கூட்டியே வாங்கும் வகையிலான புதிய அறிவிப்பை ஆர்டிஓ அலுவலகம் வெளியிட்டுள்ளது



ஒரு வாகனம் சாலையில் இயங்க எந்த அளவிற்கு எரிபொருள் தேவையோ... அதே அளவிற்கு, அதனை சாலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பதிவெண் முக்கியமாக இருக்கின்றது. இது ஒவ்வொரு வாகனத்திலும் தனித் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.


அந்தவகையில் இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு மோட்டார் வாகனங்களுக்கும், அவற்றை எளிதில் அடையாளம் காணும் வகையில் நம்பர் பிளேட் வழங்கப்படுகின்றது. இந்த பணியினை அந்தந்த மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மிக முக்கியமாக வாகனங்களை இனங்காண்பதில் உள்ள சிக்கல்களை குறைக்கவே இந்த முறை கையாளப்பட்டு வருகின்றது. இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். அவை பல்வேறு நுணுக்கங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அந்தந்த மாநிலத்தை குறிக்கும் வகையில் முதல் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, தமிழகத்திற்கு TN என்றும் கேரளாவிற்கு KL எனவும் வழங்கப்படுகின்றது.


இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட ஆர்டிஓ-வின் அலுவலக எண் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக TN 01, TN 05 இம்மாதிரியான எண் இடம்பெறும். இதையடுத்தே வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண் ஆங்கில எழுத்துகளை (A,B,C,D) அடுத்து நம்பரில் வழங்கப்படும். உதாரணாக, TN 01 AA 1111 என வழங்கப்படும்.


இவ்வாறு நாட்டில் இயங்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் பிரத்யேகமாக, அதை இனம் கண்டறியும் வகையில் பதிவெண்கள் வழங்கப்படுகின்றது. இது, வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவம், வாகன திருட்டு, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய இது உதவும்.


அதேசமயம், பலர் தங்களது வாகனங்களை, எளிதில் மறக்கமுடியாத மற்றும் கண்ட உடன் கண்களை கவரும் வகையிலான பேன்சி எண்களால் அலங்கரிக்க விரும்புகின்றனர். இந்த கலாச்சாரம் அண்மைக் காலங்களாக அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆகையால் பேன்சி எண்மீதான மோகத்தைத் தீர்க்கும் வகையில், ஆன்லைனில் பேன்சி எண்களை விற்பனைச் செய்ய ஆர்டிஓ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இது நம் தமிழகத்தில் இல்லை எண்பதுதான் வேதனையளிக்கும் உரியது.


பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறைதான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இந்த நடவடிக்கையினால், பேன்சி எண் ஆர்வலர்கள் ஏலம் எடுக்க ஆர்டிஓ அலவலகங்களை நாட வேண்டும் என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. பேன்சி எண்ணிற்கான விற்பனை இனி ஆன்லைனில் விட இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பாணையைதான் பிஹார் போக்குவரத்துத்துறை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. இந்த ஏலமானது, ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 1 லட்சம் வரை விடப்பட உள்ளது. இதற்கான கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆர்டிஓ அலுவலகம் என எங்குவேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாகனங்களுக்கு ஆடம்பரமான எண்களை ஒதுக்குவதற்கான புதிய முறைக்கு அம்மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 646 கவர்ச்சிகரமான எண்கள் சலுகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.


பொதுவாக, பிறந்ததேதி, கல்யாண நாள் மற்றும் ராசி எண் என்றுதான் பலர் பேன்சி எண்களை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு, ஒரே எண்ணை இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்தால், அவர்களுக்கு இ-ஏலம் விடப்பட உள்ளது. இந்த இ-ஏலத்திற்காக ரூ. 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை ஆர்டிஓ அலுவகம் திருப்பி தராது.


இந்த இ-ஏலத்தில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவருக்கே அந்த பேன்சி எண் வழங்கப்படும். மேலும், அதிக தொகையில் ஏலம் எடுத்தவர், ஏழு நாட்களுக்குள் வங்கி வரைவோலை அல்லது இணையதளம் மூலமாக பணத்தை செலுத்த வேண்டும். இதில், தவறினால் பேன்சி மீண்டும் ஏலத்திற்கு சென்றுவிடும்.


அதேபோன்று, ஏலத்தில் எடுக்கப்பட்ட எண்ணை 90 நாட்களுக்குள் வாகனத்துடன் பதிவு செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்த எண் காலாவதியாகிவிடும் எனவும் கூறப்படுகின்றது. அதேசமயம், ஏல தொகையும் திருப்பு தரப்படமாட்டாது என்ற நிபந்தனையையும் ஆர்டிஓ முன்வைத்துள்ளது.
இத்துடன், தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கான வெவ்வேறு அடிப்படை விகிதங்கள் போக்குவரத்துத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்..

12 வயசு குழந்தை உட்பட 4 சிறுமிகளுக்கு தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை தந்த டிரஸ்ட் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கும் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது!




மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். 


 கருமாத்தூரை சேர்ந்த ஞானபிரகாசம், ஆதிசிவன் ஆகியோர்தான் இந்த காப்பகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிசிவனுக்கு வயசு 41 ஆகிறது.


காப்பகங்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திடீர் ஆய்வு

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், சம்பந்தப்பட்ட காப்பகத்திற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு நடத்தினார். அங்கு தங்கி இருக்கும் குழந்தைகளை அழைத்து நேரடியாகவே விசாரணை நடத்தினார்


கதறி அழுதனர்

அப்போது சிறுமிகள் கதறி கதறி அழ ஆரம்பித்தனர். இதில், 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கெல்லாம் காரணம், ஆதிசிவன்தான் என்றும், அவர்தான் ஆபீசில் வைத்து தங்களை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் சிறுமிகள் கண்ணீருடன் கூறினார்கள். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக ஆதிசிவன் மிரட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.


காப்பகங்கள் 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.


பரபரப்பு 

மேலும் 4 சிறுமிகளுக்கு இழைத்த அநீதி குறித்து, சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் எடுக்கவும், போலீசார் விசாரணை நடத்தி ஆதிசிவனை போக்சோவில் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டதுடன், காப்பகத்தின் இன்னொரு நிர்வாகியான ஞானபிரகாசிடம் விசாரணை நடந்து வருகிறது. காப்பகத்தில் சிறுமிகள் நாசம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


வேலை வாய்ப்பு : ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5 செப்டம்பர் 2019


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 130 உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் :  
மத்திய கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம் 
மேலாண்மை :  
தமிழக அரசு பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் :  130
வயது வரம்பு :
 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


கல்வித் தகுதி :  
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் : கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :
கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 பணியிடம்
காஞ்சிபுரம் ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.ரூ.47,500 வரையில் விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.kpmdrb.in என்னும் இணையதள முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
5 செப்டம்பர் 2019 


விண்ணப்பக் கட்டணம் :  
250 ரூபாய்

 


 தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :
13 அக்டோபர் 2019, மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரையில் 
விண்ணப்பதாரர்களில் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும். அவர்களுடைய விபரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும், காஞ்சிபுரத்தில் தேர்வு முகாம் குறித்த விபரம் மின்னஞ்சல் வழியாக அறிவிக்கப்படும்.

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். 
 
விஜயவாடா அருகே சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தம்பதி மணி கிராந்தி - பிரதீப். இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதனால் மணிகிராந்தியிடம் விவாகரத்து கேட்டு பிரதீப் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். அதனால் இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது.

சரமாரி கொலை 
இந்நிலையில், நேற்று மதியம் மணி கிராந்தி வீட்டுக்கு பிரதீப் வந்திருந்தார். விவாகரத்து சம்பந்தமாக பேச வேண்டும் என்று சொன்னார். அதனால் அவரிடம் மனைவியும் பேச முன்வந்தார். அப்போது, பிரதீப், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் மணி கிராந்தி அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.
கையில் தலை பின்னர் வெட்டிய தலையை எடுத்து கொண்டு பிரதீப் தெருவில் நடந்து சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் பிரதீப் நடந்து செல்வதை பார்த்து தெருமக்கள் எல்லாம் அலறி அடித்து கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள்.

விசாரணை 
கையில் தலையுடன் அருகில் இருந்த சத்யநாராயணபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பிரதீப் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார், விரைந்து வந்து வெறும் முண்டத்துடன் கிடந்த மணி கிராந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பு 
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. அந்த காட்சியில் கொலையாளி தலையுடன் ஆவேசமாக ஸ்டேஷனுக்கு சரணடைய வருவது பதிவாகி இருந்தது. ஸ்ரீநகர் என்றும் நகரின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில், மனைவியின் தலையை வெட்டி கணவன் கொண்டு போன சம்பவம் விஜயவாடாவில் பெரிய பரபரபப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.